கிளாரிந்தா

கிளாரிந்தா, அ. மாதவையா, தமிழில் சரோஜினி பாக்கியமுத்து, அடையாளம், பக்.284, விலை ரூ.230. இந்த புதினம், தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் வரலாற்று நாவலாகும். 1978-இல் முதல் பதிப்பாக கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் சார்பில் இந்நாவல் வெளியிடப்பட்டது. அதன் மறுபதிப்பு இந்நூல். கி.பி.1746-ஆம் ஆண்டு தொடங்கி 1806-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், கர்நாடக நவாபின் வாரிசு மயூஸ்கான் தலைமையில் இந்தியப் படைக்கும், என்ஜினியர் பராடிஸ் தலைமையில் பிரெஞ்சுப் படைக்கும் நடந்த கடும் போருடனும், தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் ஆட்சியின் பின்னணியில், “கிளாவரிந்தாபாய்’ […]

Read more

பின்நவீனத்துவம்

பின்நவீனத்துவம், தொடக்கநிலையினருக்கு, ஜிம் பவல், தமிழில க. பூரணசந்திரன், அடையாளம், பக். 164, விலை 160ரூ. வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கான ஒரு புதிய சிந்தனை முறை பின்நவீனத்துவம். எனினும் இந்தப் பின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்வதே பலருக்கு மிக மிகச் சிரமமான ஒன்று. பின்நவீனத்துவத்தை எளிய முறையில் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் கேள்வி – பதில் வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூல் முழுக்க ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மார்க்சியம், கிறிஸ்தவம் அல்லது அறிவியல் என்பதன் உலகப் பொதுவான கொடியின் கீழ் எல்லா உலகமும் ஒரு […]

Read more

காடோடி

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 காடோடி, நக்கீரன், அடையாளம், விலை 270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024312.html தமிழில் கவனம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாக்க முயற்சி ‘காடோடி’. உலகின் பழமையான, பிரம்மாண்டமான போர்னியோ காடுகளில் பணிபுரிந்த எழுத்தாளர் நக்கீரன், காடுகளைப் பற்றி நமக்கென்ன தெரியும் என்ற கேள்வியை நாவல் மூலம் எழுப்புகிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

நிலவொளி எனும் இரகசிய துணை

நிலவொளி எனும் இரகசிய துணை, கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும், அடையாளம், புத்தாநத்தம், விலை 200ரூ. தமிழ்ப் படைப்புலகத்தைப் பொறுத்தவரை 1990களில் மிகவும் முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் சிக்கலான இலக்கிய, தத்துவக் கருத்தாக்கங்களையும் உரையாடக்கூடிய மொழியில் அறிமுகம் செய்த எம்.டி. முத்துக்குமாரசாமி முக்கியமானவர். இவரது சிறுகதைகள் அக்காலத்தில் தேக்கமடைந்திருந்த தமிழ் நவீனச் சிறுகதை மொழியைப் பரிசீலிக்கத் தூண்டியவை. அவர் சமீப காலத்தில் தனது வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளின் தொகுதி இது. தமிழில் மொத்தை மொத்தையாக சீரியதும் சிறப்பும் இரண்டும்கெட்டானும் மோசமானதுமாகப் படைப்புகளைக் கலந்துகட்டிப் […]

Read more

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை, ஆங்க் ஸ்வீ சாய், அடையாளம், புத்தாநத்தம், விலை 320ரூ. பாலஸ்தீனத்தில் தொடரும் துயரங்கள் இந்நூலின் ஆசிரியரான மருத்துவர் ஒரு சீனர். இவர் சிறு வயதில் இஸ்ரேலிய ஆதரவாளராக வளர்க்கப்பட்டவர். அராபியர்கள் குறித்த எதிர்மறையான எண்ணமே அவருக்கு இருந்துள்ளது. 1982ம் ஆண்டில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் பெய்ரூட் நகரத்தை இடைவிடாமல் தாக்கியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். இஸ்ரேல் குறித்த பார்வை மாறத் தொடங்கியது. பெய்ரூட்டில் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்குச் சேவை செய்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இவர் லண்டனில் பார்த்துவந்த பணியை […]

Read more

திருவாரூர் கே. தங்கராசு நினைவலைகள்

திருவாரூர் கே. தங்கராசு நினைவலைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-212-2.html 1947ஆம் ஆண்டிலிருந்து தந்தை பெரியாரின் தலைமையில் இயக்கப் பணியாற்றி கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற திருவாரூர் கே. தங்கராசுவின் பெரியார் பற்றிய, கழகம் பற்றிய நினைவலைகளின் தொகுப்பே இந்நூல். அந்த வகையில் இது அறுபத்தைந்து ஆண்டுகால திராவிடர் இயக்கத்தின் வரலாறாக காணும் தகுதி கொண்டிருக்கிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவராக […]

Read more

இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும்

இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும், தமிழில்-மருத்தவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர், அடையாளம், அடையாளம் 1205/1, கருப்பூர் சாலை புத்தாநத்தம், திருச்சி 621310. விலை 40ரூ. உடல்நலம் காக்கும் கையேடு, இந்நூல் மேயோ கிளினிக்னின் ஹை பிளாட் பிரஷர் அண்ட் யுவர் ஹார்ட்- 5 ஸ்டெப்ஸ் யு கேன் டேக் தட் சேவ் யுவர் லைஃப் என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம். உடன் இருந்தே மௌனமாகக் கொல்லும் நோய் என ரத்த மிகை அழுத்தத்தை மருத்துவ உலகில் சொல்வதுண்டு. ஒருவருக்கு ரத்த மிகை அழுத்தம் இருக்கிறது […]

Read more

ஈழம் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்

ஈழம் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், யமுனா ராஜேந்திரன், அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி மாவட்டம், விலை 550ரூ. விடுதலைப் புலிகளை ஆராதிக்கும் புத்தகங்கள் அதிகம். விடுதலைப் புலிகள் என்றாலே பாசிஸ்ட்டுகள் என்று பாய்ந்து பறாண்டும் புத்தகங்களும் அதைவிட அதிகம். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பை அதற்கான பலம், பலவீனங்களுடன் நடுநிலைமை தவறாமல் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் குறைவு. அதில் ஒன்று யமுனா ராஜேந்திரனின் இந்தப் புத்தகம். எதைப் பற்றி எழுதினாலும் அதனுடைய நுண்மையான அரசியலுக்குள் நுழைந்து, சகல தரப்பையும் அலசி ஆராய்ந்து எழுதக் […]

Read more

வெள்ளை மொழி

வெள்ளை மொழி, அரவாணியின் தன் வரலாறு, ரேவதி, அடையாளம், புத்தாநத்தம் 621310, பக். 271, விலை 200ரூ. நாமக்கல்லில் துரை சாமியாகப் பிறந்தவர், ரேவதி என்னும் திருநங்கையாக தன்னை மாற்றிக் கொண்டதற்கு முன்பும் பின்பும் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், தன் வரலாறாகச் சொல்லிச் செல்லும் நூல். பெண் உணர்வோடு ஆணாக வளைய வரும் ஒருவருக்கு, ஆதரவாக இருக்க வேண்டிய குடும்பத்தினர், அவரை வெறுப்பதாலேயே அவர், தன்னுடைய சுயத்தை மீட்டெடுக்க குடும்பத்தை விட்டு வெளியேறி, சமூகத்தின் பொதுவெளியில் பல துயரங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை […]

Read more

இக்கால மொழியியல் அறிமுகம்

இக்கால மொழியியல் அறிமுகம், கு.பரமசிவம், அடையாளம், புத்தாநத்தம், திருச்சி மாவட்டம், பக். 70, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-8.html மொழியியல் என்பது ஓர் அறிவியல். இது மொழியைக் கற்பிப்பதற்குப் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, பேச்சு சிகிச்சையிலும் மொழியியல் பயன்படுகிறது. இக்காலத்துக்குத் தேவையாக இருக்கிறது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூல் மறுபதிப்புச் செய்யப்பட்டிருப்பது இந்தக் காலத்தின் தேவையை நிறைவு செய்கிறது. மொழியியல் என்றால் என்ன என்று விளக்குவதில் ஆரம்பிக்கும் நூல். இக்கால மொழியியலின் அடிப்படைக் கொள்கைகளை அறிமுகப்படுத்துகின்றது. ஒலியன், […]

Read more
1 2 3