தேவரடியார்

தேவரடியார், கலையே வாழ்வாக, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 250ரூ. 1947-ம் ஆண்டு வரை தமிழகக் கோவில்களில் இறைவனுக்கு சேவை செய்வதற்காக நேர்ந்து விடப்பட்ட பெண்கள் பற்றிய ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளர் அ.வெண்ணிலா, முனைவர் பட்டத்திற்காக தமிழக வரலாற்றை தீவிரமாக ஆய்வு செய்து, தேவதாசிகள் எனப்படும் தேவரடியார்கள் பற்றிய மிக விஸ்தாரமாக எழுதியுள்ள இந்த நூலில் வியப்பான பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. கோவில்களில் ஏராளமாகக் காணப்படும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பழங்கால இலக்கியங்கள் என்று அனைத்து விதமான தரவுகளில் […]

Read more

கங்காபுரம்

கங்காபுரம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 450ரூ. மதுராந்தகனின் அகவுலகம் ஜோ டி குருஸ்ராஜராஜனுக்கு மகனாய்ப் பிறந்து, அவனது ஒவ்வொரு சிகரச் சாதனைகளுக்கும் காரணமாய் இருந்த மதுராந்தகன் பின்னாளில் தாமதமாகவே ராஜேந்திரன் என மகுடம் சூட்டப்பட்டான். கங்கையும், கடாரமும் கொண்ட இச்சோழ இளவல், தன் முன்னோர்கள் உருவாக்கிய சோழ அரசின் விரிவாக்கத்துக்கும் பாதுகாப்புக்கும் பாடுபட்டதோடு மட்டுமல்லாது, நிர்வாகத் திறத்தால் மக்கள் மனங்களிலும் நீங்கா இடம்பெற்றிருந்தான். சோழர்களின் நீர் மேலாண்மை இன்றும் வியக்கவைக்கிறதே! ராஜேந்திரனின் ஆட்சிக்காலமே தமிழர்களின் பொற்காலம் என்பது யாராலும் என்றும் அழித்துவிட முடியாத […]

Read more

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும், மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளுக்குக் கதை சொல்வது என்பது ஒரு கலை. அதற்கு சிறுவர்களின் உலகத்தில் நுழைந்தாக வேண்டும். அந்த வித்தை அறிந்து குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதப்பட்ட சின்னச் சின்ன கதைகள். கதையோடு ஒழுக்கமும் நுணுக்கமாய் போதிக்கப்பட்டிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027676.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பெருவெளியில் சிறுதுளிகள்

பெருவெளியில் சிறுதுளிகள், கவிஞர் லெ.முருகேசன், அகநி வெளியீடு, விலை 80ரூ. துளித் துளிக் கவிதைகளை புத்தகம் முழுக்கத் தூவியிருக்கிறார். கவிதை மழையில் நனைந்த சிலிர்ப்பு மனதை ‘ஜில்’ ஆக்குகிறது. நன்றி: குமுதம்,19.9.2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஊதா வண்ண இலைகளின் பாடல்

ஊதா வண்ண இலைகளின் பாடல், பி.உஷாதேவி, அகநி வெளியீடு, விலை 150ரூ. பக்குவமான பத்து சிறுகதைகளின் தொகுப்பு. வேகமாக வாசிக்க விடாமல், அனுபவங்களாய் மனதுக்குள் விரிந்து யோசித்து வாசிக்க வைக்கும் வரிகள். ஒவ்வொரு கதையும் உள்ளுக்குள் தாக்கமாய்ப் பதிவதை, தவிர்க்க முடியாது. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 100ரூ. கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழும்போது குடும்பம் எனும் கூடு கலையாமல் இருக்கும். கலகலப்பாகவும் இருக்கும். அப்படியின்றி புரிதல் கோளாறினால் பிரிதல் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், இல்லறம் நல்லறமாக இருப்பதற்கான எளிய வழிகளை இதமுறச் சொல்லும் நூல். மணவாழ்க்கை மணக்க விரும்புவோர் படிக்க வேண்டிய பாடம். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026367.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

கோமாளிகளின் வாழ்வும் இலக்கியமும்

கோமாளிகளின் வாழ்வும் இலக்கியமும், ஆர். தங்கப்பாண்டியன், அகநி வெளியீடு, பக்.112, விலை 70ரூ. ஒரு நுாற்றாண்டு காலம் ஜீவித்திருந்த ஒரு கலையைப் பற்றியும், அதை இயக்கிய கலைஞர்கள் பற்றியும் ஆய்வு செய்து தமிழர்களுக்குத் தந்திருக்கிறார் ஆர்.தங்கபாண்டியன். கோமாளிப் பாத்திரம் நாடகத்திலும், தெருக்கூத்திலும் ஒரு முக்கியப் பாத்திரம். சிவபெருமானைச் சனி பிடிக்கும்போது, ஒரு கபால ஓடு, சிவபெருமானின் கையைப் கவ்விக் கொண்டது. சிவனுக்காகப் படைக்கப்பட்ட எல்லா உணவையும் அந்தக் கபால ஓடு சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். சிவபெருமானின் உணவை கபால ஓடு சாப்பிட்டதால், அவரால் எழுந்து […]

Read more

எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, பக்.144, விலை ரூ.100. குடும்ப வாழ்வில் கணவன் – மனைவிக்கு இடையிலான உறவில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகள், அவற்றிற்கான காரணங்கள் இந்நூலில் ஆராயப்பட்டிருக்கின்றன. அன்பும், காதலும் குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் எத்தனை கணவன் – மனைவிக்கிடையே அது அடிப்படையாக இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. குடும்பத்தில் ஆணின் ஆதிக்கம் தலைதூக்கி இருப்பது, பெண் வீட்டு வேலைக்காரியாக உழைத்து உழைத்து மாய்ந்து போவது, பெண்ணின் கருத்துகள், உணர்வுகள் மதிக்கப்படாதது, இந்த ஆணாதிக்க குடும்ப அமைப்பைக் காட்டிக் […]

Read more

கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும்

கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும், இரா.தங்கப்பாண்டியன், அகநி வெளியீடு, பக். 112, விலை ரூ.70. நாட்டுப்புறக் கலைகளான ராசா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கூத்து, கரகாட்டம், வள்ளி திருமண நாடகம் போன்றவற்றில் அவசியம் இடம் பெறுபவர் கோமாளி. மக்களை உற்சாகப்படுத்த நகைச்சுவையாகப் பேசி நடிக்கும், ஆடும் கலைஞர்கள்தாம் கோமாளி கலைஞர்கள். நூலாசிரியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக சமர்ப்பித்த‘ ‘ராசா ராணி ஆட்டத்தில் கோமாளிகள்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடுதான் இந்நூலாக மாறியிருக்கிறது. கோமாளி கலைஞர்களின் தோற்றம், பல்வேறு நாட்டுப்புறக் கலைகளில் அவர்களுடைய […]

Read more

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை(சிறுவர் கதைகள்), மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளின் இலக்யி உலகின் கதவு, கதை கேட்பதில்தான் திறக்கிறது. பாட்டிகள் கதை சொல்வது அபூர்வமாகிவிட்ட இக்காலத்தில் குழந்தைகளுக்காக குட்டிக் குட்டி கதைகளை சுவாரஸ்யம், நகைச்சுவை, புத்திசாலித்தனம் கலந்து சொல்லி அவர்களின் இலக்கியக் கதவைத் திறந்திட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். படிக்கும் குழந்தைகள் ரசிப்பார்கள். சிரிப்பார்கள். சிந்திப்பார்கள். நன்றி: குமுதம், 6/12/2017.

Read more
1 2 3 4