பாவை விளக்கு

பாவை விளக்கு, அகிலன், தாகம் வெளியீடு, விலை 400ரூ. புகழ் பெற்ற எழுத்தாளர் அகிலன் படைத்தவற்றில் தனிச்சிறப்பு பெற்ற நாவல், பாவை விளக்கு. எழுத்தாளர் தணிகாசலம், அவர் சந்தித்த செங்கமலம், உணர்ச்சிப் பிழம்பாக அமைந்த உமா, தணிகாசலத்தின் மனைவி கவுரி, உமாவின் தந்தை சந்திரசேகரன் போன்ற கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டத்தைக் கொண்டு விறுவிறுப்பாக பின்னப்பட்ட இந்த நாவல், யதார்த்தமான நிகழ்வுகளைக் கொண்டது என்பதால், படிக்க சுவாரசியமாக இருக்கிறது. தணிகாசலத்துக்கும் உமாக்கும் இடையே நடைபெறும் மனதளவிலான போராட்டம் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. முழு நீள […]

Read more

புதுவெள்ளம்

புதுவெள்ளம், அகிலன், தாகம் பதிப்பகம், விலை 500ரூ. இந்திய விடுதலையை வெறும் ஆட்சிமாற்றமாகத்தான் பலரும் பார்ப்பது உண்டு. காரணம் இங்குள்ள பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சுதந்திரத்துக்கு பின்னும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஏழைகள் பரம ஏழைகளாகவும், செல்வந்தர்கள் பெரும் பணக்காரர்களாகவும்தான் மாறி வருகின்றனர். இந்த பின்னணியில் எழுதப்பட்ட கதைதான் இந்த நூல். 1962ம் ஆண்டில் கல்வி இதழில் தொடர்கதையாக வெளியான இந்த கதை, தற்போது நூலாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 3 பாகமாக எழுதப்பட்டு இருக்கும் இந்த நூலில், நாடு விடுதலைக்குப்பின் இந்திய சமூகத்தில் […]

Read more

புதுவெள்ளம்

புதுவெள்ளம்,  அகிலன், தாகம், பக்.656, விலை ரூ.500. வாழ்க்கையிலிருந்துதான் கதை பிறக்கிறது. 1960 – களில் வார இதழில் தொடராக வந்து 11 ஆம் பதிப்பு கண்டுள்ள இந்த நாவலும் அந்த ரகம்தான். விடுதலைக்குப் பின் நாட்டில் மாறிவரும் சமூகத்தின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் நூலாசிரியர். குடியானவ குடும்பத்தில் பிறந்து, படிப்பையும் விட்டுவிட்டு, ரிக்ஷா இழுப்பவனாகவும், வியாபாரியாகவும் மாறி கடைசியில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளியாகிறான் கதையின் நாயகன் முருகையன். அவன் வாழ்வில் சித்திரா, சாந்தா என்ற இரு பெண்கள் குறுக்கிடுகிறார்கள். இரு துருவங்களான […]

Read more

வெற்றித் திருநகர்

வெற்றித் திருநகர், அகிலன், தாகம் பதிப்பகம், பக். 528, விலை 350ரூ. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு‘’ என்பதை தனது வாழ்க்கையின் சீரிய லட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் (விசுவநாத நாயக்கன்) கதையைப் படைத்துள்ளார் நூலாசிரியர். கல்லில் வடிக்கப்பட்ட அவன் உருவைக் காண விரும்புவர் இன்றும் அவனை மதுரைமீனாட்சி அம்மன் ஆலயத்தில் சந்திக்கலாம்! பெண்மைக்கு உரிய எல்லாச் சிறப்பும் பெற்றிருந்தாள் கதை நாயகி இலட்சுமி. வீரன் ஒருவனின் அன்பு நெஞ்சத்தையும் தனக்கே உரிமையாகப் பெற்றிருந்தாள். ஆயினும் தந்தையின் சூழ்ச்சிக் கொடுமைகளைத் தடுக்கவோ மனப்போக்கைத் திருத்தவோ முடியாத […]

Read more

துரோகம் துரத்தும்

துரோகம் துரத்தும், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், அகிலன், கபிலன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-296-1.html பிரபல ஆங்கில எழுத்தாளர், ஜேம்ஸ் ஹாட்லி சேஸின், டாப் த்ரில்லர் நாவல்களில் ஒன்றான AN ACE UP MY SLEEVE என்ற ஆங்கில நாவலை தமிழில் அகிலன் கபிலன் மொழிபெயர்த்துள்ளனர். எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால் எளிதில் நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போடலாம். […]

Read more

எங்கே போகிறோம்

எங்கே போகிறோம், அகிலன், தாகம், சென்னை 17, பக். 344, விலை 175ரூ. கலைமகள் மாத இதழில் தொடராக வெளியாகி பதின்மூன்றாவது பதிப்பு கண்டுள்ள நாவல். நாட்டைப் பற்றிய உள்ளக் குமுறலை கதாபாத்திரங்கள் வழியே வெளிப்படுத்தி தனது கருத்துக்களைக் கூற ஒரு கருவியாக இந்த நாவலைப் பய்னபடுத்திக் கொண்டுள்ளார் ஆசிரியர். உடலை மூலதனமாக்கிப் பொருள் குவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பெண்ணே இக்கதையின் நாயகி. காசுக்காகத் தங்கள் மனசாட்சி, சொல், செயல், ஆன்மா என அனைத்தையும் விற்கும் போலிகளைத் தோலுரித்துக் காட்ட நாயகி புவனாவின் பாத்திரம் […]

Read more

சிநேகிதி

சிநேகிதி, அகிலன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை 17, பக். 176, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-372-2.html இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்கவர் எழுத்தாளர் அகிலன். அவருடைய சிநேகிதி நாவல் மிக முக்கியமானது. சமீபத்தில் இந்நூலின் 17ம் பதிப்பு வெளிவந்துள்ளது. இன்றைய சூழலில் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் ஏற்படும் விரிசல்தான் பாலியல் சிக்கல்களுக்கு அடிப்படையாக உள்ளது. தெளிவான புரிதலோடு ஆணும், பெண்ணும் காதலை எதிர்கொண்டிருந்தால் பெரும்பாலும் சிக்கல்கள் எழுவதற்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்பதை விளக்கும் ஓர் […]

Read more