நேரு சொன்ன நூறு

நேரு சொன்ன நூறு, திருக்குடந்தை பதிப்பகம், விலை 50ரூ. நவஇந்தியாவை உருவாக்கியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. சுதந்திரப் போராட்டத்தின் போது 10 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். 17 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியவர். அவர் நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கூறிய 100 விஷயங்கள், இந்த நூலில் உள்ளன. அண்மையில் காலமான திரைப்பட இயக்குனர் முக்தா சீனிவாசன் இதை எழுதியுள்ளார். சிறிய நூல்தான். ஆனால் சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026856.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

நல்லிரவு

நல்லிரவு, க.விஜயகுமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 96, விலை 80ரூ. ‘குட் நைட்’ சொல்வது பகலிலா, இரவிலா? என்று ‘டாக் ஷோ’ நிகழ்த்தும் அளவிற்கு ‘துாங்கா உலகின்’ துாக்கம் மாறிக் கொண்டே வருகிறது. 20 வயதில் தலைகீழாக படுத்துக் கொண்டு விடிய விடிய இரவைக் கழிக்கும் ‘நவ நாகரிகர்’களால், 40 வயதில் நேராக உட்கார்ந்து மலம் கூட கழிக்க முடியாமல் போகிறது. எனவே, துாக்கமின்மைக்கு, ‘வேலை, வெட்டி’ என்று ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். ‘காரணம் இருக்கட்டும், நிவாரணம் இருக்கிறதா?’ […]

Read more

பெரியார் அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்

பெரியார் அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள், சு.ஒளிச்செங்கோ, சங்கமி வெளியீடு, விலை 60ரூ. திருந்தச் சொல்லி, திருந்திடச் சொல்லி பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் படிக்கிற ஒருவர் வியப்புக்கு ஆளாகும் விஷயங்களில் ஒன்று நீளநீளமான வாக்கியங்கள். ஆனால் அனைத்தும் எளிமையோ எளிமையாக இருக்கும். சொல்ல வந்த கருத்தை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லி, அதை நினைவில் பதியவைக்கும் முயற்சி அது. எப்போதும் அலைபாய்ந்துகொண்டிருக்கும் மனித மனத்தில், எந்தவொரு கருத்தையும் மூன்று முறை சொல்லி கவனத்தை ஈர்க்க முயற்சித்தது பவுத்தம். பெரியாரும் அதே அணுகுமுறையைக் கையாண்டார் […]

Read more

வேங்கடம் முதல் குமரி வரை

வேங்கடம் முதல் குமரி வரை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், சந்தியா பதிப்பகம், விலை 600ரூ. தமிழகக் கோயில்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்களில் ஒன்று, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் ‘வேங்கடம் முதல் குமரி வரை’. பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே,காவிரிக் கரையிலே, பொருநைத் துறையிலே என்ற தலைப்புகளில் ஐந்து பாகங்களாக இந்நூலில் வெளிவந்தது. வடநாட்டுக் கோயில்களைப் பற்றி, ‘வடவேங்கடத்துக்கு அப்பால்’ என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார் பாஸ்கரத் தொண்டைமான். வேங்கடம் முதல் குமரி வரையின் ஐந்து பாகங்களையும் ஒரே தொகுப்பாக சந்தியா பதிப்பகம் […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார்

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார், சுவாமி கமலாத்மனாந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 200ரூ. இந்திய தேசிய ஒற்றுமை, மத நல்லிணக்கம், சமய சமரசம், பெண்களின் மேன்மை போன்றவற்றில் சுவாமி விவேகானந்தருக்கும் மகாகவி பாரதியாருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் பல மேற்கோள்களுடன் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. விவேகானந்தர் பற்றி பாரதியார் எழுதிய பல கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்புடன் கூடிய அவரது ஆங்கில கட்டுரைகளும் இதில், இடம் பெற்றுள்ளன. விவேகானந்தர் பற்றி பல்வேறு பத்திரிகைகளில் பாரதியார் வெளியிட்ட 75 மேற்கோள்கள், பகவத் கீதை தமிழ் மொழிபெயர்ப்பில் அவர் […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை பாகம் 3

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை பாகம் 3, சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 200ரூ. விவேகமும் வீரமும் நிறைந்த சுவாமி விவேகானந்தரின் உரைகளில் தெய்வ பக்தியும் தேசபக்தியும் ஒன்று கலந்தே ஒலித்தது. அவற்றுக்கு எதிரொலியாகவே எழுந்தவை மகாகவியின் கவிதைகளும் கட்டுரைகளும். அஞ்ஞானம் என்ற இருளில் இருந்து மக்களை விழித்தெழச் செய்யும் வகையில் அமைந்த அவர்கள் இருவரின் கருத்துகளையும் தேடித் தொகுத்துத் தரப்பட்டிருக்கும் அற்புதமான நூல் இது. பாரதியார் தமது கட்டுரைகள் பலவற்றிலும் சுவாமி விவேகானந்தர் குறித்து சொன்னவற்றைத் தொகுத்திருப்பதோடு, இருவர் […]

Read more

மைக்ரோ பதிவுகள்

மைக்ரோ பதிவுகள், ராஜா சந்திரசேகர், சந்தியா பதிப்பகம், விலை 185ரூ. சுருங்கச் சொல்லி விரிய உணர்த்திடல் சொல்லுக்கு அழகு என்பார்கள். அத்தகைய ஆழமான வார்த்தைகளால், ட்விட்டரில் கீச்சியவற்றை அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். ஒற்றை வரியில் உலகம் சுற்றிய நிறைவு கிடைக்கிறது. நன்றி: குமுதம், 7/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026696.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அகநாழிகை

அகநாழிகை,(கலை இலக்கிய இதழ்), பொன்.வாசுதேவன், அகநாழிகை, பக். 128, விலை 120ரூ. கலை இலக்கிய இதழ், பிரபல எழுத்தாளர்களின் நேர்காணல், கட்டுரை, சிறுகதைகள், நூல் அறிமுகம், கவிதைகள் என, முழுமையான இலக்கிய இதழாக வெளிவந்திருக்கிறது அகநாழிகை. இலக்கிய வட்டாரத்தில் இந்நூல் தடம் பதிக்கும். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை, ஜெ. பாலசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், பக். 184, விலை 195ரூ. தலித் இலக்கிய வரலாற்றை, தமிழ் இதழில் ஆய்வு மூலம், ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். நான்கைந்து தலித் பத்திரிகைகள் மட்டுமே கிடைக்கும் இன்றைய சூழலில், 40க்கும் மேற்பட்ட, தலித் இதழ்கள் பற்றி, செய்திகள் திரட்டி, பகுத்தாய்ந்திருக்கிறார் ஆசிரியர். 1869 – 1943 வரையிலான தலித் பத்திரிகைகள் குறித்து, சிறந்த ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பதை, நுால் வெளிகாட்டுகிறது. நன்றி: தினமலர், 20/1/2018

Read more

இந்துத் தத்துவ இயல்

இந்துத் தத்துவ இயல்,  பக்.128, விலை ரூ.105,  பெளத்தத் தத்துவ இயல் – பக்.200; ரூ.165; ஐரோப்பியத் தத்துவ இயல் – பக்.124; ரூ.105; இஸ்லாமியத் தத்துவ இயல் – பக்.206; ரூ.170; விஞ்ஞான லோகாயத வாதம் – பக்.164; ரூ.135; ஐந்து நூல்களையும் எழுதியவர்: ராகுல் சாங்கிருத்யாயன்; அனைத்து நூல்களும் தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, பெளத்தத் தத்துவ இயல் – தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, ஆர்.பார்த்தசாரதி; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., வரலாறு, தத்துவம், அரசியல் என பலதளங்களிலும் புகழ்பெற்ற நூலாசிரியர், உலக […]

Read more
1 12 13 14 15 16 63