தமிழ்நாட்டு நீதிமான்கள்

தமிழ்நாட்டு நீதிமான்கள், கோமல் அன்பரசன், சூரியன் பதிப்பகம், விலை 190ரூ. சென்ற நூற்றாண்டின் சட்டத்துறை வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்குச் செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்பாக உள்ளது இந்த நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம்

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், காவ்யா பதிப்பகம், பக். 340, விலை 330ரூ. திருநெல்வேலியில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, புதுவையில் நாடகத் தமிழ் வளர்த்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவரின் எழுத்து, இயக்கம், பேச்சு, மூச்சு என அனைத்து செயல்களும் நாடகத்தமிழில்தான் இருந்தன. அவரால், நாடகத்தமிழ் புத்துயிர் பெற்றது. அவரை தற்கால தலைமுறை புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 10/1/2018.

Read more

புலி – ஆடு, புல்லுக்கட்டு

புலி – ஆடு, புல்லுக்கட்டு, டாக்டர் ஆர். கார்த்திகேயன், தாமரை பிரதர்ஸ் மீடியா, பக். 80, விலை 60ரூ. இந்த புத்தகத்தைப் பார்த்ததும், ‘இதெல்லாம் ஒரு புத்தகமா?’ என்று நினைக்க தோன்றுகிறதா? ‘ஆம்’ என்பது உங்கள் பதில் எனில், அதை வாங்க வேண்டிய இரண்டாம் நபர் நீங்கள். ‘இல்லை’ என்பது உங்கள் பதில் என்றால், முதல் நபர் நீங்கள் தான். ஏன் என்றால்… இதில் நீங்கள் விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஆயிரம், ‘ஏன்’களுக்கு இதில் விடை இருக்கிறது. ‘அதிகம் செல்பி எடுப்பவர்கள் ஆண்களா, […]

Read more

கலாச்சார இந்து

கலாச்சார இந்து, ஜெயமோகன்,  நற்றிணை பதிப்பகம், பக்.176, விலை ரூ.200. இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் […]

Read more

கிரேஸியைக் கேளுங்கள்

கிரேஸியைக் கேளுங்கள், கிரேஸி மோகன், தாமரை பிரதர்ஸ் பிரைவேட் மீடியா பிரைவேட் லிமிடெட், பாகம் 1, 2, விலை 224ரூ, 180ரூ. தமிழ் கேள்வி, பதில் துறையை வளப்படுத்தும் வகையில், கல்கி இதழில் கிரேஸி மோகன் எழுதிய கேள்வி –– பதில் பகுதி தொகுக்கப்பட்டு நுாலாக வெளிவருகிறது. அவருக்கே உரிய குறும்பும், நகைச்சுவையும் இந்நுாலில் தொட்ட இடமெல்லாம் மின்னுகின்றன. மிக நீண்ட பதில்களும், சுருக்கமான பதில்களும் கலந்தே காணப்படுகின்றன. அவரது எழுத்து வெளிப்பாடுகள் புதிய பாணியில் அமைந்தவை. படிக்க ரசமானவை. கவிஞர் வாலியை, ‘கதர் […]

Read more

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள், செ.வை. சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 235, விலை 200ரூ. தமிழ் அறிஞர்கள் என்று குறிப்பிடத்தக்க பதினான்கு அறிஞர்களைக் குறித்த வரலாற்றுப் பதிவாக இந்நுால் திகழ்கிறது. இவர்கள் அனைவரும், 19, 20ம் நுாற்றாண்டுகளில் தமிழ்க் கல்வி வரலாற்றிலும், ஆய்வு வரலாற்றிலும் சிறப்புற்று விளங்கியவர்கள். இவர்களுள் கால்டுவெல், உ.வே.சா., ஆகிய இருவரையும் இந்நுால் ஆசிரியர் நேரில் காணவில்லை. எனினும், அவர்கள் இந்நுாற்றாண்டில் இன்றியமையா சாதனைகளை நிகழ்த்தியவர்கள் என்பதால், அவர்களையும் இணைத்தே இந்நுால் உருவாக்கப்பட்டுள்ளது. கால்டுவெல் வரலாற்று ஒப்பிலக்கணம் […]

Read more

புத்தரின் போதனைகள் தீக நிகாயம்

புத்தரின் போதனைகள் தீக நிகாயம், பிக்கு போதிபால மகாதேரோ மற்றும் திரிபீடகத் தமிழாக்கக் குழுவினர், திரிபிடகக் குழுவினர், விலை 500ரூ. புத்தர் பெருமாள் 84ஆயிரம் போதனைகளைத் தமது தாய் மொழியான பாலி மொழியில் சீடர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதித்துள்ளார். இது காலப்போக்கில் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. தொடர்ந்து 21-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழ் மொழியிலும் வெளிவரத் தொடங்கி உள்ளது. அதனுடைய முதல்நூல்தான் இது. இதில் ஒழுக்கவியல் மற்றும் பெரும் இயல் கீழ் 34 பிரிவுகளில் புத்தரின் போதனைகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் […]

Read more

தமிழ்மகள் சிறுகதைகள்

தமிழ்மகள் சிறுகதைகள், தமிழ்மகள், உயிர்மை பதிப்பகம், விலை 550ரூ. பல நாவல்களும் ஏராளமான சிறுகதைகளும் எழுதியுள்ள தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன், ஜுனியர் விகடனில் பணியாற்றுகிறார். அவருடைய பல நாவல்கள், பரிசுகளும், விருதுகளும் பெற்றவை. இவர் எழுதிய சிறுகதைகள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு ஒரே புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 80 சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. 3 பக்கக் கதைகளும் உண்டு. 10 பக்க கதைகளும் உண்டு. கதைகளை வீணாக வளர்க்காமல், வார்த்தைகளை சிக்கனமாகக் கையாண்டு, விறுவிறுப்பாக எழுதியுள்ளார். பரிசு பெற்ற கதைகளும் பாராட்டுப் பெற்ற கதைகளும் நிறைய […]

Read more

நீ பாதி நான் பாதி மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள்

நீ பாதி நான் பாதி மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள், தொகுப்பு அந்திமழை ஆசிரியர் குழு, அந்திமழை, பக். 128, விலை 110ரூ. ‘அந்தி மழை’ மாத இதழில் ஆண்- பெண் உறவு, மண வாழ்க்கை தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள், நேர்காணல்கள், தகவல்கள், சமூக ஊடகங்களினால் ஏற்படும் ஆண்- பெண் உறவு பாதிப்புகள் மற்றும் நன்மைகள் பற்றி வந்த கருத்துகள் எல்லாம் நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, நடிகர் சிவகுமார், சாலமன் பாப்பையா, சகாயம் ஐ.ஏ.எஸ்., டாக்டர் நாராயண ரெட்டி, கலாப்ரியா, எஸ்.ஏ.சந்திரசேகர் […]

Read more

அந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்

அந்த மாமனிதர்களோடு இந்த மனிதர், பேராசிரியர் டாக்டர் ந.வேலுசாமி, யு.எம்.ஐ.யூனிக் மீடியா இன்டிகிரேட்டர், விலை 200ரூ. இந்த நூல் புதுமையானது. இதை எழுதிய பேராசிரியர் டாக்டர் ந. வேலுசாமி, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக இணைப்பதிவாளர். ராஜாஜி, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், சி.சுப்பிரமணியம், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெயகாந்தன், உள்பட 36 தலைவர்கள் பிரமுகர்களை அவர் இளம் வயதில் சந்தித்துப் பேசினார். அப்போது ஏற்பட்ட அனுபவங்களை இந்த நூலில் சுவைபட எழுதியுள்ளார். இதன் மூலம், அந்த தலைவர்களின் சிறப்புகளை நன்கு உணர முடிகிறது. புதிய முறையில் எழுதப்பட்ட சிறந்த […]

Read more
1 13 14 15 16 17 63