உலகப் பெருமக்கள்

உலகப் பெருமக்கள், தொகுப்பும் பதிப்பும் பேரா. சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 300ரூ. “காசு பிள்ளை” என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணியபிள்ளை, “கல்விக்கடல்” என்று திரு.வி. கல்யாணசுந்தரனாரால் பாராட்டப்பட்ட தமிழறிஞர். அவர் எழுதிய புகழ்பெற்ற நூல்களில், “உலகப்பெருமக்கள்” என்ற இந்த நூலும் ஒன்று. இதில் மகாத்மா காந்தி, ஸ்டாலின், ரூஸ்வெல்ட், ஜார்ஜ் பெர்னாட்ஷா, செகப்பிரியர்(ஷேக்ஸ்பியர்) உள்பட 15 உலகத் தலைவர்களின் வரலாறுகள் அடங்கியுள்ளன. தூய தமிழ் நடையில் காசு பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். ஆண்டுகள் பல சென்று விட்டபோதிலும், இளமையோடு விளங்குவது இந்த நூலின் […]

Read more

பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க

பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க,  டாக்டர் வ.செ.நடராசன், வானதி பதிப்பகம், பக்.88, விலை ரூ.60. பாப்பாவுக்கு மட்டுமல்ல தாத்தாவுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்கிறார் இந்நூலின் ஆசிரியர். முதியோர் நலத்துறையில் 30 ஆண்டு கால அனுபவம் பெற்ற இவர், முதியோர் நலன் குறித்து சுமார் 30 நூல்களை எழுதியுள்ளார். ‘முதுமையை முறியடிப்போம்’, ‘இதய நலம் காப்போம்’ ஆகிய இரண்டு குறுநூல்களைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். ஒரு மனிதனுக்கு 60 வயதில் இருந்தே முதுமைக் காலம் தொடங்குகிறது. இந்தக் காலத்தில் உடல்நலத்தையும் மனநலத்தையும் பேணிக் காத்துக் […]

Read more

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள், தொகுப்பு சுப்ரபாரதி மணியன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 350, விலை 330ரூ. அமரர் ஆகிவிட்ட சுகந்தி சுப்ரமணியன் சுப்ரபாரதி மணியனின் இல்லத்தரசி. மனஉளைச்சல்களுக்கு ஆளாகி மரித்துப் போன இவர் ஒரு குறிப்பிடத்தகுந்த கவிதாயினி. இந்தப் புத்தகம் மூன்று பகுதிகளைக் கொண்டது. 1.சுகந்தியின் கவிதைகள். 2.சுகந்தியின் சிறுகதைகள். 3.சுகந்தியின் டயரிக் குறிப்புகள்… ஆனால், புத்தகத்தின் ஏராளமான பக்கங்களைச் சுகந்தியின் கவிதைகளே ஆக்கிரமித்து இருக்கின்றன… ‘காதல்’ என்றொரு கவிதை! சாக்கடை அரசியலும் பெண்ணை உடலோடு தோலுரிக்கவே பிறந்த சினிமாவும்  – அதன் […]

Read more

புத்தரின் போதனைகள் தீக நிகாயம்

புத்தரின் போதனைகள் தீக நிகாயம் (நீண்ட பேருரைகள் பாலி/ ஆங்கில மொழி நூல்களிலிருந்து), தமிழில்: போதிபால மகாதேரோ, திரிபிடக தமிழ் நிறுவனம், பக்.456, விலை ரூ.500. புத்தர் ஞானம் பெற்ற பின்பு 45 ஆண்டுகள் போதனைகள் செய்துள்ளார். அவை அவருடைய தாய்மொழியான பாலி மொழியில் பல நூறு ஆண்டுகளாகச் செவி வழியாக வழங்கப்பட்டன. போதனைகள் ‘திரிபிடகம்’ என அழைக்கப்பட்டன. கி.மு.77 ஆம் ஆண்டு இலங்கையை ஆண்ட வட்டகாமினி அபயன் என்ற மன்னன், நான்காவது பெளத்த சங்கத்தைக் கூட்டி, பாலி மொழியின் முழு திரிபிடகத்தை சிங்கள […]

Read more

நான் பால் அருந்துவதைத் துறந்த நாள்

நான் பால் அருந்துவதைத் துறந்த நாள், சுதா மூர்த்தி, தமிழில் உமா மோகன், சப்னா புக் ஹவுஸ், பக். 204, விலை 130ரூ. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றிய தொகுப்பு இந்தப் புத்தகம். நூலாசிரியர் சுதாமூர்த்தி இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர். நூலாசிரியரின் உதவியால் இன்போசிஸ் அறக்கட்டளையின் நிதியுதவி பெற்று பொறியியல் படித்த தபால்காரரின் மகன், பின்னாளில் உயர்ந்த நிலைக்கு வருகிறார். தனது தோழியின் மகளைப் பெண் பார்க்க வந்த அந்த இளைஞனின் குடும்பம். எதேச்சையாக சுதா மூர்த்தியை அந்த வீட்டில் […]

Read more

பயன் தரும் பட்டிமன்றம்

பயன் தரும் பட்டிமன்றம், புலவர் கு.அனாதரட்சகன், மீனாட்சி பிரசுரம், பக். 304, விலை 300ரூ. பட்டிமன்ற நிகழ்ச்சி என்பது மற்ற நிகழ்ச்சிகளை விட அறிவார்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல நூல்களைப் படித்து அறியக்கூடிய பல்வேறு கருத்துக்களை, தகவல்களை பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் அறிய முடிகிறது. தவிர, ஒரு விஷயத்தைப் பற்றிய நேர்மறை, எதிர்மறைக் கருத்துக்களையும், அவை குறித்த ஆதாரப்பூர்வமான புள்ளி விபரங்களையும் மனதில் ஆழமாகப் பதிய உக்கிரமாகவும், சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவையாகவும் எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள், பெரியவர் முதல் சிறியவர் வரை […]

Read more

இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்

இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம், தொகுப்பு சபீதா ஜோசப், ராஜமாணிக்கம்மாள் வெளியீடு, விலை 120ரூ. இயற்கை விவசாயமே இன்றைக்கு அவசியம் தேவை. அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் வலியுறுத்தி வந்தார். அவர் பத்திரிகைகள், சொற்பொழிவுகள் மூலம் வெளியிட்ட இயற்கை விவசாயம் குறித்த கருத்துகளை இந்த நூலில் எழுத்தாளர் சபீதா ஜோசப் தொகுத்துள்ளார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

செவ்வி

செவ்வி, பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ‘தமிழர்களுடைய மரபுவழி அறிவுத்தொகுதியினை உரையாடல் மரபிலும், அதன் உள்ளீடாக விளங்கும் பழமொழிகள், சொல் அடைகள், கதைகள், சடங்குகள் இவற்றின் வழியாகவே மீட்டெடுக்க முடியும்’ என்று சொல்லும் பேராசிரியர் தொ.பரமசிவனின் 11 நேர்காணல்கள் நூலாக்கம் பெற்றுள்ளன. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம்’, ‘சாதிகள் உண்மையுமல்ல… பொய்யுமல்ல…’, ‘தொல்தமிழர்களின் சுற்றுச்சூழல் அறிவியல்’ என நேர்காணல்களின் தலைப்புகளே தொ.ப.-வின் கருத்துறுதியை நிரூபிக்கும் வகையில் உள்ளன. நன்றி: தி இந்து, 12/8/2017.

Read more

எமகாதக எத்தர்கள்

எமகாதக எத்தர்கள்,  ஹரி கிருஷ்ணன்,  கிழக்கு பதிப்பகம், பக்.152 , விலை ரூ.140. பிறரை ஏமாற்றுவதற்கும் திறமை வேண்டும். இந்த நூலில் அப்படிப்பட்ட திறமைசாலிகளின் சாகசக் குற்றச் செயல்கள் விறுவிறுப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்ததன் நூல் வடிவம் இது. பிரான்சின் ஈபில் டவரை விலை பேசி விற்பது, கள்ளநோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில் விடுவது போன்ற சாகசமான குற்றச் செயல்களைச் செய்த விக்டர் லுஸ்டிக் என்பவனைப் பற்றிய தகவல்கள் அதிகம். அதுபோன்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் புரூக்ளின் பாலத்தை […]

Read more

பெண்களின் அகவுலகம்

பெண்களின் அகவுலகம், ஆர். சூடாமணி, சாகித்ய அகாடமி, விலை 50ரூ. தனித்துவமான மொழி நடையைக் கொண்டிருந்த எழுத்தாளுமை ஆர். சூடாமணி. 1954 முதல் 2004 வரை அரை நூற்றாண்டு காலம் படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கியவர். பெண்களின் அகவுலகத்தைப் பற்றிப் பேசியதில் முதன்மையானவரான இவரின் கதைகள், மானுட மேன்மையோடு உளவியல் நுட்பங்களையும் உள்வாங்கி எழுதப்பட்டவை. 7 நாவல்கள், 8 குறுநாவல்கள், 19 சிறுகதைத் தொகுப்புகள் என தனது பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கும் எழுத்தாளர். ஆர். சூடாமணியின் படைப்பாளுமையைப் பற்றி கச்சிதமாக எழுதியிருக்கிறார் பேராசிரியர் கே. […]

Read more
1 14 15 16 17 18 63