சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம்

சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம், க.ப.அறவாணன், வெளியீடு: தமிழ்க் கோட்டம், விலைரூ.100 சிலப்பதிகாரத்தை சமூகவியல் பார்வையில் நோக்கிக் காப்பியத்தின் பாடுபொருள்களில் பொதிந்துள்ள, பொது வாசிப்புக்குப் புலப்படாத ஊடு பொருட்களைக் கூர்மையாக ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ள நுால். பழமையான இலக்கியப் படைப்புகளுக்கு மாற்றாகக் காப்பியம் படைத்தல், சோதிடத்தை மீறுதல், அரச மரபினர் துறவு கொள்ளுதல், திங்களையும் ஞாயிற்றையும் போற்றுதல், தமிழில் மடல் வரைதல், பெண் துறவி உருவாக்கம், வஞ்சினம் கூறி நிறைவேற்றும் முதல் பெண், பெண்ணுக்கு முதல் கோவில், பரத்தைக்கு மகப்பேறு போன்றவற்றை மாறுபட்ட நோக்கில் […]

Read more

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!, ஜி.சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.155. விடுதலைக் குயில் பாரதி குறித்த அரிய செய்திகளை விரித்துச் செல்லும் நுால். பாரதியின் பெருமித உணர்ச்சி, கவித்துவ மேன்மை, இசை அறிவு, நட்பு போற்றும் உருக்கம் எனப் பல்வேறு செய்திகளை விறுவிறுப்பு குறையாமல் சுவைபடச் சொல்கிறார் ஆசிரியர். காந்திமதிநாதனுடன் விளைந்த கவிதைப் போர், கிருஷ்ணசாமி செட்டியார், குவளைக்கண்ணனுடன் பாரதிக்கு இருந்த நெருக்கம், வ.ரா.,வின் பற்றும் ஈடுபாடும், சுதேசமித்திரன், இந்தியா நாளிதழ்கள் குறித்த செய்திகள், பாரதியின் இறுதிச் சொற்பொழிவு, ச.து.சி.யோகியார் பாரதியிடம் கொண்டிருந்த அன்பு […]

Read more

அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 2)

அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 2), இரா.சிவராமன், வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.110. கணிதம் என்றாலே சிலருக்கு கசக்கும். இருந்தாலும் தேர்வில் முழு மதிப்பெண் பெற உதவுவதும் அதே கணிதம் தான். அத்தகைய கணிதம் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நம்மை அறியாமலே பல விஷயங்களில் இந்த கணிதம் முக்கிய பங்காற்றுகிறது. நாம் அதிக அளவு பயன்படுத்தும் வார்த்தைகள் இந்த கணித விதிக்கு உட்பட்டே அமைகின்றன. நகரங்களில் ஏற்படும் நெரிசலையும், பயண நேரத்தையும் குறைக்க […]

Read more

திருமலை நாயக்கர்

திருமலை நாயக்கர், நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி, நிவேதிதா பதிப்பகம்,விலைரூ.160. தென்னகத்தில் நாயக்கர் ஆட்சியை குறித்து சொல்லும் நுால். போர்ச்சுகீசியர்களும், மேனாட்டுப் பாதிரிகளும் தமிழகத்தில் காலுான்றிய கால கட்டமான, 17ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் திருமலை நாயக்கர் 1623ல் அரியணை ஏறி ஆட்சி புரிந்தார். அவரது 35 ஆண்டு கால வரலாற்றை விளக்கும் நுால். தலைநகரை திருச்சியிலிருந்து, மதுரைக்கு மாற்றிய பின் அவரது ஆட்சி சிறப்புற விளங்கலாயிற்று. அந்த ஆட்சி முறையையும், கலைப் பணியையும், கோவில்கள் அமைத்த செயல்களையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது. குறிப்பிடத்தக்க ஐந்து போர்கள் பற்றிய […]

Read more

மனம் அது செம்மையானால்?

மனம் அது செம்மையானால்?, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.200. ஆசிரியர் எழுதியுள்ள பல புத்தகங்களை, வரிசைக் கிரமமாகப் படித்தாலும், ஆங்காங்கே இடைச் செருகலாய் படித்தாலும், ஒன்றைத் திறந்து வைத்து மற்றொன்றைப் படித்தாலும், அச்சு பிசகாமல், அர்த்தம் மாறாமல், பிறவி குறித்தும், மனம் குறித்தும், ஆழ் மனம் குறித்தும் அழகாய் விளக்கி விடுவார். அறிவியல் மூலம் ஆன்மிகத்தைத் தேடி, ‘நான் யார்’ என்ற கேள்விக்கு, ‘இது தான்யா நீ…’ என்ற பதிலை அறிவுப்பூர்வமாய், அழகாக விளக்கிச் சொல்கிறார். மனம், ஆழ் மனம் ஆகியவற்றை அழகாக விளக்கி, […]

Read more

ரத்தத்தின் ரத்தமே

ரத்தத்தின் ரத்தமே, எஸ்.ரஜத், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. நிறமும், அழகும் கடவுள் நிறைய பேருக்கு கொடுத்திருக்கிறார். ஒரு சிலர் தான் நிறம், அழகைத் தாண்டி, நல்ல குணத்தால் காலமெல்லாம் தன் புகழை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றனர். எம்.ஜி.ஆர்., தியேட்டரைத் தாண்டி, மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த நிரந்தர முதல்வர். சிம்லாவில் நம் ராணுவத்தினரை ரசிக்க வைத்த கலாரசிகன். படப்பிடிப்பின் போது உடல் களைத்தாலும், மனம் களைக்காமல் ரசிகர்களை கொண்டாடும் தலைவன். கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும் என்பதை மக்களின் வேண்டுதல் […]

Read more

மனதில் நிற்கும் மாணவர்கள்

மனதில் நிற்கும் மாணவர்கள், பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.240. ‘ஆசிரியர் உதிர்க்கும் சொற்கள் விதை போல… அவை எங்கும் முளைக்கும்’ என்பதே இந்த நுாலின் அடிநாதம். மாணவர்களுடன், தமிழ் பேராசிரியருக்கு, வகுப்பறையிலும், அதைத் தாண்டியும் உள்ள உறவை, அக்கறையை நெடுஞ்சுவடுகளாக கண்முன் நிறுத்துகிறது. நெகிழ்த்தும் பண்புள்ள 40 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதை, தன் வரலாறாகவும் கொள்ளலாம். எளிய நடையில் சொற்கள், நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகின்றன. துடிப்பாக மனதில் பதிகிறது. வகுப்பறையில் ஏற்றப்பட்ட அன்பும் பண்பும் மிக்கக் கொடி, மாணவன் வாழ்வுப் பாதையில் வண்ணமயமாக பறப்பதை […]

Read more

திருமுறையும் திருநெறியும்

திருமுறையும் திருநெறியும், முனைவர் க.சேகர், ஐயா நிலையம், விலைரூ.120. பன்னிரு திருமுறையில் தேவார பதிகங்களை இயற்றிய சமயக்குரவர்கள் சைவ சமய எழுச்சிக்கு ஆற்றிய தொண்டுகளை விவரிக்கும் நுால். கோவில்களில் வடமொழி செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் திகட்டாத தமிழ்ப் பண்ணிசையை ஒலிக்கச் செய்தவரான சம்பந்தரின் நற்பணிகளையும், தெய்வீகப் பண்களையும் பாடித் திருத்தலங்களில் உழவாரப்பணி செய்த நாவுக்கரசரின் இறை தொண்டும், கி.பி., 7ம் நுாற்றாண்டிலேயே கலப்பு மணம் புரிந்த சுந்தரரின் பேதமற்ற தன்மையும், திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரின் சிறப்புகளும் விவரிக்கப்படுகின்றன. முருக வழிபாட்டின் தொன்மையை விளக்கி, சங்க […]

Read more

அழகிய இந்தியா

அழகிய இந்தியா தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம், பி. ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், விலைரூ.300. பிரிட்டிஷ் ஆட்சி கால ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, ஆங்கிலேயர் வருமுன்பே உன்னதமாக விளங்கிய இந்திய பாரம்பரியக் கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், காந்திக்கு முன்பான ஒத்துழையாமை இயக்கம், பஞ்சாயத்து ராஜ் பற்றி, காந்தியவாதி தரம்பால் எழுதிய நுால்களின் முன்னுரைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட நுால். இந்திய உன்னதங்களை எடுத்துரைக்கும் தரம்பாலின், ‘அழகிய மரம் – 18ம் நுாற்றாண்டில் இந்தியாவின் பாரம்பரியக் கல்வி, அழகிய நதி – இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், […]

Read more

ஆன்மிக ஒளியில் அறிவியல்

ஆன்மிக ஒளியில் அறிவியல், ப.திருமலை, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.240. அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் போன்ற பொருட்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள் போன்ற அனைத்தையுமே முன்னோர் ஒரு அர்த்தத்துடன் தான் செய்து வந்திருக்கின்றனர். நம் பழக்க வழக்கங்களில் உள்ள அறிவியல் உண்மைகளை மறந்து விட்டு, வெறும் சடங்குகளாக பார்ப்பதால் உரிய முக்கியத்துவம் தர மறுக்கிறோம். இத்தகைய ஆன்மிக பழக்க வழக்கங்களில் பொதிந்துள்ள அறவியல் ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் முயற்சி தான் இந்த புத்தகம். முப்பது சிறிய கட்டுரைகளை உள்ளடக்கியது; மருந்துப் […]

Read more
1 15 16 17 18 19 240