நீர்வளரி

நீர்வளரி, கோணங்கி, அடையாளம், விலை 600ரூ. தமிழ் சொல்கதை மரபின் லட்சணங்கள் அனைத்தையும் சூடிக்கொண்ட நவீன கதைசொல்லி கோணங்கி. கரிசலின் உணர்வு மூட்டங்களை மந்திர மொழியில் சொன்ன சிறுகதைக் கலைஞர். ‘பாழி’, ‘பிதிரா’, ‘த’ உள்ளிட்ட நாவல்களைத் தொடர்ந்து ‘நீர்வளரி’ நாவலை இப்போது வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது. ஒரு கதைசொல்லியை உங்களிடம் கண்டுகொண்ட பின்னணி, காலத்தைச் சொல்லுங்கள்… விளாத்திகுளத்திலிருந்து வந்த ச.ஜோதிவிநாயகத் தின் ‘தேடல்’ சிற்றிதழில் ‘கருப்பு ரயில்’ சிறுகதை பிரசுரமானது. அப்போது என் வயது இருபது. அதைப் படித்து உற்சாகமான […]

Read more

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல்

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல், சாமுவேல் பி.ஹண்டிங்டன், அடையாளம், பக்.570. விலை ரூ.540. சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மாறுதல்களை விளக்கும் நூல். ரஷியாவின் வீழ்ச்சிக்கு முன்பு உலகம் அமெரிக்கா, ரஷியா ஆகிய இருநாடுகளின் பின் அணி திரண்டது. கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் தனியுடமை, ஆளும் சக்திகளின் கருத்துகளுக்கும், பொதுஉடமை, உழைக்கும் மக்களின் கருத்துகளுக்கும் இடையிலேயே இருந்தன. சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இம்மாதிரியான கருத்தியல் முகங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத, இன, […]

Read more

தமிழக நாடார்கள்

தமிழக நாடார்கள் – ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு- இராபர்ட் எல்.ஹார்டுகிரேவ்- தமிழில்: எஸ்.டி.ஜெயபாண்டியன், அடையாளம்,  பக்.512. விலை ரூ.480. அமெரிக்காவைச் சேர்ந்த நூலாசிரியர் தனது ஆய்வுப் படிப்புக்காக 1960 இல் தமிழகம் வந்து பலரைச் சந்தித்து, மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு THE NADARS OF TAMILNADU என்ற நூலை எழுதியிருக்கிறார். அதன் தமிழாக்கமே இந்நூல். ஒரு காலத்தில் பின்தங்கியவர்களாகக் கருதப்பட்ட நாடார் சமூகத்தினர், தங்களுடைய உழைப்பாலும், முயற்சியாலும், சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ற பொருத்தமான செயல்களாலும் எவ்வாறு முன்னேற்றம் […]

Read more

தமிழ் இன்று

தமிழ் இன்று, கேள்வியும் பதிலும், இ. அண்ணாமலை, அடையாளம், பக்.182, விலை ரூ.170. தமிழ்மொழி தொடர்பாக பலருக்கும் எழுந்த பல்வேறு சந்தேகங்கள் சிஃபி, வல்லமை ஆகிய ஆன்லைன் இதழ்களில் கேள்விகளாகக் கேட்கப்பட்டு, அதற்குத்தக்க விடைகளும் நூலாசிரியரால் அளிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய வினா-விடைகளின் தொகுப்பே இந்நூல். எழுத்து, எழுத்துச் சீர்திருத்தம், சந்தி, கிரந்த எழுத்து, பிறமொழிச் சொற்கள், பேச்சுத்தமிழ், சொல், கலைச்சொல், இலக்கணம், செம்மொழி, தொன்மை, வளர்ச்சி, நடைவேறுபாடுகள் ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக நூலாசிரியர் விடையளித்துள்ளார். இந்த விளக்கங்கள் அனைத்தும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு […]

Read more

என் நினைவில் சே

என் நினைவில் சே, சே குவேராவுடன் என் வாழ்க்கை, அலெய்டா மார்ச், தமிழில் அ.மங்கை, அடையாளம், புத்தாநத்தம், விலை 250ரூ. போராளியின் மற்றொரு பரிமாணம் அலெய்டா மார்ச், சே குவேராவின் இரண்டாவது மனைவி. நான்கு குழந்தைகளுக்குத் தாய். கியூபா புரட்சிப் போரில் தலைமறைவு இயக்கத்திலும், கொரில்லா குழுவிலும் பணியாற்றியவர். கியூபாவின் பெண்கள் அமைப்பிலும், கல்வித்துறை, அயலகத்துறை ஆகியவற்றிலும் பணியாற்றியவர். தன் நினைவில் படிந்து நிற்கும் சேவை இந்த நூலில் பகிர்ந்துகொள்கிறார். கண்டிப்பான தலைவராக, கறாரான போராளியாக உலகம் அறிந்த சேவின் மற்றொரு பரிமாணத்தை நம்முன் […]

Read more

தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்

தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள், மெகஸ்தனிஸ் முதல் மா ஹுவான் வரை, தொகுப்பும் பதிப்பும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, தமிழில் மு.இரா.பெருமாள் முதலியார், அடையாளம், பக்.520, விலை ரூ.390. மிகச் சிறந்த வரலாற்றாசிரியரான நூலாசிரியர் தொகுத்தளித்திருக்கும் இந்நூல் தென்னிந்திய வரலாற்றில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சுகிறது.இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் பலரின் குறிப்புகளை இப்போது படிக்கிறபோது, வியப்பு ஏற்படுகிறது. சிலநேரங்களில் அதிர்ச்சியும். உதாரணமாக, கி.பி.673 இல் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த இட்சிங் அன்றைய கல்விமுறையை இப்படிக் குறிப்பிடுகிறார்: ‘அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு இந்தியா வழிவழியாகக் கடைப்பிடிக்கும் முறைகள் […]

Read more

மஞ்சள் பிசாசு

மஞ்சள் பிசாசு,  தங்கத்தின் அரசியல் பொருளாதார வரலாறு,  அ.வி.அனிக்கின், தமிழில்: நா.தர்மராஜன், அடையாளம், பக்.328, விலை ரூ.270. ரஷ்யமொழியில் 1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலின் மொழிபெயர்ப்பு இந்நூல். 1980 – 1982 ஆண்டுகளில் தங்கத்தின் விலை பாதியாகக் குறைந்துவிட்டது. அப்போது உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமாக, மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்தது, உலக அளவில் உற்பத்தியும், தொழில் முதலீடும் குறைந்தது தங்கத்தின் விலை குறைய இதுவே காரணமாகியது. வெறும் உலோகம் என்ற நிலையைத் தாண்டி, உலக முழுவதும் உள்ள பொருளாதார […]

Read more

சூல்

சூல், சோ. தர்மன், அடையாளம், பக். 500, விலை 380ரூ. விடுதலையடைந்து, 70 ஆண்டு காலத்தில் இன்றைய நீர்நிலைகள், குடிமராமத்து ஒழிந்து, பொதுப்பணி துறை, வனத் துறை, கனிம வளத் துறை, வருவாய்த் துறை போன்ற அரசின் பல துறைகளின் கண்காணிப்பில் அமைந்த மாற்றங்களையும், பசுமைப் புரட்சி தந்த நவீன வேளாண்மையும், பகுத்தறிவுப் புரட்சி தந்த சித்தாந்த அறிவும் சம்சாரிகளை முன்னேற்றிஉள்ளதா என்பதை கேள்வி கேட்க முனைகிறது இந்நாவல். ஆன்மிகத்தின் ஆணி வேராகவும், நம்பிக்கைகளின் நாற்றங்காலாகவும் விளங்கும் கிராமங்களில் நிகழ்வுறும் நிகழ்வுகளை, வட்டார வழக்கில் […]

Read more

ஜென் சதை ஜென் எலும்புகள்

ஜென் சதை ஜென் எலும்புகள், பால் ரெப்ஸ், நியோஜென் சென்ஸகி, தமிழில் சேஷையா ரவி, அடையாளம், பக். 192, விலை 160ரூ. அமெரிக்கரான பால் ரெப்ஸ், சர்வதேச அளவில் புகழ்பெற்ற புத்த ஞானி நியோஜென் சென்ஸகி ஆகியோரால் தொகுக்கப்பட்ட படைப்புகளின் தமிழாக்கமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. மூல படைப்பில் உள்ள கருத்துகளைச் சேதமின்றி தமிழில் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது. நம் சிந்தனையைத் தூண்டும் வகையிலான உரையாடல்கள், நகைச்சுவை சம்பவங்கள், அனுபவ வழிகாட்டுதல்கள் 101 ஜென் கதைகளில் இடம்பெற்றுள்ளன. மறுபிறப்பு, […]

Read more

சூல்

சூல், சோ. தர்மன், அடையாளம், பக். 500, விலை 380ரூ. “தூர்வை’‘, “கூகை‘’ நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன். ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய “தரிசு நில மேம்பாடு’ புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார். எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்குள்ள கண்மாயை தூர்வாரி மராமத்துப் பணியை கிராமத்தினர் தொடங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த நாவல். கண்மாயின் காவலனாக நீர்பாய்ச்சி, ஊர் பெரிய மனிதர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்தாலும் வழக்கம்போல் பிரச்னைகள் சூழ கதைக்களம் பல […]

Read more
1 2 3