கம்பளத்து நாயக்கர் இனவரைவியல் ஆய்வு

கம்பளத்து நாயக்கர் இனவரைவியல் ஆய்வு, பா.கண்ணன், அகலன் வெளியீடு, விலைரூ.100. கம்பளத்து நாயக்கர்கள் இனவரைவியல் குறித்துப் பேசும் நுால். கம்பளத்தார் வரலாறு, வாழ்வியல் சடங்குகள், மரபு மாறாத திருமண சடங்குகளை விரிவாக ஆய்ந்து எழுதப்பட்டுள்ளது. ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் வாழும் வேகிளியார் என்ற கம்பளத்து நாயக்க மக்களின் சமுதாய வாழ்வியலைத் தக்க சான்றுகளுடன் பேசுகிறது. தமிழகத்துக்கு வந்து குடியேறிய அந்த மக்களின் பழக்கவழக்கங்கள், தொழில்முறை, வாழ்வில் நிகழும் பிறப்பு, காதணி, பூப்பு, இறப்புச் சடங்குகள் குறித்தும் பேசுகிறது. மணவிழா சடங்குகளில் மரபு […]

Read more

சிவஞான முனிவர்

சிவஞான முனிவர், கா.சுப்பிரமணிய பிள்ளை, வைகுந்த் பதிப்பகம், விலைரூ.70. ‘இறைவன் ஒருவனே’ என்று வாழ்ந்த முனிவர் பற்றிய நுால். வேதம், வேதாந்தம், மீமாஞ்சை, தர்க்கம், வியாகரணம் போன்ற நுால்களைக் கற்றுணர்ந்த முனிவர் தான் வாழ்ந்த, 32 ஆண்டுகளில், ‘ஆனந்த ருத்ரேசுவரர் பதிகம், செப்பறை அகிலாண்டேசுவரி பதிகம், பஞ்சாக்கரமாலை, திருத்தொண்டர் திருநாமக்கோவை, சித்தாந்தப் பிரகாசிகை’ உள்ளிட்ட பல நுால்கள் இயற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.பல சுவையான கருத்துகளையும், அரிய தகவல்களையும் உள்ளடக்கிய நுால்; ஆய்வு நோக்கில் படிக்கலாம். – மெய்ஞானி பிரபாகரபாபு நன்றி: தினமலர், 21-2-21 இந்தப் புத்தகத்தை […]

Read more

தூது நீ சொல்லி வாராய்

தூது நீ சொல்லி வாராய், கோவி.மணிசேகரன், இலக்குமி நிலையம், விலைரூ.90. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த அழகிய தமிழகத்தை இந்த வரலாற்று நாவலின் வழியே, நாம் நேரில் கண்டு மகிழ முடிகிறது. காவியம் தீட்டும் கவிஞர் கோவி.மணிசேகரர், கவிதைத் தமிழின் இனிமையை இந்த வரலாற்றுப் புதினத்திலும் கலந்துள்ளார். பட்டுப் புடவையின் விலை உயர்ந்த தங்கச் சரிகை வேலைப் பாடாக சந்த நயம் அங்கங்கே ஜொலிக்கிறது. இதோ ஒரு துளி: `பூ மணக்கும், பூவையரின் புன்னகை மணக்கும், புலமையால் தமிழ் நாமணக்கும், காவியப் பாமணக்கும், மானுடப் பண்பு […]

Read more

சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள்

சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள், மா.கருணாநிதி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.180. சமூக இயக்கத்தைக் கணித்து, பல்வேறு சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். காவல் துறையில் உயர் பொறுப்பு வகித்தவரின் சமூக பார்வையும், பொறுப்புணர்வுள்ள கடமையும் வெளிப்பட்டுள்ளது. மொத்தம், 29 கட்டுரைகள் உள்ளன. பெரும்பாலும், ‘தினமலர்’ நாளிதழ் சிந்தனைக்களம் பகுதியில் பிரசுரமானவை. தீயவர்களின் செயலால் மட்டுமே, சமுதாயம் கொடுமை அனுபவிப்பதில்லை; அவற்றை பார்த்தும் தட்டிக் கேட்கும் வாய்ப்பு இருந்தும், செயல்படாமல் இருக்கும் மெத்தனத்தால் தான், பல கொடுமைகள் நிகழ்கின்றன என, […]

Read more

என்னை நானே பார்த்தேன்

என்னை நானே பார்த்தேன், அனு. வெண்ணிலா, திருப்பூர் குமரன் பதிப்பகம், விலைரூ.250. தாங்கொணாத் துயரங்கள் தாக்கிய தருணங்களில் சொல்லி அழக்கூட ஒரு துணை இல்லாக் காலங்களின் போதும், இறையருளின் வெளிச்சக்கீற்றுகள் உதவியிருப்பதை பக்தியின் பாதையில் உணர்ந்து கொண்டேன்.ஊரும் உறவுகளும் அந்நியமாகிப் போன நிலையில், தக்க சமயத்தில் உதவியும் ஊக்கமும் பெற என் தாய்த்தமிழ் எனக்கு பெரிதும் உதவியது என சுயமரியாதை இயக்கக் குடும்பத்தில் பிறந்து, ஆற்றுப்படுத்த ஆளில்லாமல் தனிமையில் போராடி, ஆன்மிக வயப்பட்டு மகான்களையும் தரிசித்து, சொந்த ஆன்மிக அனுபவங்களை பதிவு செய்துள்ளார். முழுமையும் […]

Read more

தேர்ந்தெடுக்கப்பட்ட புதுமைப்பித்தன் சிறுகதைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட புதுமைப்பித்தன் சிறுகதைகள், அருணா பதிப்பகம், விலைரூ.130.   சிறுகதை மன்னன் என புகழப்பட்டவர் புதுமைப்பித்தன். அவர் எழுதியதில் சிறந்தவற்றை தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் 18 கதைகள் இடம் பெற்றுள்ளன. அவர் எழுதிய, ‘பொன்னகரம்’ முதல் கதையாக உள்ளது. காலவரிசைப்படி கதைகளை தேர்வு செய்து தொகுத்துள்ளனர். என்றும் இனிமையுடன் வாசிக்க தகுந்த தொகுப்பு நுால். – பாவெல். நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031368_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

அப்துல் கலாம் உதிர்த்த முத்துக்கள்

அப்துல் கலாம் உதிர்த்த முத்துக்கள், மு.பழனியப்பன், முல்லை பதிப்பகம், விலைரூ.120. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அனுபவ மொழிகள் மற்றும் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த ருசிகரமான சம்பவங்களை விவரிக்கும் நுால். அதில் ஒன்று… திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில், 1954 மார்ச்சில் பி.எஸ்சி., படித்து தேறினார். மதிப்பெண் சான்றிதழ் கிடைத்ததை வைத்து, சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் படிக்கச் சேர்ந்தார். காலம் சுழன்றது.அந்த பட்டம் வாங்க வாய்ப்பே வரவில்லை. அவருக்கு சென்னை பல்கலை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது; அதை நேரில் பெற அவரால் வர […]

Read more

அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 2)

அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 2), இரா.சிவராமன், வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.110. கணிதம் என்றாலே சிலருக்கு கசக்கும். இருந்தாலும் தேர்வில் முழு மதிப்பெண் பெற உதவுவதும் அதே கணிதம் தான். அத்தகைய கணிதம் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நம்மை அறியாமலே பல விஷயங்களில் இந்த கணிதம் முக்கிய பங்காற்றுகிறது. நாம் அதிக அளவு பயன்படுத்தும் வார்த்தைகள் இந்த கணித விதிக்கு உட்பட்டே அமைகின்றன. நகரங்களில் ஏற்படும் நெரிசலையும், பயண நேரத்தையும் குறைக்க […]

Read more

அபரோக்ஷ அனுபூதி

அபரோக்ஷ அனுபூதி, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.270. தலைப்பைப் பார்த்ததும், ‘சமஸ்கிருத வார்த்தையாச்சே… நமக்கு எங்கே புரியப் போகுது…’ என நினைத்து விட வேண்டாம். அத்தனை விளக்கங்களும் தமிழில் உள்ளன.இனி புத்தகத்தில் எழுதியுள்ளதைப் பற்றி… பானையைப் பார்க்கிறோம்; பானை என்பதாகவே நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. தங்கத்திலான நகையைப் பார்க்கிறோம்; நகை தான் நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. வானத்தைப் பார்க்கிறோம்; நீல நிறமாகத் தெரிகிறது. உண்மை என்ன… பானையைச் செய்ய பயன்படுத்தப்பட்ட களிமண் தான் பானையில் உள்ளது; நகையைச் செய்ய பயன்படும் தங்கம் தான், நகையில் […]

Read more

சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம்

சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம், க.ப.அறவாணன், வெளியீடு: தமிழ்க் கோட்டம், விலைரூ.100 சிலப்பதிகாரத்தை சமூகவியல் பார்வையில் நோக்கிக் காப்பியத்தின் பாடுபொருள்களில் பொதிந்துள்ள, பொது வாசிப்புக்குப் புலப்படாத ஊடு பொருட்களைக் கூர்மையாக ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ள நுால். பழமையான இலக்கியப் படைப்புகளுக்கு மாற்றாகக் காப்பியம் படைத்தல், சோதிடத்தை மீறுதல், அரச மரபினர் துறவு கொள்ளுதல், திங்களையும் ஞாயிற்றையும் போற்றுதல், தமிழில் மடல் வரைதல், பெண் துறவி உருவாக்கம், வஞ்சினம் கூறி நிறைவேற்றும் முதல் பெண், பெண்ணுக்கு முதல் கோவில், பரத்தைக்கு மகப்பேறு போன்றவற்றை மாறுபட்ட நோக்கில் […]

Read more
1 17 18 19 20 21 240