மாண்புமிகு வள்ளுவம்

மாண்புமிகு வள்ளுவம், க. அன்பழகன், கே.ஜி.பப்ளிகேஷன்ஸ், பக். 101, விலை 90ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஒன்பது வகையான பொருண்மைகளில் ஆராய்ந்து, விளக்கம் தரும் நூல். திரும்பத் திரும்ப வாசித்தால் புதுப்புது பொருள் தரும் தன்மை கொண்ட திருக்குறளுக்கு, நூலாசிரியரின் விளக்கங்கள் மேலும் ஒரு புது விளக்கத்தைத் தருகிறது. உரையாசிரியர்களின் நோக்கில் நின்று குடும்ப உறவுகள் குறித்த விளக்கம் சிறப்பு. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

பேருந்து

பேருந்து, ஹரணி, கே.ஜி. பப்ளிகேஷன்ஸ், பக். 120, விலை 120ரூ. தன் பயண வாழ்வின் ஒரு பகுதியாக அன்றாட வாழ்வில் அலையும் மக்களின் அவலங்களை மனிதமன ஓட்டங்களை நாவலாக பதிவு செய்துள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.   —- டிஜிட்டல் வாழ்க்கை, பத்மினி பட்டாபிராமன், தென்றல் நிலையம், பக். 208, விலை 150ரூ. டிஜிட்டல் துறையில் நவீனமாகிவரும் தொழில் நுட்பங்களை, மீடியா மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுதியுள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.

Read more

நத்தையோட்டுத் தண்ணீர்

நத்தையோட்டுத் தண்ணீர், கே.ஜி. பப்ளிகேஷன்ஸ், 31, பூக்குளம் புதுநகர், கரந்தை தஞ்சாவூர், பக். 80, விலை 60ரூ. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது போலவே எல்லாமும் நமக்குள்ளேயே நடந்தேறி விடுவதை நாகரிகமான முறையில் நம்முன் எடுத்துவைக்கிறார் ஹரணி. வாசிப்பு அனுபவம் நம்மை அடையாளப்படுத்தும் என்கிறார். சுட்டிக் காட்டுவது நடப். சுடப்படுவத நட்பல்ல என்கிறார். காற்று நுழைய முடியாத இடத்தில் கூட கடித உணர்வுகளை நுழைக்கிறார். சந்தர்ப்பவாதிகளை மன உறுதியோடு தவிர்க்க உதவுகிறார். வழிகாட்டிகளையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளையும் இனம் காண வைக்கிறார். மொத்தத்தில் ஹரணி […]

Read more