கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிகேஷன்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 29. இந்நூலாசிரியர், இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றியவர். இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை படம்பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், இவற்றைக் களைந்து இந்தியாவை செழிப்பான ஒரு நாடாக ஆக்கிக் காட்டும் வழிகளை இந்நூலில் கூறியுள்ளார். வாசகர்களுக்குப் போரடிக்காமல் இருக்க, விறுவிறுப்பான நாவலாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் இறையருளால் பிரதமராகி, நாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் கதைக்கரு. […]

Read more

கம்பன் சில தரிசனங்கள்

கம்பன் சில தரிசனங்கள், பேராசிரியர் மு. ராமச்சந்திரன், ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை, 12, தாண்டல் கந்தசாமி ராஜா தெரு, ராஜபாளையம் 626117, பக். 136, விலை 110ரூ. சிவகாசி கல்லூரி ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் மு. ராமச்சந்திரன் மிகச்சிறந்த பட்டிமன்ற நாவரசர். கம்பராமாயணக் கடலில் மூழ்கி பத்து முத்தான கட்டுரைகளை எழுதி, முன்வைத்துள்ளார். அனுமனும், இலக்குவனும், ராமனுக்கு செய்த பயன் கருதாத தொண்டு, முதலில் நம்மை வரவேற்கிறது. தம்பியர் அறுவர் கட்டுரையில் குகன் அன்பினன் பெருமாள், சுக்ரீவன் அரசியலாளர் மகாராஜா, […]

Read more

கிராமத்து ராட்டினம்

கிராமத்து ராட்டினம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இன்டஸ்ட் ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 85ரூ. இயல்பு எல்லையைத் தாண்டாமல் கதை சொல்வதென்பது சிலருக்கு வரம். அப்படியொரு வரம் வாய்க்கப்பெற்றவர் எழுத்தாளர் ஜீ. மீனாட்சி என்பது இந்த நூலில் அவர் படைத்திருக்கும் பதினோரு கதைகளிலுமே தெரிகிறது. வாழ்க்கைச் சக்கரம் எப்போதுமே மேலே இருந்தவர்களை கீழே தள்ளியும், கீழே இருந்தவர்களை மேலே உயர்த்தி வைத்தும் தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதை இவரது கிராமத்து ராட்டினம் கதை […]

Read more

கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், தமிழருவி மணியன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக்கங்கள் 192, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-834-1.html தேசிய, இலக்கிய படைப்பாளி தமிழருவி மணியன். எழுத்திலும், பேச்சிலும் வெற்றிக் கொடி நாட்டிய இவர் மகாகவி பாரதியாரின் கவிதைகளிலும், கட்டுரைகளிலும், வாழ்விலும் புதைந்து கிடக்கும் புதுமைகளை, இந்த நூலில் வெளிப்படுத்துகிறார். தன்னைப் பற்றியே நினைத்து வாழ்ந்த சராசரி மனிதர்களுக்கு நடுவே மண்ணைப் பற்றியே சிந்தித்து செயற்பட்ட மகாகவியைக் காட்டுகிறார் மணியன். பாரதியைப் புதிய […]

Read more