சிடுகா மருத்துவம்

சிடுகா மருத்துவம், டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.250 சித்த மருத்துவத்தில் ஓரிரு மூலிகைகளைப் பயன்படுத்தி, நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிடுகா மருத்துவமுறைகள் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு நோயையும் தலைப்பாகத் தந்து, நோய்களுக்கு மருந்து உருவாக்கிப் பயன் கொள்ளும் செயல்முறைகளைத் தந்து, நோய்களுக்கான காரணங்களும், பல நோய்களுக்கு மூலிகை சார்ந்த எண்ணெய்களின் பயன்களும் விளக்கப்பட்டுள்ளன. பல்வேறு மருத்துவ முறைகளில் அன்றாட வாழ்வில் நுகரும் அரிய கனிகள், கீரைகள், கிழங்குகள் மற்றும் மூலிகைகளின் அளப்பரிய பங்கை அறிய முடிகிறது.மிகவும் பரவலாக மக்கள் பாதிக்கப்படும் […]

Read more

சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவம்

சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவம், கானமஞ்சரி சம்பத்குமார், திருவரசு புத்தக நிலையம், பக். 824, விலை 450ரூ. காய்கறிகள், பழங்கள், மலர்கள், எண்ணெய் போன்றவற்றின் தனித்தனி மருத்துவ குணம் குறித்தும், பல்வேறு நோய்களுக்கு சித்தர்கள் கூறியுள்ள மருத்துவ முறைகளையும் விளக்கி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையான தகவல்களோடு, மூலிகைகளின் படங்களும் இடம்பெற்றுள்ளன. ‘லங்கணம் பரம அவுஷதம்’ என உண்ணா விரதம் குறித்தும், நான்கு வகை மருத்துவ மூறைகளையும், காயகல்ப முறையையும் கூறியுள்ளது. பயனுள்ள தொகுப்பு. -பின்னலூரான். நன்றி: தினமலர், 10/1/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031026_/ […]

Read more

லயம்

லயம்,  க.மணி; அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.100, விலை  ரூ.100. நேரத்துக்குப் பசிப்பது, தூக்கம் வருவது எல்லாமே உடல் குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதையே காட்டுகிறது. இந்த குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளையே லயம் என்கிறார் நூலாசிரியர். வேலை காரணமாகவோ, இதர காரணங்களினாலோ நாம் தூங்க வேண்டிய நேரத்தில் தூங்குவதில்லை; உண்ண வேண்டிய நேரத்தில் உண்பதில்லை. இது பல்வேறு உடல் நல, மன நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. உடலின் குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு எப்படி வாழ வேண்டும்? என்பதை நூல் விளக்குகிறது. நன்றாகத் தூங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? […]

Read more

 இப்படியும் மனிதர்கள்

 இப்படியும் மனிதர்கள்,  சீ.சந்திரசேகரன், தொகுப்பாசிரியர்: ந.க.மங்களமுருகேசன், பகவதி பதிப்பகம்,  பக்.160, விலை ரூ.100;  உளவியல் மருத்துவ நிபுணரான நூலாசிரியர் தனது 40 ஆண்டு கால அனுபவங்களின் அடிப்படையில் இந்நூலை எழுதியிருக்கிறார். தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பலதரப்பட்ட நோயாளிகளின் பிரச்னைகளைக் கேட்டு, அவற்றுக்கு அவர் அளித்த சிகிச்சைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். உளவியல் மருத்துவர் என்பதால், அவர் விவரிக்கும் சம்பவங்கள் கதைகளைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. எனினும் மருத்துவரீதியான பல அரிய தகவல்கள், உண்மைகள் நூல் முழுவதும் உள்ளன. மனித வாழ்வில் இவ்வளவு மனநலப் பிரச்னைகளா? […]

Read more

பழ மருத்துவம்

பழ மருத்துவம், வீ.செந்தில்குமார், கோரல் பதிப்பகம், விலைரூ.100 கனிகளில் அடங்கியுள்ள சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் பற்றிய விபரங்கள் என்ற முகப்புடன் வெளிவந்துள்ள நுால். உணவே மருந்து என்ற தத்துவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.நுாலில், 36 கட்டுரைகள் உள்ளன. பழங்களின் பயன்பாடு, அவற்றில் உள்ள நுண் சத்துக்கள் விபரம், உடலுக்கு அவை தரும் ஆற்றல் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. உணவில் கவனம் கொள்பவர்களுக்கு உதவும். நன்றி: தினமலர், 1/11/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்

உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள், பி.சி.கணேசன், நர்மதா பதிப்பகம், விலைரூ.80 நோயின்றி வாழ வழியும், நோய் வந்தால் நீக்க எளிய வழிமுறைகளும் கூறப்பட்டு உள்ளன. மனித உடல் ஓர் இயற்கை அற்புதம் என்று துவங்கி, 14 தலைப்புகளில் பயனுள்ள கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் உடலுக்கு உள்ள தொடர்பை அழகாகக் கூறியுள்ளார். உடலில் ஆறு நரம்பு மையங்களை, ஏழு பிரிவுகளாக கூறப்பட்டுள்ளது. அக்கு பங்சர், அக்குபிரஷருக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கூறுகிறது. […]

Read more

வைசூரி நோய் மருத்துவம்

வைசூரி நோய் மருத்துவம்,  எஸ்.சிதம்பர தாணுப் பிள்ளை, சித்தா மெடிக்கல் லிட்டரேச்சர் ரி சர்ச் சென்டர், விலைரூ.350 மனித இனத்தையும், பருவ காலங்களையும் இயற்கையிலிருந்து பிரிக்க முடியாது. பருவ கால மாற்றங்கள், மனித நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியற்ற மக்களைப் பலவகையிலும் வாட்டி வதைப்பது வைசூரி நோய். அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என, விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. 64 வகை வைசூரி நோய்கள் விளக்கப்பட்டுள்ளன. வைசூரிக்கான காரணம் துவங்கி, நோயின் தன்மை, அறிகுறி, வீரிய விளைவு, பின் விளைவு, மருத்துவ […]

Read more

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்,  எஸ்.குருபாதம்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.500, விலை ரூ.450.  குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதை இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளிடம் எதிர்மறையாக […]

Read more

நான் தான் கொவிட் 19

நான் தான் கொவிட் 19, பேராசிரியர் ப.க.பொன்னுசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 64, விலை 70ரூ. இது நடந்தது, 1960களில். சளியின் நீர்மத் துகள்களை மூன்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அவை ஒளிரும் வைர கிரீடம் போல மின்னியது. ஆய்வு முடிவில், 1965ல் கொரோனா என்ற பெயரை சூட்டினர். அப்போதிருந்து கொரோனா தொடர்கிறது என்ற ஆய்வை நம் முன் வைக்கிறார் பேராசிரியர் பொன்னுசாமி. இது முழுக்க அறிவியல் விளையாட்டு… மூலக்கூறு, புரதங்களின் தன்மையை புரிந்து கொண்டால் இந்த உண்மை விளங்கும். வைரஸ் தானாக […]

Read more

சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா விடை தொகுப்பு நூல்

சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா விடை தொகுப்பு நூல், டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, பக். 1560, விலை 1500ரூ. மருத்துவத் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு உதவும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். கேள்வி – பதில் தொகுப்பாக உள்ளது. மத்திய, மாநில அரசு பணிகளில் சேர தேர்வு எழுதுவோருக்கும் உதவும். சுலபமாக பயன்படுத்த வசதியாக மூன்று புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்ந்த மருத்துவக் குழு தயாரித்துள்ளது. சித்த மருத்துவம் தொடர்பான துல்லிய விபரங்கள், கேள்வி – பதில் வடிவில் உள்ளது. தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் […]

Read more
1 2 3 30