அழகிய வாழ்வுக்கு1330

அழகிய வாழ்வுக்கு1330, மெய்ஞானி பிரபாகர், குறளகம், விலை 170ரூ. பொய்யாமொழி புலவர் இயற்றிய மறை நுால் அதிகார வரிசையே இந்நுாலிலும் பின்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் மூலக் குறளுடன் பொருந்தும் பொன்மொழியே தரப்பட்டுள்ளது. திருக்குறளின் அந்தந்த அதிகாரங்கள் மற்றும் குறள்களோடு பொருந்திப் படிக்க உதவும் பொக்கிஷம், ‘குறள்நெறி சார்ந்த பொன்மொழி கள்’ அடங்கிய நுால் என்று சொல்லலாம். நன்றி: தினமலர் இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

ஜீவா பார்வையில் கலை இலக்கியம்

ஜீவா பார்வையில் கலை இலக்கியம், கே.ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. தமிழகப் பொதுவுடமை இயக்கத்தின் தலைவர்களில் முக்கியமானவராக இருந்த ப.ஜீவானந்தம், பிற பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் இருந்து வித்யாசமானவர். கலை, இலக்கியம் தொடர்பாக அவர் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் இலக்கியம் பற்றி பேசாத, கவனத்தில் கொள்ளாத காலத்தில் கம்பனில் காணப்படும் ஜனநாயகக் கருத்துகளை, பொதுவுடமைக் கருத்துகளைப் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி எல்லாம் ஜீவா பேசியிருக்கிறார்; எழுதியிருக்கிறார். அவை தொடர்பான […]

Read more

அருந்தவப்பன்றி

அருந்தவப்பன்றி, பாரதி கிருஷ்ணகுமார், சப்னா புக் ஹவுஸ், விலை 140ரூ. மகாகவி பாரதியாரை அருந்தவப்பன்றி என்ற அடைமொழியுடன் அழைக்கும் இந்தப் புத்தகத்தின் தலைப்பு, சிலருக்கு வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் அந்தச் சொல், தன்னைப் பற்றி பாரதியாரே கூறிய சொல் என்பதை இந்த நூல் மூலம் அறியும் போது வியப்பாக இருக்கிறது. பாரதியார் சில காலம் கவிதைகள் ஏதும் எழுதாமல் மிகுந்த துயரத்தில் வாழ்ந்து வந்தார். அவருடன் இருந்த கவிதை தேவி அவரை விட்டுப் பிரிந்ததாகவும், சில ஆண்டுகள் கழித்து கவிதை தேவி தன்னை அடைந்த […]

Read more

சட்டப்பேரவையில் எம்.கல்யாணசுந்தரம்

சட்டப்பேரவையில் எம்.கல்யாணசுந்தரம்,தொகுப்பாசிரியர்: கே.ஜீவபாரதி, சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், தொகுதி 1, பக்.296, விலை ரூ.190, தொகுதி 2; பக்.720; விலை ரூ.450. பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கல்யாணசுந்தரம் சட்டமன்றத்தில் 1952 முதல் 1956 வரை ஆற்றிய உரைகள் முதல் தொகுதியாகவும், 1957 முதல் 1961 வரை ஆற்றிய உரைகள் இரண்டாவது தொகுதியாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள், அரசுப் பணியாளர்கள் என அனைவரின் பிரச்னைகளும், சாலை வசதி,தண்ணீர்ப் பிரச்னை, மருத்துவவசதி, விவசாயம், கல்வி, மொழிப் பிரச்னை என அனைத்தும் […]

Read more

தமிழில் சுயசரித்திரங்கள்

தமிழில் சுயசரித்திரங்கள், தொகுப்பாசிரியர்: சா.கந்தசாமி; சாகித்திய அகாதெமி, பக்.334; ரூ.290 துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ. வே.சாமிநாதையர், சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, தி.செ.செள.ராஜன், சுத்தானந்த பாரதியார், ம.பொ.சிவஞானம், நெ.து. சுந்தர வடிவேலு, கலைஞர் மு.கருணாநிதி, த. ஜெயகாந்தன் ஆகிய 12 பேர் எழுதிய சுயசரித்திரங்களின் சிறப்பான பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுயசரித்திரங்களை எழுதியவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை அழகாக விவரித்துள்ளார் நூலாசிரியர். துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ. வே.சாமிநாதையர், சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., […]

Read more

இறையன்பு கருவூலம்

இறையன்பு கருவூலம், இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 110ரூ. மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று, தமிழக அரசின் முதன்மை செயலாளராக, முது முனைவராக, நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த வெ.இறையன்பு எழுதிய 16 நூல்களைத் தேர்ந்தெடுத்து, அந்த நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளைத் தந்து இருக்கும் இந்த நூல், இறையன்புவின் ஆற்றல்களை தெளிவாக அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. ‘தந்தி’ பதிப்பகம் வெளியிட்ட ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’, ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ ஆகியவை உள்பட இறையன்பு எழுதிய புத்தகங்களில் காணப்படும் […]

Read more

நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல்

நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல் – நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன்; முல்லை பதிப்பகம்,பக்.168; ரூ.150; தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய நான்கு உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பணியாற்றியவர் நூலாசிரியர். அவர் பல்வேறு மேடைகளில் ஆற்றிய சொற்பொழிவுகள், எழுதிய நூல் மதிப்புரைகள், கட்டுரைகள், இலங்கை நாளிதழான வீரகேசரிக்கு அளித்த நேர்காணல் ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. நூலாசிரியரின் சீரிய கருத்துகள் இந்நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும், தற்கொலை முயற்சியைக் குற்றமற்றதாகக் கருதலாமா? பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு […]

Read more

பாரதியார் பதில்கள்

பாரதியார் பதில்கள், ஔவை அருள், ஸ்ரீராம் பதிப்பகம், பக். 148. மகாகவி பாரதியின் 137-ஆவது பிறந்தநாள் விழாவில் (2.2.2019) வெளியான இந்நூலை, தமிழறிஞர் ஔவை நடராஜனின் புதல்வரும், தமிழறிஞருமான இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். இது ஸ்ரீராம் நிறுவனங்களின் ஆதரவில் உருவாகி, படிக்க விரும்புபவர்களுக்கு விலையில்லாத அன்பளிப்பாக வழங்கும் வகையில் வெளியிட்டப்பட்டுள்ளது. பாரதியாரைப் பற்றி அனேக நூல்கள் வெளியாகியிருந்தாலும், அவற்றைவிட இந்நூல் மிக வித்தியாசமானது என்பதோடு, இக்காலச் சிறுவர் சிறுமியருக்கும், இளைஞர்களுக்கும் மிக எளிய முறையில் பாரதியின் பல்வேறு பரிமாணங்களைப் புரிய வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கேள்வி […]

Read more

மகத்தான பேரூரைகள்

மகத்தான பேரூரைகள், பெ.சுபாசு சந்திரபோசு, அன்னம், பக். 240, விலை 200ரூ பேச்சு என்பது உலக அளவில் ஒரு கலையாக உருவான போது, ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி, அரசியல், புரட்சி, சமயம், நீதி போன்ற துறைகளில் மாற்றங்களை உருவாக்க, மகத்தான பேச்சாளர்கள் உலக அளவில் உருவாகினர். உலக அளவில் மகத்தான பேருரைகள் ஆற்றிய தத்துவ ஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள், எழுத்தாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், சமயவாதிகள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுனர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என, 25 நபர்களின் பேருரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. […]

Read more

ஞானியின் சமதர்மப் படைப்பாளுமை

ஞானியின் சமதர்மப் படைப்பாளுமை,  இரா.அறவேந்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.36, விலை  ரூ.30. சமகால உலகின் நிகழ்வுகளை, அவற்றிற்கு அடிப்படையாக அமைந்தவற்றைப் புரிந்து கொள்வதிலும், விளக்குவதிலும் பலவிதமான பார்வைகள், கோணங்கள் இருக்கின்றன. கோவை ஞானியின் பார்வையை விளக்கும் சமதர்மப் படைப்பாளுமை, பெரியாரியம், சமதர்மப் பேருணர்வு எனும் இறையுணர்வு ஆகிய மூன்று கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்திருக்கிறது. ஞானியின் பல நூல்களிலிருந்து பல கருத்துகளை நூலாசிரியர் ஆராய்ந்து ஞானியின் மெய்யியல் சிந்தனை பற்றிய தனது கருத்துகளை இக்கட்டுரைகளில் முன் வைத்திருக்கிறார். மார்க்சியம், […]

Read more
1 7 8 9 10 11 63