அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 2)

அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 2), இரா.சிவராமன், வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.110. கணிதம் என்றாலே சிலருக்கு கசக்கும். இருந்தாலும் தேர்வில் முழு மதிப்பெண் பெற உதவுவதும் அதே கணிதம் தான். அத்தகைய கணிதம் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நம்மை அறியாமலே பல விஷயங்களில் இந்த கணிதம் முக்கிய பங்காற்றுகிறது. நாம் அதிக அளவு பயன்படுத்தும் வார்த்தைகள் இந்த கணித விதிக்கு உட்பட்டே அமைகின்றன. நகரங்களில் ஏற்படும் நெரிசலையும், பயண நேரத்தையும் குறைக்க […]

Read more

அபரோக்ஷ அனுபூதி

அபரோக்ஷ அனுபூதி, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.270. தலைப்பைப் பார்த்ததும், ‘சமஸ்கிருத வார்த்தையாச்சே… நமக்கு எங்கே புரியப் போகுது…’ என நினைத்து விட வேண்டாம். அத்தனை விளக்கங்களும் தமிழில் உள்ளன.இனி புத்தகத்தில் எழுதியுள்ளதைப் பற்றி… பானையைப் பார்க்கிறோம்; பானை என்பதாகவே நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. தங்கத்திலான நகையைப் பார்க்கிறோம்; நகை தான் நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. வானத்தைப் பார்க்கிறோம்; நீல நிறமாகத் தெரிகிறது. உண்மை என்ன… பானையைச் செய்ய பயன்படுத்தப்பட்ட களிமண் தான் பானையில் உள்ளது; நகையைச் செய்ய பயன்படும் தங்கம் தான், நகையில் […]

Read more

சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம்

சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம், க.ப.அறவாணன், வெளியீடு: தமிழ்க் கோட்டம், விலைரூ.100 சிலப்பதிகாரத்தை சமூகவியல் பார்வையில் நோக்கிக் காப்பியத்தின் பாடுபொருள்களில் பொதிந்துள்ள, பொது வாசிப்புக்குப் புலப்படாத ஊடு பொருட்களைக் கூர்மையாக ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ள நுால். பழமையான இலக்கியப் படைப்புகளுக்கு மாற்றாகக் காப்பியம் படைத்தல், சோதிடத்தை மீறுதல், அரச மரபினர் துறவு கொள்ளுதல், திங்களையும் ஞாயிற்றையும் போற்றுதல், தமிழில் மடல் வரைதல், பெண் துறவி உருவாக்கம், வஞ்சினம் கூறி நிறைவேற்றும் முதல் பெண், பெண்ணுக்கு முதல் கோவில், பரத்தைக்கு மகப்பேறு போன்றவற்றை மாறுபட்ட நோக்கில் […]

Read more

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர், ம. கணபதி, மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.160. ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால். காஞ்சிபுரத்திற்கு குடிபெயர்ந்த பின், யாதவப் பிரகாசர் என்னும் அத்வைதியிடம் வேதம் கற்று வந்தார் ராமானுஜர். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கங்கைக் கரைக்குத் தீர்த்த யாத்திரை சென்ற போது, நர்மதை ஆற்றங்கரையில் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதை உணர்ந்தார் ராமானுஜர். உடனே தப்பி, மீண்டும் காஞ்சிபுரம் வந்தார். வழியில் வேட்டுவன் வடிவில் இறைவன் காத்த நிகழ்ச்சியை நாடகப் பாங்கில் படைத்து உள்ளார். திருக்கோட்டியூர் நம்பிகளிடம் […]

Read more

கிராமத்து தெருக்களின் வழியே

View Post கிராமத்து தெருக்களின் வழியே…, ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.350. தமிழக கிராமிய வாழ்வியல் முறையை விவரிக்கும் நுால். முற்றிலும் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. எளிய நடையில் காட்சிப் பூர்வமாக உள்ளது. மதுரை நகர் அருகே, 60 முதல், 80 வரையான காலத்தில், ஒரு கிராமத்தின் இயக்கம் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அன்றாட வாழ்வியல் மிக இயல்பாக வரையப்பட்டு உள்ளது.புத்தகத்திலிருந்து… எழுபதுகளின் இறுதியில், மலையாளிகள் சிலர் எங்கள் ஊருக்கு வந்தனர். மந்தையில் கொட்டகை போட்டு, பல சரக்கு, […]

Read more

வருவான் வடிவேலன்

வருவான் வடிவேலன், தி.செல்லப்பா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. அழகன் முருகன் தமிழுக்கு சொந்தமானவர். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரம் சரவணபவ. இதனுடன் மந்திரச் சொற்களை சேர்க்கும் போது சக்தி அதிகமாகும். குருவின் மூலம் உபதேசம் பெற்று, நியமநிஷ்டையுடன் இருந்தால் மட்டுமே மந்திரம் சொல்ல வேண்டும். கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள் மந்திரச் சொற்களை சேர்த்து கட்டமைத்தார். இந்த வரிகளைச் சொன்னால் நியமத்துடன் மந்திரம் சொன்னதாக அர்த்தம். சரவணன், முருகன், கந்தன் பெருமைகளை தொகுத்து, ‘தினமலர் ஆன்மிகமலர்’ இதழில் வெளிவந்தது, ‘வருவான் […]

Read more

மகாமுனி திரைக்கதை

மகாமுனி திரைக்கதை, சாந்தகுமார், அறம் பதிப்பகம், விலைரூ.390.   நடிகர் ஆர்யா, இரு கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மகாமுனி. சமகால அரசியல், ஜாதி, வன்முறையால் சராசரி மனிதன் எவ்வளவு துயரங்களை சந்திக்கிறான் என்பதை, இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவில் விளக்குகிறது இந்நுால். வெவ்வேறு நிலப்பரப்பில், வெவ்வேறு வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்பின் அறியாத இரண்டு பேர், தாம் இரட்டையர்கள் என்பதை உணர வைக்க, சமுதாய அழுக்குகளில் இருந்து எடுத்துள்ள விதம், ஆசிரியரின் புதுமையை காட்டுகிறது. திரைமொழியில், இலக்கியத்தை உருவாக்க முடியும் என்பதை படிக்கும் போது உணர […]

Read more

சாவர்க்கரின் வாக்குமூலம்

சாவர்க்கரின் வாக்குமூலம், ஜனனி ரமேஷ், தடம் பதிப்பகம், விலைரூ.100.   மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கரின் வாக்குமூலம் தமிழாக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்த எழுத்து மூலமான ஆவணம் மாறாமல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. குற்றத்தில் தொடர்பில்லை என்பதை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மறுத்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். காந்தி கொலை வழக்கில் முக்கியமான ஆவணமாக உள்ளது. நன்றி: தினமலர்,18/7/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031349_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

பிள்ளைப்பருவமும் வளர்ச்சியும்

பிள்ளைப்பருவமும் வளர்ச்சியும், டாக்டர் வி.நடராஜ், சாந்தா பப்ளிஷர்ஸ், விலைரூ.250. உலகளவில் கற்றல், கற்பித்தலுக்காக, குழந்தைகளின் நலன் கருதி பலதரப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் கற்றல் திறன் என்பது மொழித்திறன். அதன் கல்வி வளர்ச்சியும், சமூகத்தில் உயர்வுகளும் முக்கிய காரணிகளாகும். இந்த நுால், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தை தழுவி எழுதப்பட்டுள்ளது. குழந்தையின் வளர்ச்சி அதன் மேம்பாடு என துவங்கி, 10 தலைப்பின் கீழ் பல உட்தலைப்புகளை கொண்டு முழுமையான கற்றலுக்கான நுாலாக அமைந்துள்ளது. மொழி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கும் முக்கியத்துவம் […]

Read more

திருவருட் பயன் விளக்க உரை

திருவருட் பயன் விளக்க உரை, ஆ.ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், விலைரூ.250.   சைவ சித்தாந்த ஆசாரிய பரம்பரையில் வந்த உமாபதி சிவம், 600 ஆண்டுகளுக்கு முன் இயற்றிய, ‘சிவப்பிரகாசம்’ நுாலை விளக்கும் வகையில், அவரே படைத்த விளக்கவுரை நுால். சிவப்பிரகாசம் நுாலில் கூறப்பட்டுள்ள, பொங்கொளி ஞான வாய்மை, அதன் பயனை இணைத்துப் பயில்வதால் கிட்டுவதே திருவருட்பயன் என்பதாக முன்வைத்து பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. திருவருளின் இயல்பும், திருவருளால் உயிர்கள் அடையும் பயனும், உயிருக்கான விளக்கமும் எளிய நடையில் தரப்பட்டுள்ளது. ஞானத்தின் ஒளி நிலையும் அஞ்ஞானத்தின் […]

Read more
1 2 3 221