100 சிறுவர் கதைகள்

100 சிறுவர் கதைகள், வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், கற்பகவித்யா பதிப்பகம், விலைரூ.340 சிறுவர்களுக்கு நல்லறம் போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பண்பாட்டை உயர்த்தும் வண்ணம், 100 கதைகள் உள்ளன. புகழ் பெற்ற வானொலி நிகழ்ச்சிகளை வழங்கிய வானொலி அண்ணா எழுதியவை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. முதல் கதையே, ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற தலைப்பில் அமைந்து உள்ளது. அனைத்து கதைகளும் நேரடியாக கேட்பது போன்ற தொனியில் எழுதப்பட்டுள்ளன. மிகவும் எளிய மொழி நடையில் சொல்லப்பட்டுள்ளன. உழைப்பு, அறத்துடன் வாழ்தல் போன்றவற்றின் மேன்மையை பறை சாற்றுவதாக கதைகள் […]

Read more

திருக்குறள் கதைகள் – 1

திருக்குறள் கதைகள் – 1, பேராசிரியர் ஏ.சோதி, நன்மொழி பதிப்பகம், விலைரூ.140. சிறுவர் – சிறுமியருக்கு அறிவுரை கூறும் வகையில் படைக்கப்பட்டுள்ள படக்கதைகளின் தொகுப்பு நுால். இரண்டு புத்தகங்களாக உள்ளன. திருக்குறள்களின் முதலடியை தலைப்பாக கொண்டு படைக்கப்பட்டுள்ளன. கதையின் இறுதியில் முழு குறளும் தரப்பட்டுள்ளது. புரியும் வகையிலான மொழி நடை கவரும் வண்ணம் உள்ளன. வண்ணப் படங்களுடன், உரையாடல்கள் மென்மையாக அமைந்துள்ளன. குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தை துாண்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். உயர்ந்த தாளில் தரமாக அச்சிடப்பட்டுள்ளது. தமிழில் அறக்கருத்தைப் பரப்ப, முயன்று உருவாக்கப்பட்டுள்ளது. […]

Read more

சிறுவர் கதைப் பாடல்கள்

சிறுவர் கதைப் பாடல்கள், கிருங்கை சேதுபதி, சாகித்ய அகடமி, விலைரூ.230 ஆடிப் பாடும் சிறுவர்களுக்கு கதை கேட்பது கொண்டாட்டமாய் இருக்கும். அதுவும் பாடல் வழியே கதை சொல்லத் தொடங்கினால் சேர்ந்து பாடுவர். குழந்தைக் கவிஞர்களின், பல்சுவை கதைப் பாடல்கள் தீபாவளியின் தினுசு தினுசு பட்சணங்களாய் இந்த நுாலில் தரப்பட்டு உள்ளன. பல்சுவையுடன் சுவைத்து மகிழலாம். எலி, பூனை, சிங்கம், முயல், ஆமை, பாம்பு, யானை போன்ற விலங்குகளும், கொசு, கோழி, காக்கை, குருவி, மயில், மைனா போன்ற பறவைகளும், கடவுளும் கதைகளில் வந்து கவர்கின்றன. […]

Read more

உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75

உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75, கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலைரூ.230 குழந்தைகளுக்கான வீர, தீர கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். தமிழ் பேராய விருது பெற்றது. படுக்கையறையில் குழந்தைகளை குதுாகலமூட்ட, சொல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாட்டி வடை சுட்ட கதையில் துவங்கி, அரசரும் பன்றியும் என்ற குறுங்கதையுடன் முடிகிறது. ஏற்கனவே கேட்ட கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் பேராய விருது பெற்று நுாலாக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 25/10/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000006539_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

நீதிக் கதைகள்

நீதிக் கதைகள்,  சுவாமி கமலாத்மானந்தர், வெளியீடு: ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், விலை ரூ.70. இந்நுாலில், ‘10 ரூபாய் பெறாத சிலை ஒன்றை, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய கலைப்பொருள் ஆர்வலர் முட்டாள்’ என்று நினைத்துக் கொண்டார் உழவன். ‘விலை மதிக்க முடியாத இந்த செப்புச் சிலையை வெறும், 10 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்த உழவன் முட்டாள்’ என்று நினைத்துக் கொண்டார் கலைப்பொருள் ஆர்வலர் என, ஒரு கதை தெரிவிக்கிறது. இரு வேறு மனநிலையை சிறுவர்களின் மனதில் பதிய வைக்கும் வகையில், இந்த கதை […]

Read more

நன்மைகளின் கருவூலம்

நன்மைகளின் கருவூலம், பிரியசகி, ஜோசப் ஜெயராஜ், பாரதி புத்தகாலயம், விலை 150ரூ. வாழ்வில் வெற்றி பெறும் வகையில் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது? பதின்பருவத்தினர் சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்கள் எப்படி மேற்கொள்வது? அந்தப் பருவத்தில் அவர்களுடன் பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது உள்பட பயனுள்ள பல தகவல்களை இந்த நூல் தருகிறது. வாழ்வியலுக்குத் தேவையான ஆலோசனைகளை அறிவுரை போல அல்லாமல் கதையைச் சொல்லும் வித்தில் அவற்றைத் தந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதில் உள்ள கருத்துகள் சார்ந்த நல்ல கவிதையைத் தேர்ந்தெடுத்துக் […]

Read more

பாம்பு இல்லாத பாம்பாட்டி

பாம்பு இல்லாத பாம்பாட்டி, ஸாய் விட்டேகர், அ.குமரேசன், புக்ஸ் பார் சில்ட்ரன், பக்.32, விலை 30ரூ. படிக்கத் தெரியாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு, கதை கேட்பது மிகவும் பிடித்தமானது. வாசிக்கத் தெரியும் போது, அவர்களை வசீகரிக்கக்கூடியது படக்கதைகள். அந்த வகையில், இந்த ஊர்வன பற்றிய காட்டின் கதை, அவர்களை கவரும். ஒற்றுமை உணர்வையும் வளர்க்கும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

முல்லாவின் குறும்புக் கதைகள்

முல்லாவின் குறும்புக் கதைகள், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 160ரூ. அறிவுரை மற்றும் நீதிகள் அடங்கிய முல்லாவின் கதைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப் பெற்று, கதைக் களஞ்சியங்களில் விருந்தாகவும், சாலச் சிறந்த கருத்துள்ளவையாகவும் இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றன. ஆணவம் கொண்டுள்ளோரை மனம் திருந்தச் செய்வதும், பேராசை கொண்டோருக்கு நல்லதொரு புத்தியை புகட்டுவதுமாக பல்வேறு கோணங்களில் அமைந்துள்ள முல்லாவின் கதைகள், அனைவரும் ரசிக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள அற்புத நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர், […]

Read more

குட்டிஇளவசரன்

குட்டிஇளவசரன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, (தமிழில்: ச. மதனகல்யாணி, வெ. ஸ்ரீராம்), க்ரியா வெளியீடு இரண்டாம் உலகப் போரில் விமானியாகச் செயல்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியர், மனித உலகின் அழியாத அடிப்படை குணாம்சங்களையும் அன்பின் ஆற்றலையும் கவனப்படுத்தி எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல். நன்றி: தமிழ் இந்து, 27/11/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சிறுவர் நாடோடிக் கதைகள்

சிறுவர் நாடோடிக் கதைகள், கி. ராஜநாராயணன், அன்னம்-அகரம், கரிசல் பகுதி எழுத்துக்கு அடையாளம் தந்த மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என அழைக்கப்படும் கி.ரா., மக்களின் சொல்வழக்கில் இருந்த பல கதைகளை ஆவணப்படுத்தியுள்ளார். அவர் தொகுத்து எழுதிய சிறார் நாடோடிக் கதைகளின் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து, 27/11/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 15