பிரபலங்களின் குழந்தைப் பருவம்

பிரபலங்களின் குழந்தைப் பருவம், ப்ரியன், கலைஞன் பதிப்பகம், பக்.168, விலை ரூ.160. இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பிரிவில், கவிஞர் வைரமுத்து, சுகிசிவம், டாக்டர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இளமைப் பருவத்தைப் பற்றி கூறுகிறார்கள். இரண்டாம் பிரிவில் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்ஸன், சார்லி சாப்ளின், தமிழ்வாணன், வால்ட் எலியாஸ் டிஸ்னி போன்ற பிரபலங்களின் குழந்தைப் பருவத்தைப் பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பிரிவில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகள் பதிவாகியுள்ளன. நான்காம் பிரிவில் இயக்குநர் […]

Read more

பிரபஞ்ச இரகசியங்கள்

பிரபஞ்ச இரகசியங்கள், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 208, விலை 200ரூ. அண்டசராசரங்கள் என்று கூறப்படும் சூரியன், சந்திரன், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், விண்வெளிக்கற்கள், ஆகாயம், கேலக்ஸி… என்று இயற்கையின் ஒட்டுமொத்த தொகுப்பான பிரபஞ்சத்தை அறிய விரும்பும் வாசகர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். பிரம்மாண்டமான இப்பூமியே இப்பிரபஞ்சத்தில் ஒரு அணு அளவிலான புள்ளிதான். ஒன்றுமே இல்லாத இந்த வெட்ட வெளியில் சுமார் 1370கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய அணுத்துகளின் பெரு வெடிப்பு (பிக்-பேங்) மூலம்தான், கற்பனைக்கு எட்டாத இப்பிரபஞ்சம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. […]

Read more

புதிரா புனிதமா

புதிரா புனிதமா, கற்பகம் புத்தகாலயம், விலை 250ரூ. பாலியல் (செக்ஸ்) பற்றிய சந்தேகங்களுக்கு தொலைக்காட்சியில் பதில் அளித்து பரபரபப்பு உண்டாக்கியவர் டாக்டர் மாத்ருபூதம். அவர் அளித்த பதில்கள் நூல் வடிவம் பெற்றுள்ளது. புதுமண மக்களுக்கு பரிசளிக்க ஏற்ற நூல். நன்றி: தினத்தந்தி, 25/5/2017.   —-   பதினெண் சித்தர்களின் ஞான பாடல்கள், யோக சித்தர் மானோஸ், மணி புத்தக நிலையம், விலை 150ரூ. கருத்துச் சுரங்கமான சித்தர் பாடல்களை ஒரு முறை படிக்கும்போதும் புதிய புதிய கருத்துக்களைத் தோற்றுவிக்கும் தெய்வீக சுரங்கம். இதனை […]

Read more

யாதும் ஊரே

யாதும் ஊரே – 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்; பதிப்பாசிரியர்கள்: ப.முத்துக்குமார சுவாமி, கிருங்கை சேதுபதி, சொ.அருணன்; தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், பக்.800. விலை ரூ.1000. தமிழகம், அயலகம் எனும் இரு பகுப்புகளை உடையதாக இம்மலர் மலர்ந்துள்ளது. தமிழர்க்கு, மொழி வளர்ச்சி, இலக்கணம், வரலாறு, கலை, இலக்கியம், சமயம், அறிவியல், அயலகம் ஆகிய ஒன்பது பெருந் தலைப்புகளில் இம் மாநாட்டு மலர் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொல் தமிழின் மாண்புகள், தமிழரின் தொல் மரபு தொடங்கி அறிவியல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் தற்போது கணினித் […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 232, விலை 200ரூ. “பிரமிக்காதே பூமியில் தானிருக்கிறது மலையின் உச்சி” மலைமேல் ஏற, மலை உச்சியிலிருந்து பயணத்தைத் தொடங்கச் சொல்லும், அனுபூதி உத்தி இக்கவிதைத் தொகுப்பில் அதிகம். படிமத்தின் ஆட்சியில் சொல்ல வரும் கருத்துக்களை காட்சிப்படுத்திவிடுகிறார் கவிஞர். சமூகம், காதல், நடப்பியல் ஆன்மிகம், எள்ளல், பிரபஞ்சத் தேடல்கள் என்று அடர்த்திமிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப்

உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப், சி.எஸ். தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. மிர்சா அசதுல்லா கான்காலிப் இந்தியாவில் வாழ்ந்த உருதுக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது கஸல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. காதலும் மனிதமும் உள்ளவரை காலிப்பின் கவிதைகளும் உயிர்த்திருக்கும். இந்தியாவிற்குப் பெருமை தரக்கூடிய இப்பிரபஞ்சக் கவிஞரின் வாழ்வையும் அவரது படைப்புகளையும் தமிழில் கொண்டு வந்திருப்பது தமிழுக்கும் பெருமை. நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

விடியலின் கனவுகளுடன்

விடியலின் கனவுகளுடன், கி. சங்கீதா, கேளீர் பதிப்பகம், விலை 50ரூ. நாற்பத்தியேழு தலைப்புகளுடன் உள்ள இக்கவிதை நூல், குடும்ப உறவுகள், பள்ளிக்கூடம், கல்லுாரி என உணர்வுகளைத் துாண்டும் கற்பனையுடன் விரிவடைந்து திருமணம், முதியோர் இல்லம் வரைச் செல்கிறது. ‘படிக்காத மேதையாய் இருந்து படித்த மேதைகளை உருவாக்கினார் அந்த பொதுவுடைமைக் காவலர்’ என காமராஜரையும், ‘மெல்லிய ரோஜாக்களை நேசிக்கும் மின்னிய குணம் கொண்டவர்’ என ஜவகர்லால் நேருவையும் விளக்குகிறது. கரியமில வாயு கலக்காத பூமி வேண்டும், பிறக்குமா இன்னொரு பூமி என இயற்கையுடன் கூடிய விழிப்புணர்வை […]

Read more

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள்

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள், சேதுபதி, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ. தமிழ் இலக்கிய உலகில் தனிப் பாதை அமைத்து அதில் உலா வந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரது படைப்புகளும், பேச்சும், சிந்தனையும் தனித்துவம் மிக்கவை. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய சாகசனங்களாக விளங்கும் ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், பேட்டிகள் என அனைத்தும் பெருந்தொகுதிகளாக வெளியிடப்பட்டன. அந்த விழாக்களில் பங்கேற்ற வாசகர்களின் உள்ளத்தின் இலக்கியப் பதிவாக இந்த நூலை பேராசிரியர் முனைவர் சொ.சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். அனைத்து விழாக்களிலும் பங்கேற்று […]

Read more

பாரதி பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப்பத்தும்

பாரதி பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப்பத்தும்,சந்தனத் தென்றல் பதிப்பகம், விலை 100ரூ. பாரதியாரால் பாடப்பட்ட தமிழ்த்தாய், பராசக்தி, பாஞ்சாலி, கண்ணன், குயில், புதுமைப்பெண், பாப்பா ஆகிய ஒவ்வொருவரும் பாரதியைப் பற்றி பாடுவதாக அமைந்த பாடல். இதற்கு முத்தாய்ப்பாகப் பாரதியும் தன்னைப் பற்றி பாடுவதாகப் பாடலை கலைமாமணி கே.பி. அறிவானந்தம் நிறைவு செய்துள்ளார். பாரதியைப் பத்துப்பேர் பாடியதால் ‘பாரதி பத்துப்பாட்டு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாவேந்தர் பாரதிதாசனின் நூல்களான பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு போன்ற 10 தலைப்புகளில் ஒவ்வொன்றைப் பற்றியும் […]

Read more

முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள்

முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள்முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள், சூரியசந்திரன், எழில் பதிப்பகம், விலை 250ரூ. அண்டா அன்பும்… டம்பளர் அன்பும்! பேட்டிகள் படிப்பது பரவசமானது. அதுவும் பேட்டிகளின் தொகுப்பைப் படிப்பது பரவசங்களின் உச்சம். இலக்கியம், சமூகம், சூழலியல் என பல்துறை ஆளுமைகளை ஒருசேர ஒரே புத்தகத்தில் அறியக் கிடைப்பது உண்மையில் பொக்கிஷம் போன்றது. அத்தகைய பொக்கிஷத்தைக் கொடுத்துள்ளார் சூரியசந்திரன். இன்றைய இலக்கிய இதழ்களில் வெளிவரும் பேட்டிகளில் பலதும் சலிப்பை ஏற்படுத்துபவை. ஏனெனில் அவ பேட்டிகளாக, சந்திப்புகளாக இருப்பது இல்லை. எழுதித் தரப்பட்ட கட்டுரைகளுக்கு இடையில் சொருக்கப்பட்ட […]

Read more
1 15 16 17 18 19 63