ஸ்ரீபரப்பிரம்ம ரகசியம்

ஸ்ரீபரப்பிரம்ம ரகசியம், வி.என்.கஜேந்திர குருஜி, ஸ்ரீபரப்பிரம்மம் ஐந்தியல் ஆய்வு மையம் வெளியீடு, பக். 1279, விலை 800ரூ. உலகின் முதல் ஆண்மகன் யார்? நூல் துவக்கத்திலேயே, ‘விராட் விஸ்வப் பிரம்மம்’ என்ற முழுமுதற்கடவுளைப் பற்றிய விளக்கத்தைத் தந்திருக்கிறார் ஆசிரியர். அது ஆணுமல்ல. பெண்ணுமல்ல. இரண்டிற்கும் பொதுவான அலித்தன்மையில் அமைந்தது. அந்தப் பிரம்மத்திலிருந்து, ஐந்துவித பருவகாலமும் ஒருங்கே சேர்ந்தபோது, உலகின் முதல் ஆண்மகன் என்று பிறந்தவர் விஸ்வகர்மா. அதேபோல், அந்தப் பிரம்மத்திலிருந்து ஜனித்த முதல் ஒரே பெண். விஸ்வகர்மிணி எனும் ஸ்ரீகாயத்ரி. இந்த இருவரும் இணைந்து, […]

Read more

பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும்

பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும், ப. குணசேகர், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 120ரூ. தென் அமெரிக்காவின், சிலி நாட்டுக் கவிஞன் பாப்லோ நெருதாவையும், தமிழன்பனையும் கவிதைகளால் உரசிப் பார்த்திருககிறார் நூலாசிரியர். மக்கள் கவிஞராக இருவரையும் பார்த்ததோடு மட்டும் அல்லாமல், இரு கவிஞர்களின் மேடைப் பிரம்மாண்டங்களையும் விரித்துப் படைத்துள்ளார். எட்டு தலைப்புகளில் இரு மொழிக் விஞர்களின் கவிதைகளைச் சாளரத்தின் வாயிலாகக் காட்டுகிறார். சில இடங்களில் கதவைத் திறந்தும் வெளிப்படுத்துகிறார். திறனாய்வு, விமர்சனம் எனும் எல்லைகளைக் கடந்து, இரண்டு பேரின் படைப்புகளையும் எடுத்து வைத்து, […]

Read more

நலமா? நலமே!

நலமா? நலமே!, மருத்துவர் வே. வீரபாண்டியன், பிளாக் ஹோல் மீடியா, பக். 120, விலை 100ரூ. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ, மாண்புடன் வாழ, அனைத்துச் செய்திகளையும், எளிமையாகவும், விரிவாகவும் தந்துள்ளார் நூலாசிரியர். நலமாய் வாழ்வதற்கான அன்றாட வாழ்வியல் முறைகளான நடைபயிற்சி, விரல் முத்திரை பிடிப்பது, மூச்சுப்பயிற்சி, ஆசனம், சூரிய வணக்கம், உடற்பயிற்சி, இயற்கை உணவு மற்றும் மாற்று மருத்துவம், சுயபரிசோதனை என்று ஒவ்வொரு தலைப்பிலும் விவரமாக எடுத்துச் சொல்கிறார். நடைபயிற்சியின்போது அணிய வேண்டிய காலணிகள், முத்திரைகள் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை, ஆசன […]

Read more

கடவுள் தொடங்கிய இடம்

கடவுள் தொடங்கிய இடம், அ. முத்துலிங்கம், விகடன் பிரசுரம், பக். 270, விலை 155ரூ. கொஞ்சம் நம்பிக்கை கொஞ்சம் அவநம்பிக்கை மனிதர்களில் எத்தனை வகைப்பாடு உண்டோ பயணங்களிலும் அப்படியே. அதிலும் சில முத்திரைப் பயணங்கள், முன்னுரிமை பெறுகின்றன. செங்கடலைக் கடந்த மோசஸின் பயணம், பழைய ஏற்பாட்டில் படிக்கக் கிடைக்கிறது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு யாத்ரீகராக வந்த பாஹியான் பற்றிய விவரங்களும் பரவலாக அறியப்பட்டுள்ளன. ஐரோப்பிய மாலுமி கொலம்பஸ், இந்தியாவுக்குப் போவதாகச் சொல்லிப் புறப்பட்டுஅமெரிக்காவோடு நின்றுவிட்டார். இப்படி எத்தனையோ பயணங்கள். வீரமான பயணங்கள், காளிதாசனின் எழுத்தில் சிருங்காரமான […]

Read more

தலித் சிறுகதைத் தொகுப்பு

தலித் சிறுகதைத் தொகுப்பு, ப. சிவகாமி, சாகித்ய அகாடமி, பக். 336, விலை 245ரூ. சமூகப் புறக்கணிப்பின் அவலம் தலித் இலக்கியப் பங்களிப்பு, தமிழ் இலக்கியத்தில் கவனத்திற்குரியதாகிறது. தலித் படைப்பாளிகள், தங்கள் சமூகத்திற்குரிய சிக்கல்களை அணுகியிருப்பதோடு, இலக்கியத்தில் தங்களுக்கான இடம் எது என்பதையும் மெய்ப்பித்து வருகின்றனர். இதில், மொத்தம் 26 கதைகள் உள்ளன. தலித் மக்கள், ஆதிக்க வர்க்கத்தால் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பதையும், சமூக தளத்திசல் மட்டுமின்றி, அலுவலகங்களிலும் அவர்களுக்கான அடையாளங்களும், அங்கீகரிப்பும் எப்படி மறுக்கப்படுகின்றன என்பதையும், இதில் உள்ள பல கதைகள் தோலுரித்துக் […]

Read more

சோதிட இயல்

சோதிட இயல், டாக்டர் தி. மகாலட்சுமி, நர்மதா பதிப்பகம், பக். 376, விலை 200ரூ. ஜோதிடத்தை முழுவதும் பொய் என்று அறவே ஒதுக்கவும் முடியாத. அதே நேரம் அது நூற்றுக்கு நூறு உண்மை என்று தலையில் தூக்கி வைத்து கூத்தாடவும் முடியாது என்ற ஒரு நிலைமையை விளக்க, ஆசிரியர் மேற்கொண்ட முயற்சியே இந்த நூல். ஜோதிடவியல் எங்கே தோன்றியது, யார் இதைத் தோற்றுவித்தது. அது தோன்றிய காலம் எது என்பனவற்றை உறுதியாகக் கூற முடியாது. ஜோதிடத்தின் தோற்றமும், வளர்ச்சியும், ஜோதிடத்தின் வகைகள், இந்திய மேனாட்டு […]

Read more

தேசிய நீர் வளமும் நதிநீர் இணைப்பும்

தேசிய நீர் வளமும் நதிநீர் இணைப்பும், எஸ்.ஆர்.சுப்பிரமணியம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 344, விலை 250ரூ. நதிகள் தேசியமயமாக்கப்பட்ட வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் உருவான நூல் இது. பேச்சுவார்த்தைகள் மூலம் நைல் நதி, மீகாங் நதி, டெலிவரி நதி, டான்பு நதி, நைஜர், செனகல் நதி, நேபாள அணைக்கட்டுகள், சிந்து நதி பிரச்னை (பக். 12-13) போன்றவை, உலகளவில் தீர்க்கப்பட்டுள்ளதை பட்டியலிட்டுள்ளார், நூலாசிரியர். ஒன்பது ஆண்டுகளில் மேட்டூர் அணை கட்டப்பட்டது (பக். 200) என்பது உட்பட, பல புள்ளி விவரங்களையும் கொடுத்துள்ளார். மகாநதியிலிருந்து […]

Read more

மாவீரன் சிவாஜி

மாவீரன் சிவாஜி, தமிழில் செ. நடேசன், விஜய் ஆனந்த் பதிப்பகம். மாவீரன் சிவாஜி மதவாதியா? கோவிந்த பன்சாரே மராட்டியத்தில் எழுதிய, சிவாஜி கோன் ஹோட்டா என்ற நூல், செ. நடேசனால், மாவீரன் சிவாஜி என, தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்நூலை, விஜய் ஆனந்த் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மராட்டியம், இந்தி, ஆங்கில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்நூல், பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. தமிழில், இரு பதிப்புகளைக் கடந்துவிட்டது. சிவாஜி என்ற மன்னன், இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கி, அதைக் கட்டிக் காத்தான் என்பதை […]

Read more

தேவாங்கர் குல தெய்வ வழிபாடு

தேவாங்கர் குல தெய்வ வழிபாடு, கவிஞர் பாப்ரியா, மாஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 292, விலை 150ரூ. ஆடையும் நூலும் தந்த தேவல மகரிஷி ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று கூறப்பட்டாலும், ஊருக்கு ஊர், குலத்திற்கு குலம் எண்ணற்ற குலதெய்வ வழிபாடு வழக்கத்தில் இருப்பதை யாரும் மறுக்கவியலாது. திருமண பத்திரிகைகளை பிரித்து பார்த்தால், வெவ்வேறு குலதெய்வங்களின் உருவங்கள், பெயர்களை பட்டியலிட முடியும். அந்த குல தெய்வங்களின் புராண வரலாற்றை ஆய்வு செய்தால், அவை சார்ந்த மனித இனங்களின் பூர்வோத்தரம் புலப்பட்டுவிடும். சிவன், திருமால், முருகன், […]

Read more

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள்

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், மதுரை இளங்கவின், காவ்யா வெளியீடு, பக். 422, விலை 400ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024572.html தமிழுக்குத் தொண்டு செய்த கிறிஸ்தவத் தமிழ் தொண்டர்களாக, முதல் பகுதியில் 72 பேர், இரண்டாம் பாகத்தில், 83 பேர் ஆக மொத்தம், 155 தொண்டர்கள் பற்றிய வரலாற்று இலக்கியக் குறிப்புகள் இதிலடக்கம். ஒப்பிலக்கணம் படைத்த கால்டுவெல், பைபிளைத் தமிழில் அச்சேற்றிய சுகன் பால்கு, திருக்குறள், திருவாசகம், சிவஞான போதத்தை ஆங்கில மொழியாக்கம் செய்த ஜி.யூ.போப், முதலில் தமிழை, 1555ல் […]

Read more
1 157 158 159 160 161 240