அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம், கௌதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம், விலை 175ரூ. சங்க காலம் தொடங்கி நமது அரசர்கள், மானுட வாழ்வை மேம்படுத்த நன்னெறி கொண்டு வாழ்வில் நாம் சிறந்தோங்க ஆன்மிகம் என்னும் அன்பு நெறியை வளர்த்துத் தந்த வரலாற்றுச் செய்திகளை, நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகளை அருமையான கதைகளாகத் தொகுத்து அளித்திருக்கிறார் எழுத்தாளர் கவுதம நீலாம்பரன். புராணத்தில் பேசப்பட்ட அரசர்களாகட்டும் அல்லது சமீபத்தில் வாழ்ந்த கட்டபொம்மன் போன்ற மன்னர்களாகட்டும் இவரது கைவண்ணத்தில் மெருகேறி, மிகச்சிறந்த பாத்திரங்களாக உருவெடுக்கிறார்கள். கதை சொல்லும்பொழுது ஒரு இடத்தின் அழகைச் சொல்லி, […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சென்னை புக்ஸ், சென்னை, பக். 328, விலை 175ரூ. நமது பாரம்பரியப் பொக்கிஷமான மகாபாரதத்தில், எல்லா காலத்துக்கும் பொருந்தும் வழிகாட்டுதல்கள் நிறைந்துள்ளன. அதர்மமும், ஆவணமும் அழிவை ஏற்படுத்தும், நற்பண்புகளே நல்ல வாழ்க்கையை வழங்கும், தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும் மறுபடியும் தர்மம் வெல்லும் ஆகியவை போன்ற ஒப்பற்ற அறிவுரைகளை கதைப்போக்கிலேயே வழங்கும் மகாபாரதம், படிப்பவர்களிடம் பொறுமை, சகிப்புத்தன்மை, ஆத்ம சக்தி ஆகியவற்றை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும், இந்த இதிகாசத்தை, இனிமை நிறைந்த நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் கள்ளிப்பட்டி […]

Read more

ட்ரஷர் ஆப் இந்தியன் மியூசிக்,

ட்ரஷர் ஆப் இந்தியன் மியூசிக், கே.ஏ. பக்கிரிசுவாமி பாரதி, குருகலம் அகாதமி, சென்னை 78, பக். 720, விலை 440ரூ. இசையும் பரதமும் நமது நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் இருகலைகள். இவ்விரு கலைகளைப் பற்றியும் பல பயனுள்ள தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. 72 மேளகர்த்தா ராகங்கள், அவற்றின் ஸ்வரஸ்தானங்கள், 35 தாள வகைகள் பற்றிய விளக்கங்கள், கடபயாதி திட்டம், வாக்கேயகாரர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், சுமார் 130 ராகங்களின் ராக லட்சணங்கள், வாக்கேயக்காரர்களின் முத்திரைப் பட்டியல், தேவாரம், திவ்யப்பிரபந்தம் பற்றிய […]

Read more