ஆதார் கார்டு A to Z

ஆதார் கார்டு A to Z, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 230ரூ. இந்திய மக்களின் ஆதாரத்திற்கான அடையாளமாக இருக்கும், ‘ஆதார்’ அடையாள அட்டை பற்றி, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எளிமை தமிழிலும், விளக்கங்களை ஆங்கிலத்திலும் தந்துள்ளார், இதன் ஆசிரியர். ஆதார் அடையாள எண் பெறுவது எப்படி என்பது துவங்கி, ‘ஆன்லைன்’ மற்றும் அலுவலகத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது எப்படி என்பது வரை விபரமாக குறிப்பிட்டு உள்ளார். ஆதார் மையங்கள் எங்கெங்கு உள்ளன; தொலைந்து போனால் மீண்டும் பெறுவது எப்படி […]

Read more

உலகத் தமிழ்க் களஞ்சியம்

உலகத் தமிழ்க் களஞ்சியம், (3 தொகுதிகள்), உமா பதிப்பக வெளியீடு, விலை: ரூ.3,000 தமிழ், தமிழர்களை முதன்மைப்படுத்தி தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம், ஆளுமை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கும் கலைக்களஞ்சியம் இது. 900 இலக்கணக் குறிப்புகள், 700 தாவரங்களைப் பற்றிய குறிப்புகள், 100 ஆறுகளைப் பற்றிய விவரங்கள், 800 இதழ்களைப் பற்றிய குறிப்புகள் என 39 பிரிவுகளில் 16,000-க்கும் மேற்பட்ட செய்திகளை உள்ளடக்கியிருக்கும் இந்நூல் 2,500 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 22-1-2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027683.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

சாதனையாளர்கள்

சாதனையாளர்கள், சி.வீராகு, சத்யா பதிப்பகம், பக். 178, விலை 100ரூ. உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றனர். ஆனால், மக்கள் மனதில் நிலைத்திருக்கும் சாதனையாளராகத் திகழ்பவர்கள் ஒரு சிலரே. அந்தச் சாதனையாளர்களைப் பற்றிய தொகுப்பே இந்நுால். சாதனையாளர்களை துறை அடிப்படையில், அறிவியல், சட்டம், இயல், இசை, நாடகம், வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள், புரட்சியாளர்கள், நீச்சல், மனிதாபிமானம், சிந்தனையாளர் எனப் பகுத்து எளிமையாகவும், அழகாகவும், அவர்களின் சாதனைகளை எடுத்துரைக்கிறது இந்நுால். ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும், தலைவராகவும் திகழ்ந்த அப்துல் கலாமில் துவங்கி, கிரேக்க நாட்டு பிளேட்டோவில் முடிகிறது […]

Read more

குறுந்தொகை மூலமும் உரையும்

குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, விலை: ரூ.500 தமிழர்கள் பண்பாட்டின் முக்கியமான விளைச்சல் குறுந்தொகை. அந்த நூலை 1937-ல் உ.வே.சாமி நாதையர் பதிப்பித்தார். அதற்கான காலத்துக்கேற்ற செம்பதிப்பை சமீபத்தில் உ.வே.சா. நூல் நிலையம் கொண்டுவந்திருக்கிறது. காதலைப் பாடும் சங்கப் பாடல்கள் ஊடாக, தமிழரின் வாழ்க்கை முறையையும் இந்த நூலில் உணர முடிகிறது. குறிப்பாக, இலக்கியத்தோடும் வாழ்க்கையோடும் இயற்கை எந்த அளவுக்கு ஊடாடுகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000014578.html இந்தப் […]

Read more

கேள்வி நேரம்

கேள்வி நேரம், ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.110 இது பொது அறிவுக் கேள்வி – பதில் புத்தகம் என்பதைத் தாண்டி, இந்தத் தகவல்களின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான அம்சங்களும் பதில்களில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. வெறும் தகவல்களாக மட்டும் அல்லாமல், அறிவை விரிவாக்கிக்கொள்ளவும் இந்தப் புத்தகம் உதவும். நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிரமிள் படைப்புகள்

பிரமிள் படைப்புகள், (6 தொகுதிகள்), லயம் – பிரமிள் அறக்கட்டளை வெளியீடு, மொத்த விலை: ரூ.3,400 படைப்பூக்கம், விமர்சனம் இரண்டிலும் தமிழில் உச்சம் தொட்ட மேதைகளுள் ஒருவர் பிரமிள். கவிதைகள், கதைகள், நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள், பேட்டிகள், உரையாடல்கள், தமிழாக்கங்கள் என பிரமிளின் பங்களிப்புகள் முழுவதையும் ஆறு தொகுதிகளாகத் தொகுத்திருந்தார் கால சுப்ரமணியம். இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய தொகுப்புகள் இவை. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000002243.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

சிற்பியின் படைப்புத்தளம்

சிற்பியின் படைப்புத்தளம், தே.ஞானசேகரன், காவ்யா, விலை 450ரூ. இலக்கியம் காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது’ என்று சொல்வர். உருவத்திலும், உணர்விலும், உள்ளடக்கத்திலும் அது எத்தனையோ மாற்றங்களைக் கடந்து வந்திருக்கிறது. அந்த வகையில் கவிதைகளால் தன்னை புதுப்பித்துக் கொண்ட கவிஞர் சிற்பி குறித்து, முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் வெளிவந்திருக்கிறது சிற்பியின் படைப்புக்கலை நுால். ஒரு சிறந்த கவிஞனின் அனைத்து பரிமாணங்களும் இலக்கிய உலகிற்கு முறையாக சொல்லப்படவேண்டும் என்ற முயற்சியின் பலன் தான் இந்தப் புத்தகம். சிற்பி படைத்த ‘உத்திகள்’ குறித்தான பாலாவின் […]

Read more

நானும் என் சூரியனும்

நானும் என் சூரியனும்,  சுப்ர.பாலன், வானதி பதிப்பகம்,  பக்.168, விலை ரூ.150. புலர் காலை நேரத்தில் வானம் பார்க்கும் வழக்கம் பல ஆண்டுகளாய் உள்ள நூலாசிரியரின் உரைநடைக் கவிதை நூல். 2019 மே 11- ஆம் தேதி தொடங்கி 2019 ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரையிலான பதிவுகள் இதில் இடம் பெற்றுள்ளன. சென்னை, வேலூர், பெங்களூரு, திருச்சி மட்டுமல்ல பாரீஸ் உள்ளிட்ட நகரங்களிலும் சூரிய தரிசனம் கண்டுள்ளார் நூலாசிரியர். எங்கேயும் ஒரே சூரியன்தான் என்றாலும் அவரது அனுபவங்கள் நாளும் நாளும் புதியன. காலை நேரத்து […]

Read more

சங்கமி

சங்கமி : பெண்ணிய உரையாடல்கள் – தொகுப்பாசிரியர்கள்,  ஊடறு றஞ்சி, புதியமாதவி, காவ்யா, பக்.372, விலை ரூ.400. பெண்கள் சமூகத்தாலும் கூடவே ஆணாதிக்கத்தாலும் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் பெண்ணியச் சிந்தனைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. சமகாலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் மாறுபடுகின்றன. அதையொட்டி பெண்ணியச் சிந்தனைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இலங்கையில் இனப் போராட்டத்தின்போது ஆயுதம் தாங்கிப் போராடிய பெண்கள், ராணுவத்தால் பாலுறவுத் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், ஆப்கானிஸ்தானத்தில் அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளின் தாக்குதலினால் இடம்பெயர்ந்து வேறுநாடுகளில் சென்று வாழும் பெண்கள், சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் […]

Read more

நக்கீரன் இயர்புக் 2019

நக்கீரன் இயர்புக் 2019, நக்கீரன் பதிப்பகம், விலை 160ரூ. சமூக அர்ப்பணிப்பு உணர்வு மட்டுமல்லாமல், அறிவுக் கடலில் முத்தெடுக்கும் இதழாக மலர்ந்து மணம் வீசும் நக்கீரனுக்கு, சிகரத்தைத் தொடுமளவிற்கு சிறப்பு சேர்க்கிறது இந்நுால். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது போல தற்கால நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், விருதுகள், விளையாட்டுகள், உலகச் செய்திகள் உள்ளிட்ட அரிய தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் இந்நுால் என்றால் மிகையாகாது. பொது அறிவு உலகமாகிய இந்நுால், எக்காலத்திலும் மாணவச் செல்வங்களுக்கு பயன் தரும் வகையில் வாழையடி வாழையாக அமைந்துள்ள […]

Read more
1 5 6 7 8 9 63