காந்திஜியின் பொன்மொழிகள்

காந்திஜியின் பொன்மொழிகள், அருள்நம்பி, நர்மதா பதிப்பகம், விலைரூ.70. மகாத்மா காந்தியை புகழாத மனிதரில்லை; போற்றாத நாடில்லை; எழுதாத மொழி இல்லை. காந்தியின் அமுத மொழிகளை அனைத்து மதத்தினரும், எந்த நாட்டினரும் ஏற்றுக்கொள்பவை. இந்நுாலும் அந்த வகையில் அமைந்துள்ளது. கடவுள், தீண்டாமை, உழைப்பு, தியாகம், பணிவு, பகுத்தறிவு, ஒழுக்கம், அன்பு, இயற்கை வைத்தியம் போன்ற தலைப்புகளில் பொன்மொழிகள் அமைந்துள்ளன. மரணம் பேய் அல்ல; ஆவிகளுடன் பேச முடியுமா? யமனை கண்டு ஓடுபவரா? மறு பிறப்பு உண்டா? மரணத்திற்கு பின் தொண்டு போன்ற கேள்விகளுக்கு, காந்தி என்ன […]

Read more

திருவாசகம்

திருவாசகம், மாணிக்கவாசக சுவாமிகள், அழகு பதிப்பகம், விலைரூ.120. பன்னிரு சைவ திருமுறைகளில் ஒன்றாக உள்ளது திருவாசகம். எட்டாம் திருமுறை. முழுமுதல் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பாடல்களில் தொகுப்பு. பக்தி சுவையும், சிறந்த சமய இலக்கியமாகவும் திகழ்கிறது. இந்த நுால், 51 பகுதிகளையும், 649 பாடல்களையும் கொண்டது. இதில், 38 சிவ தலங்கள் பாடப் பெற்றுள்ளன. முற்றோதல் செய்ய வசதியாக, தெளிவாக பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. எளிதாக பயன்படுத்தும் வகையில் கெட்டி அட்டையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர்,11/4/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கனவுகள்

கனவுகள், எப்.அந்தோணிசாமி, அன்னை பதிப்பகம், விலைரூ.75. கிறித்துவ ஆயர்களின் பணிகளையும், அருள்பணியாளரின் பணிகளையும், துறவியரின் பணிகளையும், பொதுவானவர்களின் பணிகளையும் வரையறுத்துத் தெரிவிக்கிற நுட்பமான நுால். கிறித்துவர்களுக்கு மூன்று பிறப்பு இருப்பதாகத் தத்துவார்த்தமாக விளக்குகிறது. அன்னையின் வயிற்றில் பிறக்கும் பிறப்பு, திருமுழுக்குக்குப் பின்னரான பிறப்பு, இறப்புக்குப் பிறகான விண்ணுலகப் பிறப்பு என தெளிவுபடுத்துகிறது. நிகழாத ஒன்றை நிகழ்த்துவதே கனவு என்னும் புதுமையான விளக்கத்தைத் தருகிறது. நம்பிக்கையை விதைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டுள்ளது. கிறித்துவ இறைவாழ்க்கை வாயிலாக நம்பிக்கை பெற்று, உயர்ந்த நிலையை அடைவதற்கான வழியை உணர்த்துகிறது. சிறந்த […]

Read more

ஆன்மிகம் அறிவோம்

ஆன்மிகம் அறிவோம், பிரேமாவதி வீரப்பன், கோரல் பதிப்பகம்,விலைரூ.150. பச்சை கற்பூரம், மலர்களின் மணம், ஊதுவத்தி புகையின் சுகந்தம் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் போது, பூஜை அறை நினைவுக்கு வரும். இந்த புத்தகத்தை புரட்டும் போது, ஒரு பூஜை அறைக்குள் நுழைகிறோம். பவித்திரமாக்குகிறது இந்த வாசிப்பு. இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடிய அற்புதமான மலர்கள் பற்றி புராணங்கள் சொல்லியிருக்கின்றன. அவற்றில் எட்டு மலர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. செண்பக மலர், நந்தியாவட்டை, பாதிரி மலர், நீலோற்பவம், வெள்ளெருக்கு, புன்னை, செந்தாமரை, அலரி ஆகியவை முக்கியத்துவம் […]

Read more

இறையுதிர் காடு

இறையுதிர் காடு, இந்திரா சவுந்தர்ராஜன், விகடன் பிரசுரம், விலைரூ.1350. நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க, போகர் என்னென்ன பாஷாணங்கள் பயன்படுத்தினார்; உறுதித் தன்மைக்கு, என்ன கலவை கலந்தார். இதற்காக, எங்கெல்லாம் சென்று மூலிகை சேகரித்தனர் என விவரிக்கிறது இந்நுால். முருகன், சர்வரோக நிவாரணி என்கின்றனரே அது உண்மையா? ஹிந்து சமயத்தில் எவ்வளவோ கடவுள்கள் இருக்க, போகர் பிரான், எதனால் முருகனை பாஷாணத்தில் கட்டமைத்தார்? அழகிய கோலங்களை பொருட்படுத்தாமல், ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகனை செய்தார்? போன்ற கேள்விகளுக்கான விடையை விவரிக்கிறது. ஆனந்த விகடனில், 87 […]

Read more

ஆரோக்கிய வாழ்விற்கு யோக முத்திரைகள்

ஆரோக்கிய வாழ்விற்கு யோக முத்திரைகள், கீர்த்தி, குறிஞ்சி, விலைரூ.80. முத்திரையின் பலன்கள், முத்திரைகளும் அதன் நிறங்களும், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள், தியானம், முத்திரைகளைச் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை என 10 தலைப்புகளில் விளக்கம் உள்ளது. யோக முத்திரை என்ற பகுதியில் 59 வகை முத்திரைகளும், செய்முறை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. – பேராசிரியர் இரா.நாராயணன் நன்றி: தினமலர்,11/4/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வாய்மொழிக் கதைகள்

வாய்மொழிக் கதைகள், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.145. வாய்மொழிக் கதைகள் பற்றிய விளக்கமான ஆய்வு நுால். அவற்றின் வகைமை, சேகரிப்பது, பனுவலாக்கம் செய்வது பற்றி எல்லாம் விரிவாக உள்ளது. பண்பாட்டை அறிவதில் வாய்மொழிக்கதைகளின் முக்கியத்துவத்தை நுட்பமாக உரைக்கிறது. அதன் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து, புராணக் கதை, பழமரபுக்கதை, நாட்டார் கதை என்ற வகைமைக்கு உட்படுத்தியுள்ளார். அவை பற்றி தனித்தனியாக விளக்கம் தரப்பட்டுள்ளது. வாய்மொழிக் கதைகளின் சூழல் பயன்பாடு பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவற்றை சேகரிப்பது, பனுவலாக்கம் செய்வதற்கான ஆய்வு உத்தியும் விரிவாக […]

Read more

கொரோனா உலகம்

கொரோனா உலகம், ப.திருமலை, தமிழர் ஆய்வு மையம், விலைரூ.150. இந்த நுால் கொரோனாவை மருத்துவ கண்ணோட்டத்தில் பார்ப்பதல்ல; மாறாக நாம் கடந்து சென்று கொண்டிருக்கும் கொரோனா காலத்தின் மீதான சமூக பார்வை. மட்டற்ற சுதந்திரத்தில் இருக்கும் உலகம், கொரோனா என்ற பேரிடரால் எப்படி முடங்கி, அடங்கிப் போனது; அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் என்ன; சமூக மாற்றங்கள் என்ன என்பது பற்றி எல்லாம் அலசியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் திருமலை. கொரோனா காலத்தின் செய்தி தொகுப்பாக அல்ல; நிகழ்காலத்தின் கண்ணாடியாக நுாலை தந்திருப்பதால், காலம் கடந்தும் […]

Read more

40 பிளஸ் மாற்றம்

40 பிளஸ் மாற்றம், வள்ளியம்மை அருணாச்சலம், சில்வர்பிஷ், விலைரூ.220. இளம் வயதில் நடந்த வாழ்க்கை சம்பவங்களை, நினைவில் கொண்டு, 40 வயதில் அலசி ஆராய்ந்து தீர்வைத் தேடும் முயற்சியாக எழுதப்பட்டுள்ள நுால். புரிதலே சிறந்த அறிவு என்ற முத்திரை சொல்லை மெய்யாக்கும் வகையில் உள்ளது. எதிர்பாராத சிறிய சம்பவம், வாழ்வின் போக்கையே மாற்றி அமைத்து விடும். மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி, முட்டுக்கட்டை போட்டுவிடும். இது போன்ற நிகழ்வுகளை எதிர்கொண்ட விதம் பற்றி, சிந்தித்து தீர்வுகளை சொல்ல முயல்கிறார். சம்பவங்களை மன ஆழத்தில் விவாதித்து, பொதுமைப்படுத்தி […]

Read more

ஜம்மு & காஷ்மீர் முழுமையான வரலாறு

ஜம்மு & காஷ்மீர் முழுமையான வரலாறு, எம்.குமார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.140. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் வரலாறு முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து வரை, மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. வரலாற்று காலம் தொட்டு மிகத் தெளிவான வரலாறு சுருக்கமாக உள்ளது. ஒன்பது தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. எளிய தமிழில் புரியும் வண்ணம் படைக்கப்பட்டு உள்ளது. இறுதியில் தொகுத்தாய்வோம் என்ற தலைப்பில், மாநிலம் பற்றிய கருத்தை ஆசிரியர் பதிவிட்டுள்ளார். கடுமையாக முயன்று, தகவல்களை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள […]

Read more
1 16 17 18 19 20 240