வலி தீர வழிகள்

வலி தீர வழிகள், டாக்டர் எம். செந்தில்குமார், விகடன் பிரசுரம், பக். 192, விலை 120ரூ. உடலின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால், நுண்ணிய நரம்புகள் மூலம், அந்த செய்தி மூளைக்கு உணர்த்தப்பட்டு, அந்த பகுதியில் வலி உணரப்படுகிறது. எந்த ஒரு நோய்க்கும் உடல் தரும் எச்சரிக்கை மணி, வலிதான். இந்த நூலானது பாதம் முதல் தலைவரை ஏற்படக்கூடிய வலிகளைச் சொல்லி, வலி ஏற்பட்டால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன என்பதை விளக்கி, வலி வருவதன் காரணங்களையும், வலி ஏற்படாமல் இருக்க நாம் […]

Read more

கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள்

கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள், பத்மகவி குற்றாலதாசன், ஸ்ரீ கிருஷ்ணமணி நிலையம், கன்னியாகுமரி மாவட்டம், பக். 140, விலை 75ரூ. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், ஆங்காங்கு சுட்டப்பட்டுள்ள கல்வியியல் சிந்தனைகளை எல்லாம் ஒன்றாக தொகுத்து,இக்கால கல்வி செயல்பாடுகளோடு பொருத்திக்காட்டி, இந்த நூலை ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர். காலத்திற்கு ஏற்ற முயற்சி, பாராட்டத்தக்கது. தனி மனிதனின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி, சமூகத்திற்கும் பயன்படக் கூடியதாக, சமூகத்திற்கும் பயன்படக் கூடியதாக, மனமொழி மெய்களால் ஒழுக்கம் உடைய சான்றோரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் அமைதல் வேண்டும். அந்த நோக்கத்தையே, பதினெண் கீழ்க்கணக்கு […]

Read more

பாரதியின் இறுதிக்காலம்

பாரதியின் இறுதிக்காலம், ய. மணிகண்டன், காலச்சுவடு பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. பாரதி இறப்பின் பின்னணி மகாகவி பாரதியின் இறுதிநாள் பற்றிய விவாதம் இன்னும் நிலவி வருகிறது. இதை ஆராய்ந்து முடிவு சொல்வது இந்த நூல். 42 பக்கங்களில் இதுபற்றி ஆராய்கிறார், நூலாசிரியர். தேடல் அனுபவம் மிக்க ஆசிரியர் அதோடு நில்லாமல், பாரதி எழுதிய காணக்கிடைக்காத, கோவில் யானை என்ற நாடகத்தையும் இந்த நூலில் இணைத்துள்ளார். இந்த நாடகம் 17 பக்கங்களைக் கொண்டுள்ளது. பாரதியின் இறுதிக்காலம் சிக்கல் நிறைந்தது. அவரைப் பற்றி அவருடைய […]

Read more

திருமுறைகள் வழங்கும் வாழ்வியல்

திருமுறைகள் வழங்கும் வாழ்வியல், ந.ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 416, விலை 310ரூ. திருமுறைகளில் காணப்பெறும் ஞானத்தேனடையான கருத்துக்களை, 36 தலைப்புகளில் நூலாசிரியர் அழகுறத் தொகுத்து அளித்திருக்கிறார். கடமைகளை ஆற்றும் செயல், கடவுளைப் போற்றும் செயலாக உயர்ந்துவிடுகிறது என்ற கருத்தைக் கருமயோகத்தோடு தொடர்புபடுத்திக் காட்டுகிறார் கட்டுரையாசிரியர். மனிதப்பிறப்பில் வந்து போகும் நல்வினை, தீவினை பற்றிச் சிந்திக்கும் ஆசிரியர், இறை ஞானமே பிறவிப்பிணிக்கு மருந்தாகி பிறவித் துயரத்தை அகற்றும் என்று கருத்துரைக்கிறார். சிற்றின்பமும், பேரின்பமும் என்ற கட்டுரையில், இறையுணர்வு இன்பம் எப்படிப் பேரின்பமாக, அழியா […]

Read more

நேருவின் ஆட்சி

நேருவின் ஆட்சி (பதியம் போட்ட 18 ஆண்டுகள்), ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 151, விலை 115ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023630.html நேருவின் பெரும் தோல்வி! நாட்டின் தலைவராக வருபவரின் பலம், பலவீனம் மற்றும் விருப்பு, வெறுப்பு ஆகியவையே, நாட்டின் போக்கை தீர்மானிக்கின்றன. கட்சியிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், சர்தார்பட்டேலுக்கு ஆதரவு இருந்தபோதும், காந்தியின் விருப்பம் ஒன்றே, நேருவை இந்தியாவின் முதல் பிரதமராக்கியது. நேருவின் விருப்பு, வெறுப்புகள் எப்படி,நாட்டின் போக்கை தீர்மானித்தன என்பதை விளக்குகிறது […]

Read more

காலம் போற்றும் கவி. கா. மு. ஷெரீப்

காலம் போற்றும் கவி. கா. மு. ஷெரீப், செ. திவான், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், பக். 316, விலை 200ரூ. பாட்டும் நானே பாடலை எழுதியது யார்? பொன்னான வாழ்வே மண்ணாகி போமா, நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும், ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே எனும் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் நம் மனக்கண் முன் வருபவர் கா. மு. ஷெரீப். அவரை திரைப்பட பாடலாசிரியர் என்ற அளவில் மட்டும் தெரிந்து வைத்திருக்கும் இக்கால தலைமுறையினருக்கு, […]

Read more

ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய இருதயம்

ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய இருதயம், தி. பாஷ்ய ராமாநுசதாசன், செல்வி. ரம்யா கஜபதி, பக். 160, 120, விலை 100ரூ, 50ரூ. வைணவ தத்துவம், இதம், புருஷணார்த்தம் ஆகியவற்றை விளக்க, ஆசாரியர்கள் எழுதியுள்ள நூல்களில், இந்த இரண்டும் பலரால் போற்றப்படுகின்றன. பெரும்பாலும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் இவை இருப்பதால், தற்காலத்தில் படிப்போர்க்குக் கடினம். அதனால் எளிய தமிழில், அவற்றுக்கு இந்த உரை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சொல்லழகும், பொருளழகும் உடைய ஸ்ரீவசன பூஷணம் என்ற நூலை, பிள்ளைலோகாசாரியர் அருளிசெய்தார். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் […]

Read more

சில பாதைகள் சில பயணங்கள்

சில பாதைகள் சில பயணங்கள், பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சமூகத்தாக்கத்தோடு, சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து, அதில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள, மதுவிலிருந்து மீள வழிகாட்டும் சாந்தி ரங்கநாதன், அமில வீச்சுக்கு ஆளான அர்ச்சனா குமாரி, பாலியல் தொழிலாளர் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சோம்லே மாம், தேவதாசி ஒழிப்பில் வெற்றிகண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சமையல் புத்தகம் முதலில் எழுதிய மீனாட்சி அம்மாள், கர்நாடக சங்கீதக் கலைஞர் வீணை தனம்மாள், கம்யூனிஸ்ட் பார்வதி […]

Read more

தெரிந்த புராணம் தெரியாத கதை

தெரிந்த புராணம் தெரியாத கதை, டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 150ரூ. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் உள்ள கதைகளை அறிந்த பலரும், கிளைக் கதைகளை அறிந்திருக்க மாட்டார்கள். கிளைக் கதைகளையும் அவற்றில் பொதிந்துள்ள உட்கருத்துக்களையும், எளிய நடையில், தெளிவான முறையில், எல்லோருக்கும் புரியும் வகையில் நூலாசிரியர் எழுதியுள்ளார். மன்னனா? துறவியா? என்ற கட்டுரையில் ஜனகர் – பஞ்சசிகர் தொடர்புடைய நிகழ்வுகள் புலனடக்கம், சத்தியத்தின் உயர்வு, அகந்தை, ஆணவம் துறத்தல் முதலானவற்றை வலியுறுத்துகின்றன. மனைவி கூறிய கருத்தை மதித்த […]

Read more

சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை ஆக்கப் பிரதியின் வாசிப்பு அரசியல்

சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை ஆக்கப் பிரதியின் வாசிப்பு அரசியல், முனைவர் கா. அய்யப்பன், இராசகுணா பதிப்பகம், பக். 138, விலை 120ரூ. சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை காப்பியத்தை, ஐந்து பிரிவுகளில், ஆய்வு செய்கிறது இந்த நூல். முதல் பிரிவில் மணிமேகலை காப்பியக் கதையும், இரண்டாம் பிரிவில் இந்திர விழாவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரிவில், மணிமேகலை கூறும் தத்துவக் கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. நான்காம் பிரிவில், மணிமேகலை காப்பியத்தைப் பிற பண்டைய இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார். ஐந்தாம் பிரிவில், உரையாசிரியர்கள், மணிமேகலை காப்பியத்தைப் பயன்படுத்தியுள்ள […]

Read more
1 159 160 161 162 163 240