மனம் எனும் வனம்

மனம் எனும் வனம், மாலன், கவிதா பப்ளிகேஷன், விலைரூ.60. வனத்தின் வாசல் என்ற தலைப்பிலேயே உள்ள கவிதைகளின் தலைப்புகளை அறிமுகம் செய்த ஆசிரியரின் கவித்துவம் புலப்படுகிறது. எழுத்து இதழில் கவிதை பயணம் துவங்கிய மாலன், கதாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்று பன்முகம் காட்டி ஜெயித்தவர்; புதுக்கவிதைகளிலும் ஜெயித்து உள்ளார். கொரோனா பற்றி பாடுகிறார்; குறும்பு கொப்பளிக்கிறது. என் கவிதையைப் போல நீ எடை குறைவு எனினும் வீரியம் அதிகம்! கொரோனா மற்றும் கவிதைக்கும் எடை குறைவு தானாம். தாக்கும் சக்தி மிக அதிகமாம். […]

Read more

என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், கவிதா பப்ளிகேஷன், விலைரூ.300 வார இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘இன்னும் கொஞ்சம் இனிப்பு சேராதா?’ முதல், ‘கனவுகளும் கருகலாமா?’ என்பது வரை, 71 தலைப்புகளில் சமூகம் குறித்து பேசும் நுால். உறவு, குழந்தை மனம், காதல், கனவு, கலை, நம்பிக்கை, சாதனையாளர்கள், சிறந்த மனிதர்கள், அரசியல், ஆன்மிகம், ஊடகம், பிரபலங்கள், சமூக சூழல், வாழ்வியல் குறித்த தலைப்புகளில் எழுதி உள்ளார். தமிழகம் முதல், உலக அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் வரை, அவர்களின் குணங்கள், அதிகாரம், அரசியல் தந்திரங்களை […]

Read more

அர்த்தமற்ற மனித மனம்

அர்த்தமற்ற மனித மனம் (அறம், மரம் மறந்ததேனோ), வ.ராஜ்குமார்,கவிதா பப்ளிகேஷன், பக்.176, விலை ரூ.160. அறம் என்பது ஒழுக்கப் பண்புகளையும், மரம் என்பது இயற்கைச் செல்வத்தையும் குறிக்கும். ஒழுக்கமாகிய அறத்தையும், இயற்கைச் செல்வமாகிய மரத்தையும் வளர்ப்பதுவே நம் எல்லாருடைய இலக்காக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளில் தங்களின் உண்மையான முகத்தைக் காட்டும் தருணங்களில் மட்டுமே மனிதர்களின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ள முடியும். சாதாரணமாகத் தெரிந்து கொள்ள முடியாது என்று கூறும் நூலாசிரியர் தான் படித்த, கற்றுக் கொண்ட […]

Read more

நீ நதி போல ஓடிக் கொண்டிரு

நீ நதி போல ஓடிக் கொண்டிரு, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன், பக்.120, விலை ரூ.100. பெண்களின் பிரச்னைகளைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். தீர்வுகள் சொல்லலாம். ஆனால் ஒரு பெண் தன் பிரச்னைகளுக்கான தீர்வுகளைச் சொல்வதைப் போல ஓர் ஆணால் சொல்ல முடியாது என்பதற்கு இந்நூலே ஓர் எடுத்துக்காட்டு. பெண்களை வீட்டில் யாரும் பாராட்டுவதில்லை. தேவையற்ற பழிச்சொற்களுக்குப் பெண்கள் ஆளாக நேரிடுகிறது. பேருந்துகளில், பொது இடங்களில் பெண்கள் ஆண்களால் சீண்டப்படுகிறார்கள். பெண்கள் தனியாக தொலைதூரங்களுக்கு ஆண்களைப் போல பயணம் செய்ய முடியாது. பெண்கள் […]

Read more

பூர்ணிமா.காம்

பூர்ணிமா.காம், பட்டிமன்றம் ராஜா, கவிதா பப்ளிகேஷன், பக்.184, விலை ரூ.130. வங்கிப் பணியாளராக இருந்த ராஜா, பட்டிமன்றப் பேச்சாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், திரைப்பட நடிகர் என்ற பன்முகத் திறன் படைத்தவர். மதுரை அருகே உள்ள சிறிய கிராமமான கீழமாத்தூரில் பிறந்து வளர்ந்தவர். தனது வாழ்க்கை அனுபவங்களை மங்கையர் மலர் இதழில் தொடராக எழுதினார். அதனுடைய நூல் வடிவம் இது. இளம் வயதில் மின்சார விளக்கு இல்லாத வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு படித்து தனது முயற்சியினால் முன்னேறிய நூலாசிரியர், தனது வாழ்க்கை அனுபவங்களை மிகவும் சுவையாக […]

Read more

புறநானூறு

புறநானூறு (புதிய வரிசை வகை),  சாலமன் பாப்பையா,  கவிதா பப்ளிகேஷன், பக். 928, விலை ரூ.800. புறநானூறு அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், புலவர்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை, அரசாட்சி, அறச்செயல்கள், உலகத்து நிகழ்ச்சிகள் எனப் பலவற்றையும் உள்ளது உள்ளவாறு எடுத்துரைக்கும் ஓர் வரலாற்று ஆவணமாகும். புதிய வரிசை வகை என்பதற்கேற்ப, மன்னர்களின் கால வரிசைப்படியோ, திணை அடிப்படையிலோ, பாடிய புலவர்களின் வரிசைப்படியோ  பாடல்கள் தொகுக்கப்படவில்லை என்பதும், மன்னர் ஒருவரைப் பற்றிய பாடல்களும் கூடத் தொடர்ச்சியாக அமையாமல் அங்கொன்றும் […]

Read more

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்.

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்., பொம்மை சாரதி,  கவிதா பப்ளிகேஷன், பக்.280, விலை ரூ.200. எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகிய இதழாசிரியரான பொம்மை' சாரதி எழுதியிருக்கும் இந்நூலில், 1949 -இல் பேசும் படம்  இதழுக்காக எம்.ஜி.ஆர். அளித்த முதல் பேட்டி இடம் பெற்றிருக்கிறது. நடிகன் குரல்இதழில் பல்வேறு வாசகர்களின் கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில்கள், ஜெயலலிதா – எம்.ஜி.ஆர் நேர்காணல், கல்லூரி மாணவி மீராவுக்கு எம்.ஜி.ஆர். அளித்த விரிவான பேட்டி கல்கண்டு இதழில் தமிழ்வாணன் எம்.ஜி.ஆர்.குறித்து எழுதிய கேள்வி – பதில்கள் எனப் பலவற்றையும் தொகுத்து, கேள்வி […]

Read more

மிர்ஸா காலிப்

மிர்ஸா காலிப் (மொழிபெயர்ப்பில்) – துயரின் இதழ்களில் விரியும் புன்னகை, பாரஸீகத்திலிருந்து ஆங்கிலத்தில் மூஸா ராஜா, ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன், கவிதா பப்ளிகேஷன், பக்.264, விலை ரூ.275. புகழ்பெற்ற உருது, பாரசீக மொழி கவிஞரான மிர்ஸா காலிப்பின் பாரசீக கவிதை நூலை மூஸா ராஜா ஆங்கிலத்தில் THE SMILE ON SORROW என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பல கவிதைகளை மொழிபெயர்ப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்ற லதா ராமகிருஷ்ணன் தமிழில் தந்திருக்கிறார். கவிஞர் மிர்ஸா அஸாதுல்லா கான் காலிப் 1797 – […]

Read more

கம்பனின் தமிழமுது

கம்பனின் தமிழமுது,சாலமன் பாப்பையா,கவிதா பப்ளிகேஷன், பக்.336, விலை ரூ.300. சாலமன் பாப்பையாவின் கம்பனின் தமிழமுது என்ற இந்நூலில், துளசி இராமாயணத்தில் உவமைகள், கம்பனும் பாரதிதாசனும், இராமாயணத்தில் அர்த்த பஞ்சகம், கம்பனில் அமரர்கள், கம்பனின் சூரியன், கம்பனின் கற்பனைகள், கம்பரும் அ.ச.ஞா.வும், மணிவாசகரும் கம்பரும், காப்பிய உதயம் என 9 முத்தான கட்டுரைகள் அடங்கியுள்ளன. துளசி இராமாயணத்தில் உவமைகள் கட்டுரையில், ராமனுக்கும் பரதனுக்கும் உள்ள பாசத்தை விளக்க, ஆமை எப்படி தனது முட்டைகளை மார்பில் வைத்துக் காக்குமோ, அதுபோல ராமன் இரவு பகல் பரதன் நினைவையே […]

Read more

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (எ) துளசிதாசரின் அஷ்டப் பிரபந்தம்

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (எ) துளசிதாசரின் அஷ்டப் பிரபந்தம் , தொகுப்பாசிரியர்: கோ. எழில்வேந்தன், கவிதா பப்ளிகேஷன், பக்.416; விலை ரூ.300 அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன் என்னும் புகழ்ச் சொல்லுக்கு உரியது இந்நூல். இதை இயற்றிய பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் திவ்யகவி அதாவது தெய்வத் தன்மை பெற்ற கவி எனப் புகழப்படுபவர். நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்குப் பிறகு தமிழ் வைணவ நூல்களில் மிகவும் போற்றுதற்குரியதாக அஷ்டப் பிரபந்தம் விளங்குகிறது. பிரபந்தத்தின் கருத்துச் செறிவு, வைணவ குருபரம்பரையைச் சேர்ந்த அருளாளர்களின் வைபவங்கள் அடங்கியது இது. திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து […]

Read more
1 2 3 7