தமிழ்த் திருமணம்

தமிழ்த் திருமணம், மாருதி தாசன், நர்மதா பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. துணையை முறைப்படுத்தும் செயலே திருமணமாகும். திருமணம் என்பது உயர்ந்த நெறி; தெய்வீக நெறி. காதல் வயப்படுவது உயிர் இயற்கை. அது கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு செய்யப்படும் சடங்கே திருமணம். காலத்துக்குக் காலம் திருமணச் சடங்குகள் மாறலாம்; நாட்டுக்கு நாடு மாறலாம். ஆயினும், இரண்டு உள்ளங்களின் பிணைப்பே மணம் என்பது உறுதியான ஒன்று. இந்நுால், திருக்கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிவோருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 17/12/2017.

Read more

ஸ்ரீரமண அருள் வெள்ளம்

ஸ்ரீரமண அருள் வெள்ளம், ஸ்ரீதர் – சாமா, விருட்சம் வெளியீடு, பக். 100, விலை 70ரூ. பகவானைப் பற்றிய பல அருமையான தகவல்கள் அடங்கிய நுால். படிப்போரின் ஆன்மிக உணர்வுகள் பெருகும். ‘நீங்கள் என்னை ஒரு உடம்பாகப் பார்க்கிறீர்கள். நான் ஒரே நேரத்தில், 20 லோகங்களில், 20 சரீரத்தில் வசிக்கிறேன்’ என்று சொன்ன ரமணர் ஒரு அதிசய புருஷர். பகவான் அதிசயங்களைப் பெரும்பாலும் தவிர்த்ததுடன் தன் சீடர்களும் அவற்றைப் பிரசாரம் செய்யக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார். பல அதிசயங்கள் அவர் முன்னர் அரங்கேறின. […]

Read more

காமாலை கல்லீரல் நோய்களுக்கான சித்த மருத்துவம்

காமாலை கல்லீரல் நோய்களுக்கான சித்த மருத்துவம், டாக்டர் ஒய். ஆர்.மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 160, விலை 100ரூ. கல்லீரல் என்பது வயிற்றுப் பகுதியின் வலதுபுறத்திலிருந்து இடதுபுறம் வரை பரவிஇருக்கும், மனித உடலின் உள்ளுறுப்புகளில் மிகவும் பெரியது மட்டுமல்ல, இயற்கையாகவே தன்னைத் தானே சரி செய்யக்கூடிய உறுப்புமாகும். கல்லீரலின் செயல்பாடுகள், அதனால் வரும் நோய் நிலைகள், அவற்றை சீர் செய்வதில் நவீன மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தின் பங்களிப்புகளை விரிவாக விளக்குகிறது இந்நுால். மேலும், கல்லீரல் செயலிழப்பின் சிக்கல்களையும், அதை குணப்படுத்தும் மூலிகைகளையும் […]

Read more

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல், நீ.சீ.சுந்தரராமன், பன்னிரு திருமுறை மன்றம், பக். 208, விலை 100ரூ. விநாயகர் வழிபாட்டில், தமிழ் மூதாட்டி அவ்வை எழுதிய விநாயகர் அகவலுக்கு முக்கிய இடம் உண்டு. விநாயகர் அகவலை தினமும் படித்தால், வாழ்க்கையில் தோல்வியே ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. விநாயகர் அகவல் தமிழில் இருந்தாலும், அதை புரிந்து கொள்வது கடினம். யோக அடிப்படையில், விநாயகரை பற்றி அவ்வை பாடியுள்ளார். அந்த வகையில், விநாயகர் அகவலுக்கு இந்நுாலில் சிறப்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் அகவல் படிப்பவர்கள், இந்நுாலை படித்தால், விளக்கம் அறிந்து […]

Read more

பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள், பாவேந்தர் பாரதிதாசன், D.S. புத்தகமாளிகை, பக். 496, விலை 300ரூ. இந்நுால், பாரதிதாசன் கவிதைகளின் தொகுப்பு. இது பொருளடக்கம், பாரதிதாசனின் வாழ்க்கைக்குறிப்பு, பாரதிதாசன் கவிதைகள் என்றவாறு அமைந்துள்ளது. பொருளடக்கத்தில் பாரதிதாசனது கவிதைகளை, 20 பகுப்புக்களாகப் பிரித்து, அப்பகுப்பில் அடங்கும் கவிதைகளின் முதல் குறிப்பும், பக்க எண்களும் முறைப்படி கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், நாம் தேடும் பாடுபொருளை ஒட்டியோ அல்லது நம் நினைவில் நிற்கும் கவிதை வரிகள் குறித்தோ விரைவாகக் கண்டறிய முடிகிறது. வாழ்க்கைக் குறிப்புகள் என்னும் பகுதியில் ஆண்டுகள் அடிப்படையில், 1891 முதல் […]

Read more

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், டி.எஸ்.புத்தக மாளிகை, பக். 236, விலை120ரூ. அவ்வையார் படைத்த, 109 வரிகளைக் கொண்ட ஆத்திசூடி, 91 வரிகளை கொண்ட கொன்றைவேந்தன், 30 வெண்பாக்களைக் கொண்ட மூதுரை, 40 வெண்பாக்களை கொண்ட நல்வழி. உலகநாதர் எழுதிய, 13 பாடல்களை கொண்ட உலகநீதி, அதிவீரராம பாண்டியன், ஒரு வரி, இரு வரி, மூன்று வரி பாடல்கள் என பாடிய, 82 பாடல்கள், சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய, 40 வெண்பாக்களைக் கொண்ட, ‘நன்னெறி’ ஆகிய அறநுால்களின் பாடல்களைத் தொகுத்து, அதற்கு கருத்தும், விளக்கமும் […]

Read more

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு, சு.சீனிவாசன், தமிழ்ப் பல்கலைக்கழகம், பக். 264, விலை 250ரூ. தமிழ் மொழியின் கட்டமைப்பு – பண்பு உறவுகளை ஆய்வு செய்தல்: ஒரு தகவல் கோட்பாடு அணுகு முறை என்னும் முனைவர் பட்ட ஆய்வேடு, 17 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறையின் வெளியீட்டு நுாலாக வந்துள்ளது. பேராசிரியர் ராம.சுந்தரம் நெறியாளராக இருந்து வழிகாட்டிஉள்ளார்.கணித அறிவியல் அடிப்படையில் தமிழ் மொழியை நுட்பமாகவும், கட்டமைப்பு நோக்கிலும் ஆய்வு செய்துள்ளார். தமிழின் எழுத்துகள், அதன் வரி வடிவங்கள், ஒலி […]

Read more

உண்டு ஆனால் இல்லை

உண்டு ஆனால் இல்லை, யோகி, தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம், பக். 184, விலை 150ரூ. உலகில் எந்த உயிரும் மனதின் ஆதிக்கத்தில்தான் இயங்குகிறது. மனம் சொன்னால் உடல் சிரிக்க வேண்டும்; மனம் வருந்தினால் அழ வேண்டும்; அதிர வேண்டும்; இப்படி ஒவ்வொரு நகர்வுமே மனதின் கட்டளைப்படியே நடக்கிறது. சஞ்சலத்தில் உழலும் இந்த மனதைச் சமன்படுத்திப் பண்படுத்த பலப்பலவாக ஆன்மிகம், தத்துவம், உளவியல் சார்ந்த நுால்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அவற்றுக்கிடையே பலவகையிலும் வேறுபடும் நுால்களில்  ஒன்று. ஒருவருக்கு நன்மை தரும் ஒன்று, இன்னொருவருக்கு இழப்பாக […]

Read more

தலித் இலக்கியம் ஒரு பார்வை

தலித் இலக்கியம் ஒரு பார்வை, முனைவர் பத்மாவதி விவேகானந்தன், ராஜன் வெளியீடு, பக்.224, விலை 140ரூ. தலித்தியமும், பெண்ணியமும் சமத்துவத்திற்கான தத்துவங்களாகும். காலம் காலமாக அடங்கிக் கிடந்தவர்கள் இன்று வெடித்துப் போராட்ட களத்தையும், எழுத்து ஆயுதத்தையும் பயன்படுத்தி அடிமைச் சிறையில் இருந்து வெளிவரத் துடிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தலித் படைப்பாளிகள், கவிதை, சிறுகதை, நாவல், தன் வரலாறு, திறனாய்வு, தத்துவம் என, அனைத்துத் துறைகளிலும் அறிவாற்றல் மிக்கப் படைப்புகளைத் தந்து சாதனை புரிந்து வருகின்றனர். உறங்கிக் கிடக்கும் […]

Read more

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம், இந்திரா சவுந்தர்ராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 272, விலை 150ரூ. காலத்தால் அழிந்திடாத வெகு சில நுால்களில் மகாபாரதமும் ஒன்று. மானுடத்தின் மலிவான சங்கதிகளில் இருந்து, தெய்வீகத்தின் உன்னதம் வரை சகலத்தையும் இது தன் வசம் கொண்டிருக்கிறது. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இதன் மூலக்கதை தெரிந்த அளவு, கிளைக்கதைகள் பலருக்கு தெரியவில்லை. பல துணைப்பாத்திரங்கள் அறியப்படாமலேயே வியாசரின் மூல நுாலில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களையும் பிரபலப்படுத்தி இருக்கிறது இந்த நுால். இதைப் படித்து முடிக்கையில், […]

Read more
1 104 105 106 107 108 240