மேலைநோக்கில் தமிழ் நாவல்கள்

மேலைநோக்கில் தமிழ் நாவல்கள், பகுதி 1,  ப.மருதநாயகம், எழிலினி பதிப்பகம்,  விலை: ரூ.350. ஆங்கிலத்தின் வாயிலாகவே தமிழில் நாவல் வடிவம் அறிமுகமானது. ஆனால், தமிழ் நாவல்கள் பற்றிய விமர்சனங்களில் மேலை இலக்கியக் கோட்பாடுகளையெல்லாம் பொதுவாகக் கவனத்தில் கொள்வதில்லை. ரசனை அடிப்படையே நாவல்களின் தரம், குணம் யாவற்றையும் தீர்மானிக்கிறது. தமிழ்-ஆங்கில இலக்கிய ஒப்பீட்டு ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான ப.மருதநாயகத்தின் இந்த நூல், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி தற்காலம் வரையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல் படைப்புகளை மேலை இலக்கியக் கோட்பாடுகளின் பார்வையில் திறானாய்வு செய்யும் முயற்சி. […]

Read more

ஓவியம் தேடல்கள் புரிதல்கள்

ஓவியம், தேடல்கள், புரிதல்கள், கணபதி சுப்பிரமணியம், யாவரும் பதிப்பகம்,  விலை: ரூ.350. ஓவியரும் ஓவியத்தைப் பற்றி எழுதும் மொழியைக் கொண்டவருமான கணபதி சுப்பிரமணியம், சுயமுயற்சியில் ஓவியம் பயின்றவர். உருவப் படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, அனிமேஷன் என்று தொடங்கி மெய்சாரா ஓவியங்களில் நிலைகொண்டு தற்போது பூனைகளைக் கீற்றிவருகிறார். இவர் எழுதி சமீபத்தில் ‘யாவரும் பதிப்பக’ வெளியீடாக வந்திருக்கும் ‘ஓவியம்: தேடல்கள், புரிதல்கள்’ புத்தகமானது ஓவிய மாணவர்களுக்கும் ஓவிய ரசனையை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் மிக முக்கியமானது. நன்றி: தமிழ் இந்து, 04.04.2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

மனசு போல வாழ்க்கை 2.0

மனசு போல வாழ்க்கை 2.0, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.150. மனம் குறித்த அலசல் கட்டுரைகள், கேள்வி-பதில் பகுதியின் தொகுப்பே இந்தப் புத்தகம். இதைப் படிக்கும் வாசகருக்குத் தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவம் வாய்க்கும். மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் உதவும். நன்றி. தமிழ் இந்து. 04.04.2020 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030478_/ இந்தப் […]

Read more

‘ஒரு’வில் தொடங்கும் கதைகள்

‘ஒரு’வில் தொடங்கும் கதைகள், தமிழக நாட்டுப்புறக் கதைகள், முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பக வெளியீடு, விலை: ரூ.250. ஒரு ஊரிலே’ என்று தொடங்கும் கதைகள் நவீன இலக்கியத்தில் தேய்வழக்காகிவிட்டன. ஆனால், கிராமத்திலே தாத்தா, பாட்டிகளிடம் கேட்ட அப்படியான கதைகளுக்கு ஒரு தனி ருசி உண்டு இல்லையா? சின்னச் சின்ன நாட்டுப்புறக் கதைகள் இருநூறைத் தொகுத்துப் படங்களுடன் பதிப்பித்திருக்கிறார் முல்லை பிஎல்.முத்தையா. இந்தக் கதைகளிலே நீதி போதனை உண்டு. கிராமத்துக்கே உரிய நிறைய நகைச்சுவை உண்டு. நிறைய தந்திரங்கள் இருக்கின்றன. கதைசொல்லும் பாட்டிகளையும் தாத்தாக்களையும் நாம் […]

Read more

தென்னாட்டு ஜமீன்கள்

தென்னாட்டு ஜமீன்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா பதிப்பகம், விலை: ரூ.1000. பத்திரிகையாளரும் வரலாற்று எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லைச் சீமையின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து தொடர்ந்து எழுதிவருபவர். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் என்ற தலைப்பில் ஏற்கெனவே நூல் எழுதியிருக்கும் காமராசு, இந்தப் புதிய நூலில் மறவர் ஜமீன்கள், நாயக்கர் ஜமீன்கள், மற்றையோர் என 18 ஜமீன்களின் வரலாற்றை மிக விரிவாக அளித்திருக்கிறார். ஜமீன்களின் வம்சாவளியினர், அவர்களின் வாழ்க்கைமுறை, தொடர்புடைய கோயில்கள், திருவிழாக்கள், இன்றும் அவர்களுக்குத் தொடரும் பாரம்பரிய மரியாதை என்று கடந்த சில […]

Read more

கேள்விநேரம்

கேள்விநேரம், ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை, விலை 110ரூ. இது பொது அறிவுக் கேள்வி பதில் புத்தகம் என்பதைத் தாண்டி, இந்தத் தகவல்களின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான அம்சங்களும் பதில்களில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. வெறும் தகவல்களாக மட்டும் அல்லாமல், அறிவை விரிவாக்கிக்கொள்ளவும் இந்தப் புத்தகம் உதவும். நன்றி: தமிழ் இந்து, 14/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உதிரிகளின் கதைகள்

  உதிரிகளின் கதைகள், வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.130 புலம்பெயர்ந்த மக்களின் துயரம் சொல்லில் அடங்காதவை. அவர்களின் செருப்புக்குள் நின்று பார்த்தால்தவிர அதை நாம் முற்றிலும் உணர்ந்துவிட முடியாது. அதைப் பகுதியளவேனும் உணர்த்திவிடும் எத்தனத்தில் உதிக்கிறவைதாம் புலம்பெயர் மக்கள் குறித்த படைப்புகள். நிரூபாவின் ‘இடாவேணி’ அப்படியான கதைகளைத்தான் சொல்கிறது. நன்றி: இந்து தமிழ், 12/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஒப்பில்லா நாயகி

ஒப்பில்லா நாயகி,  மூலம்: ஷாபு, தமிழில்: கே.வி.ஷைலஜா, வெளியீடு: வம்சி புக்ஸ், விலை: ரூ.350. வாழ்க்கையின் மர்மம்தான் அதன் சுவாரசியம். ஒரு பெண்ணின் ஆர்வமும் தேடலும் இன்னொரு பெண்ணைச் சாய்த்துவிடுமா என்பது புதிரான கேள்வி. அம்மாவால் கைவிடப்படும் சிறுமி, துயரங்களிலிருந்து மேன்மை அடைகிற கதைதான் உமாவுடையதும். அம்மா, சித்தி இருவருமே தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள சிறுமி உமாவைப் பிரிந்துசெல்கின்றனர். உமாவுக்குத் தெரிந்ததோ அன்பின் மொழி மட்டுமே. வன்மத்துக்குப் பரிசாக அவர் அன்பைத்தான் கொடுத்தார். அதுதான் அவரை ஆலமரமாக வளர்த்தெடுத்தது. அதை ‘கதை கேட்கும் சுவர்கள்’ நூல் மூலம் உலகுக்கு […]

Read more

முன்னத்தி ஏர்

முன்னத்தி ஏர், பேராசிரியர் கோ. ரகுபதி, வெளியீடு: தடாகம், விலை: ரூ.160 ஒரு பெண், இதழாசிரியராக நிலைப்பதே அரிது என்கிற காலத்தில் இதழ் அதிபராக நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திய துணிச்சலுக்குச் சொந்தக்காரர் வி.பாலம்மாள். பெண்களுக்கென அவர் வெளியிட்ட முதல் இதழ் ‘சிந்தாமணி’. புராதன தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பெற்றிருந்த உன்னத நிலையை மீட்டெடுக்க ‘சிந்தாமணி’ வழியாக பாலம்மாள் போராடினார். பெண் முன்னேற்றத்துக்காக பாலம்மாள் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகளை பேராசிரியர் கோ. ரகுபதி தொகுத்திருக்கிறார். நன்றி: இந்து தமிழ், 12/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

மகனுக்காக

மகனுக்காக, வெளியீடு: கனி புக்ஸ், விலை: ரூ.100/- ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தன் மகன் கனிவமுதனுடன் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைத் தொகுத்து ‘எழுதாப் பயணம்’ என்னும் நூலாக்கியிருக்கிறார் லஷ்மி பாலகிருஷ்ணன். அச்சத்தையும் அழுகையையும் தவிர்த்து நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியிருக்கிறார் அவர். நன்றி: இந்து தமிழ், 12/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 17 18 19 20 21 44