சங்கீத வித்துவான்கள் சரித்திரம்

சங்கீத வித்துவான்கள் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், பதிப்பாசிரியர் மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, சென்னை, பக். 112, விலை 80ரூ. இசையும் தமிழ்த் தாத்தாவும் தமிழ், தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர வாய்ப்பாடு மற்றும் வாத்திய இசை வித்துவான்கள் 402 பேர்களைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய குறிப்புகளின் தொகுப்புதான் ‘சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’ என்ற நூல். 1914ல் எழுதப்பட்ட வித்துவானக்ள் பற்றிய குறிப்புகள் இப்போதுதான் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. உ.வே.சாவின் […]

Read more

ரேஷன் கார்டு கையேடு

ரேஷன் கார்டு கையேடு, ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ. மக்களுக்குத் தெரிய வேண்டிய தகவல்களை சேகரித்து, பொக்கிஷம் என்ற பொதுத் தலைப்பில் புத்தகங்களாக எழுதி வெளியிடுகிறார் வடகரை செல்வராஜ். இப்போது அவர் எழுதியுள்ள பொக்கிஷம் ரேஷன் கார்டு. இக்காலக்கட்டத்தில் மற்ற அடையாள கார்டுகளைவிட மக்களுக்கு அத்தியாவசியமாக விளங்குவது ரேஷன் கார்டு(குடும்ப அட்டை). புதிதாக ரேஷன் கார்டு வாங்க என்ன செய்ய வேண்டும், கார்டில் பெயர்களைச் சேர்க்கவோ, நீக்கவோ உள்ள விதிகள் என்ன? ரேஷன் கார்டு காணாமல்போனால் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற […]

Read more

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், டாக்டர் உ.வே. சாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல் கடற்கரை சாலை, பெசன்ட் நகர், சென்னை 600090, பக். 744, விலை 400ரூ. ஊர் தோறும் ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஒப்புநோக்கித் தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகிற்கு தந்தவர் டாக்டர் உ.வே. சாமிநாதையர். தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் போற்றும் அளவிற்குச் சங்க இலக்கியங்களையும், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலான காப்பியங்களையும் பதிப்பித்தார். அந்த டாக்டர் உ.வே. சாமிநாதையருக்கு ஆசிரியர் என்னும் சிறப்பைப் […]

Read more
1 2