விவசாயியை வாழவிடு

விவசாயியை வாழவிடு, விவசாயின் அழிவு சமூகத்தின் பேரழிவு, மக்கள் அதிகாரம், விலை 10ரூ. விவசாய வருமானத்தைக் கொண்டு வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில், விவசாயச் சங்கங்கள் முன் வைக்கும் கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு, நிவாரணங்கள் முதலான கோரிக்கைகளால் நிரந்தரத் தீர்வுகள் ஏற்படாது. எனவே, தற்போதைய விவசாயத்தின் மோசமான நிலைக்குக் காரணமாக இருக்கும் அரசின் விவசாயக் கொள்கைகளை மறுபரிசீலனை, செய்ய வேண்டும், நிலச் சீர்த்திருத்தங்கள், பசுமை புரட்சி என்று முன்னெடுத்த திட்டங்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், விவசாயம் சார்ந்த தொழில் […]

Read more

கரும்புத் தோகையில் கருப்புத் தங்கம்

கரும்புத் தோகையில் கருப்புத் தங்கம், எஸ். மனோகரன், வள்ளலார் பதிப்பகம், விலை 60ரூ. கரும்பாய் இனிக்கிறது! கரும்புச் சாகுபடியைத் திட்டமிட்டும் இலகுவாகவும் செய்வது எப்படி என்பதை எளிதாக விளக்கும் நூல் இது. கரும்பு விவசாயத்தில் நூலாசிரியருக்கு உள்ள 45 ஆண்டுகால அனுபவத்தின் தொகுப்பு இந்த நூல். கரும்புத் தோகையை எரித்துச் சூழலை மாசுபடுத்துவதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எரிபொருளை வீணாக எரிக்கிறோம் என்பதை ஆசிரியர் நன்கு உணர்த்தியிருக்கிறார். தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 43 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றுக்காக 7 லட்சம் ஏக்கரில் கரும்பு அறுவடையாகிறது. […]

Read more

இனியெல்லாம் பிஸினஸே!

இனியெல்லாம் பிஸினஸே!, எஸ்.பி. அண்ணாமலை, ஒய்யே பப்ளிகேஷன்ஸ், விலை 500ரூ. தொழில் துறையில் கோலோச்சும் முதல் தலைமுறை தொழில் முனைவோர், வியாபாரக் குடும்பத்தில் இருந்து புதிதாகச் சிந்தித்து தனிப்பாதை கண்டவர்கள் என 52 பேருடைய வெற்றிக்கதைகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளனர். கோவை உண்ணாமுத்து, மதுரை கமலக்கண்ணன், ஆஸ்திரேலியா செந்தில் உள்பட 52 நகரத்தார்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். இதை எஸ்.பி. அண்ணாமலை தொகுத்து வழங்கியுள்ளார். முதலீட்டைப் புரட்டும் முறை, பணம் இல்லாவிட்டாலும் வியாபாரம் செய்யும் வாய்ப்பு, வங்கிக் கடன்களைக் கையாளுவது என்று தொழிலில் […]

Read more

இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்

இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம், தொகுப்பு சபீதா ஜோசப், ராஜமாணிக்கம்மாள் வெளியீடு, விலை 120ரூ. இயற்கை விவசாயமே இன்றைக்கு அவசியம் தேவை. அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் வலியுறுத்தி வந்தார். அவர் பத்திரிகைகள், சொற்பொழிவுகள் மூலம் வெளியிட்ட இயற்கை விவசாயம் குறித்த கருத்துகளை இந்த நூலில் எழுத்தாளர் சபீதா ஜோசப் தொகுத்துள்ளார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும்

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும், காந்தலட்சுமி சந்திரமவுலி, செங்கை பதிப்பகம், பக். 248, விலை 150ரூ. ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்…’ என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப, உழவுத் தொழிலின் மேன்மை குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் இந்நூல் பல புதிய செய்திகளை தருகிறது. நாம் உண்ணும் உணவிற்குப் பின்னால் பெயர் தெரியாத பலரின் அரிய சக்தியும், உழைப்பும் இருப்பதை இந்நூல் விளக்குகிறது. 18ம் நூற்றாண்டில் செயற்கை உரம் தயாரிக்கப்பட்டதன் சூழ்நிலை குறித்தும் (பக். 27), விவசாயம் செய்வதில் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்றும், ‘விவசாயம் […]

Read more

பண்ணைக் கருவிகள்

பண்ணைக் கருவிகள், த. ஜெயகுமார், விகடன் பிரசுரம், விலை 95ரூ. பஞ்சாப் மாநிலம், விவசாயத்தில் முன்னணியில் இருக்கிறது. அங்குள்ள விவசாயிகள், மாடுகளைப் பூட்டி, ஏர் உழும் முறையைக் கைவிட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகின்றன. நடவு முதல் அறுவடை வரை கரவீகளைக் கொண்டே சாகுபடி செய்கிறார்கள். இதனால் வேலை குறைகிறது. விளைச்சல் அதிகரிக்கிறது. இந்த கருவிகள் பற்றிய முழு விவரங்களையும், அதற்கு அரசாங்கத்திடம் இருந்து பெறக்கூடிய மானியம் பற்றிய தகவல்களையும் இந்த நூலில் தருகிறார் த. ஜெயகுமார். நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Read more

படித்த வேலையா? பிடித்த வேலையா?

படித்த வேலையா? பிடித்த வேலையா? , காம்கேர் கே.புவனேஸ்வரி, தாமரை பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்,  பக்.196, விலை ரூ.145. நூலாசிரியர் கணினித் துறையில் தான் சந்தித்த சவால்கள் குறித்தும், கணினி உள்பட பல்வேறு துறைகளில் இன்றைய இளம் தலைமுறையிருக்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் இந்நூலில் எழுதியிருக்கிறார். ஐ.டி. துறை இளைஞர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களை குறைப்பதற்கான வழிமுறைகள், இணையதள வங்கி செயல்பாடுகள், கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு, பெண் நிர்வாகிகளின் கீழ் பணிபுரியும் பெண்கள் மனநிலை மாறுமா என 20 அத்தியாயங்களில் பல்வேறு […]

Read more

ஏர் காக்க நீர் காக்க பார் காக்க

ஏர் காக்க நீர் காக்க பார் காக்க, காவி. கண்ணன், பத்மா பதிப்பகம், பக். 120, விலை 125ரூ. ஒரு ஏர் உழவனின் சீரிய சிந்தனைகளின் பிரச்னைகள், விவசாயத்தில் இன்றைய நிலை பற்றி, ஆராய்ந்து இந்திய தேசத்தின் பாரம்பரிய முறையைக் காப்பாற்றி இந்தியப் பொருளாதாரத்தை விரிவுபடுத்த ஆலோசனை கூறும் நூல். நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள், செ. கார்த்திகேயன், விகடன் பிரசுரம், பக். 254, விலை 150ரூ. எங்கும், எந்தத் தொழிலிலும் கடும் போட்டி நிலவும் இன்றையச் சூழலில், உள்நாட்டுச் சந்தையைத் தாண்டி, சர்வதேச அளவில் தங்களது வணிகத்தை விஸ்தரிக்க வேண்டிய அவசியம், சுயதொழில் புரிவோருக்கு உள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தின் நுணுக்கங்களை அறிந்து அவற்றைக் கடைபிடிப்பதன் மூலம், சுயதொழில் புரிவோர் சர்வதேசச் சந்தையைத் தங்களுக்குச் சாதகமாக்கி கொள்ளலாம். இந்நூல், ஏற்றுமதி தொழிலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், தமிழகத்திலிருந்து எந்தெந்தப் பொருள்களை எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்? […]

Read more

ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள்

ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள், சி.எஸ். தேவநாதன், சுரா பதிப்பகம், விலை 60ரூ. விற்பனையாளர், தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த குணங்களை முழுமையாய் வெளிப்படுத்தவும், அடுத்த வாய்ப்பை இன்னும் மகத்தானதாக்கிக் கொள்ளவும், வாடிக்கையாளர்களோடு நம்பிக்கையூட்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் சி.எஸ். தேவநாதன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாதி புத்தகாலயம், விலை 150ரூ. சிந்து வெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை திராவிட இடப்பெயர்கள் […]

Read more
1 2 3 4 5 6 12