மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்

மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள், மு.முருகேஷ், ஆதி வெளியீடு, பக். 64, விலை 40ரூ. நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்குவது விடுகதை. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியரே, ‘பிசி’ என்ற சொல்லால் விடுகதையைச் சுட்டியுள்ளார். மூத்த தமிழறிஞர்களான, ச.வே.சுப்பிரமணியன், ஆறு.ராமநாதன் ஆகியோர் வரிசையில் முருகேஷும் சேர்ந்துள்ளது பாராட்டுக்குரியது. ‘மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்’ என்னும் தலைப்பில், அறிவுக்கு விருந்தாகும், 180 விடுகதைகளைத் தொகுத்துள்ளது, இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினமலர், 18/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

பசுமை நிறைந்த நினைவுகளே

பசுமை நிறைந்த நினைவுகளே, எல்.முருகராஜ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலை 450ரூ. பிரிக்க முடியாதது வாரமலரும் வாசகர்களும் என்பதற்கேற்ப, 25 ஆண்டுகளாக வாசகர்களை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்லும் மாபெரும் பணியை செய்து வருகிறது, ‘தினமலர்’ வாரமலர். மூலிகைகளுடன் நம்மை தொட்டு விளையாடும் குற்றாலம் அருவிக்கு மட்டும் கூடுதல் வரம் கொடுக்கப்பட்டிருக்கிறது போல. மழையின் சாரலுடன் அருவியின் சாரலும் இணைந்து ஏற்படுத்தும் அனுபவம், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரவசம். அந்த குற்றாலத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்லும், ‘தினமலர்’ குழுவுடன் இணைந்து பயணித்து வரும் […]

Read more

நெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்

நெமிலி ஸ்ரீ பாலா குருபீடம், நெமிலி ஸ்ரீ பாபாஜி பாலா, வானதி பதிப்பகம், விலை 200ரூ. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. அருணகிரியாருக்கு முருகனே குருவாய் வர வேண்டும் என்ற ஆசையால், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்றார். நெமிலி ஜி.பாபாவிற்கு, பாலாவே குருவாக ஆட்கொண்டார் என்ற தகவல் உள்ளது. குருவருளும் திருவருளும் துவங்கி, குருவின் ஆற்றல் வரை, 10 தலைப்புகளில் இந்த நுால் பேசுகிறது. படிப்போருக்குக் கிடைக்கும் பாக்கியம் எனலாம். இந்த நுாலின் தனி சிறப்பே நாமாவளிகள் தான். […]

Read more

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும், ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், பக். 200, விலை 190ரூ. தமிழகம் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு உள்ளாகும் என்பதை முன்னதாகவே அறிந்து, நீர் நிலைகளை வளமாக்கும் திட்டங்களை கட்டுரை வடிவில் கொண்டு சென்ற மூத்த அரசியலாளர் இவர். உழவர்களின் தோழர் என்ற போற்றுதலுக்கு உரியவர். தமிழகத்தின் வறட்சியைப் போக்கும் வழி, கங்கை – காவிரி இணைப்பு, சேது கங்கா இணைப்பு, நெஞ்சம் குளிரும் நீர் வழிகள் உள்ளிட்டவை, நீர்வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விதைப்பதாக உள்ளன. காவிரி உரிமையைக் காப்போம், தாமிரபரணியின் […]

Read more

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை, புதுயுகன், வானதி பதிப்பகம், பக். 232, விலை 200ரூ. லண்டன் கல்வியாளர், எழுத்தாளர் புதுயுகனின் தன்னம்பிக்கை நுால் இது. வித்தியாசமான பார்வையில், வித்தியாசமான சிந்தனையில், வாழ்வியல் நெறிமுறைகளை மையப்படுத்துவதில் தமிழ் தன்னம்பிக்கை நுால்களில் தனித்துவம் பெறுகிறது இந்நுால். ‘நல்ல மனப்பான்மை இருந்தால் வாழ்க்கையின் உள்ளேயே ஒரு புதிய வாழ்க்கை புலப்படும்,-3டி போல, தனது தனித்துவத்தை துல்லியமாக புரிந்து கொண்ட நொடியில் ஒரு உலகச்சாம்பியன் உருவாகிறான்’ என்பது போன்ற தத்துவரீதியான தன்னம்பிக்கை சிந்தனைகள் ஏராளம். ‘கல்வியை பொறுத்தவரை நமக்கு யானைப்பசி வேண்டும்’ […]

Read more

இராகவம் 2

இராகவம் 2, முனைவர் கா.அய்யப்பன், காவ்யா பதிப்பகம், பக். 912, விலை 900ரூ. இராகவம் – 2 ரா.இராகவையங்காரின் சங்க இலக்கிய உரைகள்’ என்ற இந்த நுால், தமிழறிஞர்களுக்கு அரிய கருவூலமாய் விளங்குகிற நுால். மகாவித்வான், ரா.இரா., மிகப் பெரிய ஆராய்ச்சி அறிஞர், கவிஞர், ஆசுகவி. நுால்கள் பல யாத்தவர். அவருடைய பெரும் புலமை இந்த நுாலில் வெளிப்படுவதை, நுாலைப் படிப்போர் உணர்வர். நுண்ணறிவால் பாட வேறுபாடுகளை குறிப்பிட்டு, மிகப் பொருத்தமான பாட பேதத்தை ஏற்று, விளக்கம் அளித்துள்ளார். இந்தத் தமிழறிஞரின் புலமைத் திறம் […]

Read more

இந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்

இந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம், டாக்டர் மு.நீலகண்டன், கனிஷ்கா புத்தக இல்லம், பக். 192, விலை 200ரூ. இந்திய இறையாண்மையைக் காக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய அரசியல் சாசன வரைவுக்குழுவில் பங்கேற்றவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எஸ்.கோபால்சாமி அய்யங்கார் ஆகியோர், இன்று மறக்கப்பட்ட பெயர்கள். ஆனால் நல்லவேளையாக இம்மாபெரும் சாசனத்தை, சிறந்த ஆவணமாக்கிய டாக்டர் அம்பேத்கர் இன்று வரை போற்றப்படுவது நல்ல அம்சம். நம் அரசியல் சாசனம் காட்டிய வழிகளை சரியாக உணர்ந்து செயல்படும் அரசியல் […]

Read more

இன்புற்று சீலத்து ராமானுஜர்

இன்புற்று சீலத்து ராமானுஜர், தி.விப்நாராயணன், மித்ரஸ் பதிப்பகம், விலை 70ரூ. உலகு உய்ய வந்து அவதரித்த மகான் ராமானுஜர். அவரது வரலாற்றை இனிய கவிதைகளாக வடித்துள்ளார் விப்ரநாராயணன். ராமானுஜர், வைணவருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக சமுதாயத்திற்காகவே வாழ்ந்தவர். ‘வேரூன்றிய தீண்டாமையை வேரோடு அழித்த சமுதாயச் சிற்பியாவார். வேதாந்த ஞானி இவர்; வேதத்தின் சாரத்தை தந்தவர்; வேண்டுதல் வேண்டாமை இலாதவர்’ என்று ராமானுஜரைப் புகழ்கிறார். ராமானுஜரின் வரலாறு, அவர் கற்ற முறை, அவரின் ஆச்சார்யர்கள் பற்றிய செய்திகள், ஸ்ரீபாஷ்யம் விளக்கவுரைக்கு அவர் பட்ட இன்னல்கள், அவரின் […]

Read more

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018, பேரா.அ.ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்., விலை 395ரூ. ஆங்கிலேயர் ஆட்சியில், தமிழ்நாடு என்னும் முதல் பாகத்தில் ஆர்க்காடு நவாபின் ஆட்சி, 1710ல் துவங்கி, 1962ல், புதுச்சேரி பிரெஞ்சு பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது வரை, 14 தலைப்புகளில் அமைந்துள்ளது. விடுதலைக்குப் பின், தமிழகம் என்னும் இரண்டாம் பாகத்தில் தமிழக – ஆந்திர எல்லைப் பிரச்னை துவங்கி, 2018ல் காவிரி நதி நீர் நடுவம் அளித்த தீர்ப்பு வரை, எல்லாவற்றையும் விபரமாக எடுத்தாளப்பட்டு உள்ளது. பிற […]

Read more

ஓட்டைக் குடிசை

ஓட்டைக் குடிசை, வித்யாசாகர், முகில் பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. தமிழ் வாசக உள்ளங்களை தன் பேனா முனையால் தன்வசப்படுத்திக் கொண்ட வித்யாசாகர், சிறுகதை மூலம் அழகிய அனுபவப் பகிர்வை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஓட்டைக் குடிசை சிறுகதை தொகுப்பில் காட்டாற்று வெள்ளம் போல மடமடவென வரும் வார்த்தைகள், நுாலாசிரியரின் எழுத்தாற்றலுக்கு கிடைத்திருக்கும் பெரும் பலம். புதிய அனுபவத்தை மாறுபட்ட களத்தில் அளித்திருக்கும் வித்யாசாகருக்கு பாராட்டுகள். – மாசிலா ராஜகுரு நன்றி:தினமலர், 28/7/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 64 65 66 67 68 240