உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம்

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம், ஆ.இரா.வேங்கடாசலபதி, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், விலை 600ரூ. சுவடிகளில் மட்டுமே இருந்த பழங்கால தமிழ் இலக்கியங்களைத் தேடிச் சென்று எடுத்து பதிப்பித்து அவற்றுக்கு உயிர் கொடுத்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர், 1877 முதல் 1942 வரை தனக்கு வந்த அத்தனை கடிதங்களையும் பத்திரப்படுத்தி வைத்து இருந்தார். ஜி.யு.போப், மறைமலையடிகள், மனோன்மணியம் சுந்தரனார், சி.தியாகராஜசெட்டியார் மற்றும் பல ஜமீன்தார்கள், ஆதுனகர்த்தர்கள் போன்ற பலர் எழுதிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை பொக்கிஷமாக சேகரித்து இருந்தார். இவற்றில் 700 கடிதங்கள் முதல் தொகுப்பாக […]

Read more

ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள்

ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள், ஆ. இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ. வரலாற்றை வெற்றி கொள்ளும் வழி! பாரதி, வ.உ.சி., மறைமலையடிகள், புதுமைப்பித்தன் ஆகியோரது வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் மீது ஆ.இரா.வேங்கடாசலபதியின் எழுத்துக்கள் இதுவரை வெளிச்சம் பாய்ச்சி வந்ததை அறிவோம். இதோ இப்போது இந்த வரிசை மேலும் கூடுகிறது… ஜி.யு.போப், உ.வே.சாமிநாதையர், ம.வீ.இராமானுஜாசாரியர், டி.வி.சாம்பசிவம் பிள்ளை, எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார், ரா.அ.பத்மநாபன், ஸி.எஸ்.சுப்பிரமணியம், தே.வீரராகவன் ஆகிய ஆளுமைகளின் பன்முகத்திறமைகள் அடையாளப்படுத்துகின்றன. இவர்களோடு பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், எரிக் ஹாப்ஸ்பாம் ஆகியோரது திறனும் சொல்லப்படுகிறது.அனைத்துக்கும் […]

Read more

முச்சந்தி இலக்கியம்

முச்சந்தி இலக்கியம், ஆ. இரா. வேங்கடாசலபதி, காலச்சுவடு, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-058-1.html கடந்த 19ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, 20ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி வரையிலான, தமிழ் சமூகத்தின், அரசு அதிகாரத்திற்கு எதிராக, கலகத்ததை ஏற்படுத்திய வெகுமக்களின் வரலாற்றை, முச்சந்தி இலக்கியம் எனக் கூறப்பட்ட, குஜிலி இலக்கியங்கள், தன்னுள் கொண்டுள்ளன. அவை, மலிவான அச்சில் பதிப்பிக்கப்பட்டு, காலணா, அரையணாவிற்கு மக்கள் கூடும் இடங்களில் விற்கப்பட்டன. இந்த இலக்கியத்தை அறிமுகம் செய்வதோடு, அதை பற்றிய தெளிவுகளை நமக்கு […]

Read more