மதுரையின் மாண்புகள்

  மதுரையின் மாண்புகள், முனைவர் சி.வடிவேலன், அய்யா நிலையம், விலை 125ரூ. சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையை பாடாத புலவர்கள் இருப்பார்களா? அதுபோல் மதுரையின் பெருமையை பறைசாற்றும் பாடல்களை கண்டுபிடித்து எளிய விளக்கங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளார் நூல் ஆசிரியர். சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை, புறநானூறு, பெருங்குன்றூர் பெருங்கவுசிகனார் போன்ற பல பாடல்களை விளக்கி இருக்கிறார். விண்ணைத் தொடுமளவிற்கு வீடுகள், தென்றல் காற்று புகுவதற்கு சாளரங்கள், பல மொழிகளை பேசும் வணிகர்கள், பலவகை வாத்தியங்களின் ஒலி போன்று அவர் வர்ணிப்பது சங்ககாலத்தில் மதுரை நகரம் எப்படி […]

Read more

மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்,

மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்,  மறை.தி.தாயுமானவன், மறைமலையடிகள் பதிப்பகம், பக்.272, விலை ரூ.350. நூலாசிரியர் மறைமலையடிகளின் பெயரன். மறைமலையடிகளின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் சுருக்கமாகவும் தெளிவாகும் நூலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளன. அதற்கு அடுத்து, மறைமலையடிகள் 1898 முதல் 1950 வரை எழுதிய நாட்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. நலமாக வாழ்வதற்கு எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மறைமலையடிகள் வலியுறுத்தினார் என்பது அடுத்ததாக விளக்கப்பட்டுள்ளது. தனித்தமிழ் இயக்கத்தின் வளர்ச்சி, தமிழைக் காக்க மறைமலையடிகள் நிகழ்த்திய போராட்டங்கள் என நூல் விரிகிறது. 29.2.1912 இல் மறைமலையடிகள் எழுதிய நாட்குறிப்பில், ‘மூட்டைப்பூச்சி, கொசுத் […]

Read more

அன்பில் ஓங்கிய வையகம்

அன்பில் ஓங்கிய வையகம், தொகுப்பு ஸ்ரீரசா, வர்தினி, காலம் வெளியீடு, விலை 60 ரூ. ‘ஒருவரையொருவர் காதலியுங்கள். ஆனால் அது அடிமைத்தனம் ஆகிவிட வேண்டாம். உங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாய் இருக்கட்டும் அது’ என்னும் கல்லில் ஜிப்ரானின் கவிதை வரிகளோடு தொடங்கும் இந்நூலில் அளவிலான நேயமும், வாழ்தலுக்கான இருப்பும் ஒன்றையொன்று பின்னிப் கொண்டிருப்பதன் அவசியத்தை சொல்லும் அழகான குறுங்கவிதைகள், சிறு கட்டுரைகள், சோவியத் நாட்டு சிறுகதை, கொஞ்சம் வரலாறு என கதம்ப மணம் வீசுகிறது. ‘உன் செயலே உன் நேசத்தின் அழகாய் […]

Read more

பொன்மொழிகள்

பொன்மொழிகள், ஹேமா பாஸ்கர் ராஜ், பக்கம் 202. விலை 150 ரூ. வாழ்க்கைக்கு வழிகாட்டும் பொன்மொழிகள் புத்தகம் இது உலகம் புகழ் பெற்ற அறிஞர்களின் பொன்மொழிகள் சிரமப்பட்டு தேடிக் கண்டெடுத்து அழகாக தொகுத்து வழங்கியுள்ளார் தொகுப்பாசிரியர் ஹேமா பாஸ்கர் ராஜ். மொத்தம் ஆயிரத்து 695 பொன்மொழிகள் இதில் அடங்கி உள்ளன. முத்து மாலை போல ஜொலிக்கிறது புத்தகம். 202 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை 150 ரூபாய். நன்றி: தினத்தந்தி. 23-5-2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

இடம், பொருள், மனிதர்கள்

இடம், பொருள், மனிதர்கள், மாதவ பூவராக மூர்த்தி, விருட்சம் வெளியீடு, பக்.156, விலை ரூ.130. சிந்தனை வெளிப்பாட்டின் சிறு குறிப்புகளாகத் தொடங்கிய பேஸ்புக் பக்கம் இன்று நீண்ட பதிவுகளுக்கு இடம் கொடுக்கிறது. இந்த மின்னூடகப் பதிவுகள் மீண்டும் அச்சு உருப்பெற்று, புதிய வாசக வட்டத்தைக் கவர்வதும் இப்போது இயல்பாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு நூல்தான் இது. இருபத்தாறு தலைப்புகளில் மாதவ பூவராக மூர்த்தியின் பேஸ்புக் பதிவுகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. சிந்தனை வெளிப்பாடுகள் என்ற நிலையைத் தாண்டி, ஏறத்தாழ சிறுகதைகள் என்றே குறிப்பிடும் அளவுக்கு சில […]

Read more

பிரபஞ்சன் படைப்புலகம்

பிரபஞ்சன் படைப்புலகம், மகரந்தன், சாகித்திய அகாதெமி, பக்.256, விலை ரூ.310, பிரபஞ்சனின் வாழ்க்கையை மட்டுமின்றி, புதுச்சேரியில் வாழ்ந்த இலக்கிய முன்னோடிகளைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் பல்வேறு தகவல்களை இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். இந்நூலில் பிரபஞ்சனின் சிறந்த படைப்புகளில் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பிரபஞ்சனின் படைப்புகளில் முதலில் வெளிவந்தவை கவிதைகள்தாம். பிரபஞ்சனின் சிறுகதைகள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலமே நகர்த்திச் செல்லப்படுகின்றன. நேற்று மனிதர்கள், சங்கம், ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், பாதுகை, கமலா டீச்சர் போன்ற சிறுகதைகள் இந்நூலில் இடம் […]

Read more

சுடர்கள் ஏற்றும் சுடர்

சுடர்கள் ஏற்றும் சுடர், பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 180, விலை 160ரூ. பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் வழக்காற்றியலின் தந்தை. மார்ச்சிய லெனினிய அகராதி, தமிழர் நாட்டுப் பாமரர் பாடல்கள், தமிழர் நாட்டுப் பாடல்கள், புதுக்கவிதை – முற்போக்கும் பிற்போக்கும் – போன்ற அவரது நுால்கள் தமிழுக்கு சிறந்த பங்களிப்புகள். அவரது அன்றாட வாழ்க்கை, ரசனைகள், குறைகள், சாதனைகள், வேதனைகள், அவரைப் பற்றிய மதிப்பீடுகள் ஆகியவை பொன்னீலனால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் புதுக்கவிதை இடதுசாரி விமர்சகர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. தொ.மு.சி.ரகுநாதன், கலாநிதி […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ. தனது வாழ்நாள் முழுவதும் வேர்ச் சொல் ஆராய்ச்சிலேயே மூழ்கிக் கிடந்தவர் தேவேநேயப் பாவாணர். தமிழ் மொழியில் ஒவ்வொரு வேர்ச்சொல்லும் எவ்வாறு திரிகின்றன என்பதை தனது பல ஆண்டுகால ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தொகுத்துத் தந்து இருக்கிறார். சில தமிழ்ச் சொற்களை வேறு மொழிகள் எடுத்துக் கொண்டாலும், அவை மூலத்தினாலும், தொடர்புடைய தமிழ்ச் சொற்களாலும் அவை தமிழ் என்றே அறியப்படும் என்பதை நேர்த்தியாக விளக்கி இருக்கிறார். தமிழ் ஆய்வாளர்களுக்கும், புலவர்களுக்கும் இந்த நூல் […]

Read more

சிறுகதையும் திரைக்கதையும்

சிறுகதையும் திரைக்கதையும், ஜெயகாந்தன், தொகுப்பு ஜெ.ஜெயசிம்மன், டிஸ்கவரி புக் பேலஸ். விலை 160ரூ. ஒரு காட்சியை படமாக்குவது எப்படி? திரைக்கதையை வடிவமைப்பது எப்படி? என்பது நுணுக்கத்துடன் விளக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிரபஞ்சன் படைப்புலகம்

பிரபஞ்சன் படைப்புலகம், மகரந்தன்,சாகித்திய அகாதெமி, பக்.256, விலை ரூ.310. பிரபஞ்சனின் வாழ்க்கையை மட்டுமின்றி, புதுச்சேரியில் வாழ்ந்த இலக்கிய முன்னோடிகளைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் பல்வேறு தகவல்களை இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். இந்நூலில் பிரபஞ்சனின் சிறந்த படைப்புகளில் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பிரபஞ்சனின் படைப்புகளில் முதலில் வெளிவந்தவை கவிதைகள்தாம். பிரபஞ்சனின் சிறுகதைகள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலமே நகர்த்திச் செல்லப்படுகின்றன. நேற்று மனிதர்கள், சங்கம், ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், பாதுகை, கமலா டீச்சர் போன்ற சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. […]

Read more
1 11 12 13 14 15 63