கற்றது விசில் அளவு

கற்றது விசில் அளவு, ஆர்.பாண்டியராஜன், கற்பகம் புத்தகாலயம், பக்.128, விலை ரூ.100. ஒரு திரைப்பட இயக்குநரின் நுட்பம், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டியுள்ளார் ஆர். பாண்டியராஜன். ஒரு கலைஞன் எப்படி அவரது ரத்த உறவுகளுடன் நம்மையும் சேர்த்துக்கொண்டு நடத்திச் செல்வாரோ, அத்தகைய தமிழ் நடை எல்லாப் பக்கங்களிலும் உள்ளன. சைதாப்பேட்டையில் எளிய குடும்பத்தில் பேருந்து ஓட்டுநரின் மகனாகப் பிறந்து, சிறு வயது முதல் இளமைப் பருவம் வரை வறுமையை, அதனால் வரும் துன்பத்தை இன்பத்தோடு அனுபவித்ததை இவர் சொல்லும் பாங்கு அலாதியானது. பல்வேறு […]

Read more

ராஜ் கௌதமன் நூல்கள் வரிசை

ராஜ் கௌதமன் நூல்கள் வரிசை, என்.சி.பி.ஹெச். வெளியீடு, விலை 1670ரூ. சங்க இலக்கியங்கள், புதுமைப்பித்தன், வள்ளலார் என்று வெவ்வேறு ஆய்வுத் தளங்களைத் தனித்த பார்வையோடு அணுகியவர் ராஜ் கௌதமன். புனைவாகவும் தன்வரலாறாகவும் அமைந்த அவரது சிலுவைராஜ் தொடர் வரிசை நூல்கள் அவரது இலக்கிய எழுத்தாளுமைக்கு உதாரணங்கள். ஏற்கெனவே வெளிவந்து பதிப்பில் இல்லாத புத்தகங்களையும், புதிய புத்தகங்களையும் (9 புத்தகங்கள் – ஆய்வு நூல்கள் மற்றும் ‘காலச்சுமை’ நாவல் உட்பட) என்சிபிஹெச் பதிப்பகம் கொண்டுவந்திருக்கிறது. நன்றி: தி இந்து, 10/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

தொ.பரமசிவன் நூல்கள் வரிசை

தொ.பரமசிவன் நூல்கள் வரிசை, காலச்சுவடு வெளியீடு, விலை 620ரூ. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் மகத்தான பங்களிப்பு செய்தவர் தொ.பரமசிவன். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த இவரது ஆய்வுகள், அழிந்துவரும் பண்பாட்டுக்கூறுகளின் அவசியத்தை முன்வைப்பவை. ‘பாளையங்கோட்டை’, ‘மரபும் புதுமையும்’, ‘இதுவே சனநாயகம்’, ‘மஞ்சள் மகிமை’, ‘தொ.பரமசிவன் நேர்காணல்கள்’ என தொ.பரமசிவனின் ஐந்து புதிய நூல்களைக் கொண்டுவந்திருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். நன்றி: தி இந்து, 10/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

இராமாயணம் இராமன் இராமராஜ்யம்

இராமாயணம் இராமன் இராமராஜ்யம், கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை நன்னொடை 120ரூ. சில மாதங்களுக்கு முன்பு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை பெரியார் திடலில், 7 நாட்களாக ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் சாதி பாகுபாட்டை வலியுறுத்தும் வருணாசிரமத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், மத வெறியை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ராமாயண பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது என்பதை பல ஆதாரங்களுடன் அவர் எடுத்து வைக்கிறார். பல்வேறு மொழிகளில் ராமாயணம் 48 நூல்களாக வெளியாகி இருக்கிறது […]

Read more

ஞானி வாசகம் நானூறு

ஞானி வாசகம் நானூறு, தொகுப்பாசிரியர்: ஜே.மஞ்சுளா தேவி, புதுப்புனல், பக்.440, விலைரூ.390. மார்க்சியம், தமிழ் இலக்கியம் , அரசியல், ஆன்மிகம், வரலாறு என பலதுறை அறிவுமிக்க கோவை ஞானி எழுதிய பல நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு கருத்துகளை இந்நூல் தொகுத்து வழங்குகிறது. நூலில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்து எதைப் பற்றியது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மரபுவழியிலான அல்லது ஏற்கெனவே பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கருத்துகளுடன் ஞானி எவ்வாறு வேறுபடுகின்றார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. […]

Read more

செலுலாய்ட் சோழன்

செலுலாய்ட் சோழன்,  சுதாங்கன், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.648, விலை ரூ.625. நடிகர் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகரான நூலாசிரியர் சிவாஜியின் திரையுலகப் பயணத்தையும் வாழ்க்கை அனுபவங்களையும் கலந்து இருநூற்றைம்பது பகுதிகளாக ஒரு நாளேட்டில் எழுதியதன் தொகுப்பே இந்நூல். இது சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல. ஆண்டுவாரியான திரைப்பட அனுபவங்களும் இல்லை. ஆனால் சிவாஜி குறித்து இதுவரை அறியப்படாத பல அரிய தகவல்கள் (பெரும்பாலானவை சிவாஜியே நூலாசிரியரிடம் கூறியவை) இத்தொகுப்பில் உள்ளன. சிவாஜியின் நாடக அனுபவங்கள், திரைப்படத்தில் நடிக்க சிவாஜிக்கு வந்த வாய்ப்பு, படவுலகில் தொடக்க காலத்தில் […]

Read more

மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்

மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள், தமிழில்: என்.ஸ்ரீநிவாசன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.216, விலை ரூ.180. கி.பி.121 இல் ரோமாபுரியில் பிறந்தவர் மார்கஸ் அரேலியஸ். கி.பி.161 – இல் மன்னரானார். அவர் எழுதி வைத்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் ராஜாஜியால் ஆத்ம சிந்தனைகள் என்ற பெயரிலும், பொ.திரிகூடசுந்தரத்தால் இதய உணர்ச்சி என்கிற பெயரிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஏற்கெனவே வெளி வந்திருக்கிறது. உலக வாழ்க்கை, மனித சிந்தனை, பிரபஞ்ச இயக்கம் ஆகியவை குறித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர் வெளியிட்ட கருத்துகள் பல, […]

Read more

அழகியசிங்கர் சிறுகதைகள்

அழகியசிங்கர் சிறுகதைகள், முழுத்தொகுப்பு, விருட்சம் வெளியீடு, விலை 400ரூ. சிங்கரின் கதைகள் முப்பது ஆண்டுகளாக ‘நவீன விருட்சம்’ இலக்கிய இதழை நடத்திவருபவர் அழகியசிங்கர். கடந்த நாற்பதாண்டுகளில் அவர் எழுதிய 64 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம், ஐந்து சின்னஞ்சிறுகதைகள் ஆகியவை முழுத்தொகுப்பாக வெளிவந்துள்ளன. அழகிய சிங்கரின் பெரும்பாலான கதைகள் ‘நவீன விருட்சம்’ இதழில்தான் பிரசுரமாகியிருக்கின்றன. எண்ணியதை எண்ணியவாறே எழுதும் வாய்ப்பு அவருக்கு. இலக்கிய இசங்களுக்கு இடையே யுத்தங்கள் நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனது குருவான அசோகமித்திரன் பாணியில் உள்ளடங்கிய குரலில் கதைகளை […]

Read more

கொ.மா.கோதண்டம் நாவல்கள்

கொ.மா.கோதண்டம் நாவல்கள், காவ்யா, பக். 588, விலை 600ரூ. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஓங்கிக் குரல் கொடுப்பவர் கொ.மா.கோதண்டம். முற்போக்கு எழுத்தாளரான இவர் கதைகள் ரஷ்ய, ஆங்கில, ஹிந்தி, தெலுங்கு, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆரண்ய காண்டம் என்ற இவரது குறிஞ்சிக் கதைகள் முதுகலை படிப்பிற்கு பாடமாக உள்ளது! கொ.மா.கோதண்டம் நாவல்கள் என்ற இந்த நுாலில் மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை, ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ, ஜன்ம பூமிகள். ஏலச்சிகரம் என்பது தமிழக ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய தமிழின் முதல் நாவல்! மலைப்பிரதேசத்தின் […]

Read more

மனிதனுக்கு மரணமில்லை

மனிதனுக்கு மரணமில்லை, த.ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். பக்.276, விலை ரூ.230. பொதிகை தொலைக்காட்சியில் தினசரி காலை ஒளிபரப்பாகும் தமிழ் விருந்து நிகழ்ச்சியில் நூலாசிரியர் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல். சுவாமி விபுலானந்த அடிகள், ஆர்.கே.சண்முகம் செட்டியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வ.உ.சிதம்பரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், ரவீந்திரநாத் தாகூர், ஜி.டி.நாயுடு, ஆப்ரகாம் லிங்கன், பெர்னாட்ஷா, தாமஸ் ஆல்வா எடிசன், கேப்டன் லட்சுமி உள்ளிட்ட நாமறிந்த – நாமறியாத – பல ஆளுமைகளைப் பற்றிய மிகச் சுருக்கமானதும், அதே சமயம் மனதில் பதியும் […]

Read more
1 9 10 11 12 13 63