அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலைரூ.200. சென்னையிலிருந்து இடம்பெயர்ந்த 10ம் வயதில் பள்ளியில் சேர்வதற்கான மாற்றுச் சான்றிதழ் கிடைக்கக் காலதாமதமானபோது அப்பா, தாத்தாவின் மரப்பெட்டிகளைக் குடைந்து கிடைத்த பழைய இலக்கியங்கள் பற்றி பேசும் நுால். அவை இன்னதென அறிய இயலா இளமைக் காலத்திலேயே தனிப்பட்ட ஈர்ப்பு வந்ததாக குறிப்பிடுகிறார். ‘மறந்துபோன பக்கங்கள், வடுவூர் துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி, ஓலைச் சுவடிகள், அந்தக் கால விளம்பரங்கள், நாடி சோதிடம் புரியாத புதிரா, எழுத்து மூவர், விடுதலைக்கு முந்தைய சமய இதழ்கள், […]

Read more

சாவர்க்கரின் வாக்குமூலம்

சாவர்க்கரின் வாக்குமூலம், ஜனனி ரமேஷ், தடம் பதிப்பகம், விலை 100ரூ. மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இந்து மகாசபைத் தலைவரான சாவர்க்கர், தான் குற்றமற்றவர் என்று கொடுத்த வாக்குமூலத்தின் முழு விவரம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாவர்க்கரின் இந்த வாக்குமூலத்தில் இந்திய வரலாற்றுச் செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/5/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031349_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

சிறகு முளைத்தது

சிறகு முளைத்தது, நரசிம்மன், தடம் பதிப்பகம், விலைரூ.220.   கடந்த காலத்தை மீட்பது இயலாத காரியம். அது கற்பித்த பாடங்களை தெரிந்து கொள்வது அவசியம். இதை, இந்நுால் நிவர்த்தி செய்கிறது. கடந்து வந்த பாதையை, 40 தலைப்புகளில் விவரித்துள்ளார். அப்பா, 50 வயதில் சட்டப் படிப்பை முடித்து, வக்கீலாக பணி செய்தார். என், 30 வயதில், குடும்பக் கடன்களை எல்லாம் அடைத்தார். கடன் இல்லாத வாழ்க்கையை அடிமட்டத்தில் இருந்து துவங்கினார்…’ என, நெகிழ்வான சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். சுயசரிதையாக இருந்தாலும், வரலாற்று தகவல்களையும் தந்துள்ளார். சென்னையில், […]

Read more

பா.ஜ.க வடகிழக்கை வென்ற வரலாறு

பா.ஜ.க வடகிழக்கை வென்ற வரலாறு, எஸ்.ஜி.சூர்யா, தடம் பதிப்பகம், விலைரூ.300 குறிப்பிட்ட கட்சி தேர்தல் செயல்பாட்டில் மேற்கொண்ட உத்தி சார்ந்து விரிவாக எழுதப்பட்டுள்ள புத்தகம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் தேர்தல் உத்தி சார்ந்து ஒப்பீட்டு வாய்ப்பை வழங்குகிறது. ஓட்டுக்கு நோட்டு கொடுக்காமல், இலவசங்கள் பற்றி அறிவிக்காமல் சாதித்துள்ள வெற்றி என குறிப்பிட்டுள்ளார். இலக்கை நிர்ணயித்து, களத்தில் பணியாற்றி, ஒருங்கிணைத்து, எதிர்க் கட்சிகளை பின்தள்ளிய கதை விவரிக்கப்பட்டுள்ளது. அரசியல் எதிரியான காங்கிரஸ், சித்தாந்த எதிரியான கம்யூனிஸ்ட் கட்சிகளை, வட […]

Read more

பாரதி என் காதலன்

பாரதி என் காதலன், நெல்லை கணேஷ், தடம் பதிப்பகம், விலைரூ.100. மகாகவி பாரதி குறித்து தொகுக்கப்பட்டுள்ள நுால். பறவைகளை மென்மையாக கையாண்டார் பாரதி. ஒரு கணத்தில் மனைவி குறித்து, ‘நான் கொஞ்சம் கடிந்து பேசி விட்டேன். அப்படி பேசியிருக்கக் கூடாது; அவள் என்ன சொல்ல வந்தாள் என யோசித்திருக்கலாம்’ என்கிறார். ‘வெள்ளை முண்டாசு வாங்கி அணிவதற்கே காசு இல்லை. காசியில் பல வண்ணங்களில் துண்டு அணிவதை பார்த்தேன். எனக்கும் அது போல் அணிய ஆசை…’ என நண்பரிடம் குறிப்பிட்டுள்ள விபரமும் பதிவாகியுள்ளது. பாரதி குறித்த […]

Read more

வேணுவனவாசம்

வேணுவனவாசம், சுகா, தடம் பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. திருநெல்வேலியின் ஆதி பெயர், வேணுவனம்’ என்பது இந்நுாலின் பெயராய் இடம்பெற்றுள்ளது. கதை மற்றும் கட்டுரை வடிவில், நெல்லையின் வட்டார மொழி நடையிலேயே எழுதியுள்ளார் ஆசிரியர் சுகா. இதில் முத்திரை பதித்துள்ள, ‘ராயல் டாக்கீஸ்’ சிறுகதை, ‘விருட்சம்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியது. அந்த கதையின் முதலும், முடிவும் படிக்கும்போதே வலியைத் தருவதாக அமைந்துள்ளது. – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029578.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சில கருத்துகள் சில சிந்தனைகள்

சில கருத்துகள் சில சிந்தனைகள், லட்சுமணப் பெருமாள், தடம் பதிப்பகம், பக். 216, விலை 200ரூ. அரசியல் கட்சிகளின் நுண்ணரசியல், சூழலியல் என, அவ்வப்போதைய சூழல்களைச் சார்ந்து, லட்சுமணபெருமாள், இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். இதில், ஹைட்ரோ கார்பன், லோக் ஆயுக்தாவின் மாநில உரிமை, முத்ரா வங்கி திட்டம் என, பலவற்றை புள்ளி விபரங்களுடன் பேசுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

உபசாரம்

உபசாரம், சுகா, தடம் பதிப்பகம், பக். 151, விலை 130ரூ. மனிதர்களை கவனிக்கும் சுகாவின் ரசனைதான் ‘உபசாரம் தொகுப்பின் அடிநாதம். அது சினிமாவாகட்டும், படித்த நாவலாகட்டும், சாப்பிடப் போன விருகம்பாக்கம் ஹோட்டலாகட்டும், திருநெல்வேலி விருந்தாகட்டும், பெரிய எழுத்தாளர், ஆரம்ப எழுத்தாளராகட்டும் அவர்களின் மனதை அறிந்து, அதை எழுத்தில் தந்து நம்மையும் அங்கே பயணிக்க வைத்துவிடுகிறார். முதலில் இவர் தன் மனதை திறந்து வைத்திருக்கிறார் என்பதையே இவ்வனுபவக் கட்டுரைகள் உணர்த்துகின்றன. எழுத்தில் நெருடல் இல்லாத நகைச்சுவை இயல்பாய் வந்துவிட்டாலே எழுத்துக்கு ரசிகர்கள் பெருக்கம் உருவாகிவிடும். சுகாவுக்கு […]

Read more

உபசாரம்

உபசாரம் ,சுகா, தடம் பதிப்பகம், பக்.152, விலை ரூ.130. திரைப்படத்துறையில் பணியாற்றும் நூலாசிரியர் எழுதிய 18 அனுபவம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திரைப்படத்துறையில் உள்ள படைப்பாளிகளான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலருடனான நூலாசிரியரின் அனுபவங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. நடிகை கல்பனா இவரை உடன் பிறவாத தம்பியாகக் கருதிப் பழகியது, வேலை நேரத்தில் முரண்பாடுகள் எழுந்தாலும் இவர் எடுக்கப் போகும் படத்தில் நடிக்க நடிகர் கலாபவன் மணி விரும்பியது, இவருக்கும் இவருடைய “வாத்தியார்‘’ பாலு மகேந்திராவுக்கும் உள்ள அன்புமிக்க அனுபவங்கள் என நெகிழ […]

Read more

உபசாரம்

உபசாரம், சுகா, தடம் பதிப்பகம், விலை 130ரூ. திரைப்பட இயக்குனரும், பாலுமகேந்திராவின் மாணவருமான சுகா, பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம். சொல்ல விரும்பும் விஷயத்தை தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்கிறார் “தூங்காவனம்” படத்துக்கு வசனம் எழுதியவர் அல்லவா? எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு பற்றியும், இறுதிச் சடங்கு பற்றியும் எழுதியுள்ள கட்டுரை உள்ளத்தை உருக்குகிறது. மயானத்தில் கூடியிருந்தவர்கள் சுமார் நூறு பேர்தான் என்பதை படிக்கும்போது நெஞ்சம் கனக்கிறது. எனினும், “மகாகவி பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை விட சுமார் 6 மடங்கு அதிகம்தான்” […]

Read more
1 2