திரைமொழி

திரைமொழி, வித்யாசாகர், முகில் பதிப்பகம், விலைரூ.180 த்யாசாகர் எழுதியுள்ள ஒவ்வொரு திரைப்படத்தின் ஆழமான விமர்சனங்களும் வாழ்வியலின் நிதர்சனப் பதிவன்றி வேறில்லை. திரைப்படம் பற்றிய சிறந்த பார்வையை கற்றுத் தந்திருக்கிறார். இந்நுால் எதிர்கால இளைஞர்களின் சிந்தனைப் பெட்டகமாகவும், புதிதாக திரைப்படம் இயக்கும் இயக்குனர்களுக்கு கதைகளின் களமாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 28/7/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

எம்.கே.டி. பாகவதர் இசையும் வாழ்க்கையும்

எம்.கே.டி. பாகவதர் இசையும் வாழ்க்கையும், டி.வி.பாலகிருஷ்ணன், ஓல்டு மெட்ராஸ் பிரஸ், பக். 296, விலை 499ரூ. எத்தனையோ பேர் பாகவதர் என்ற பட்டத்தைப் பெற்றாலும், பொதுவாக பாகவதர் என்றால் தியாகராஜ பாகவதர் ஒருவர் என்ற கருத்தை இன்றைய புதிய யுகமும் மறக்காது. பொன்நிற மேனி, நெற்றியில் ஜவ்வாது பொட்டு, தலையில் சுருண்ட முடி ஆகியவை அவரது சிறப்பை அலங்கரிக்கும் தோற்றம். நகைத் தொழிலாளியின் குடும்பம் என்றாலும் சிறுவயது முதலே இசை அவரை ஆட்கொண்டது. அதனால் முதலில் அவரது தந்தை கோபத்திற்கு ஆளாகி வீட்டை விட்டு […]

Read more

ஆய்வுச் சுவடுகள்

ஆய்வுச் சுவடுகள், முனைவர் யோ.ஞானச்சந்திர ஜான்சன், கீர்த்தனா பதிப்பகம், பக். 339, விலை 250ரூ. தமிழ் இலக்கியம் ஒரு காலத்தில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் எனப் பகுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பகுப்பையும் தாண்டி, சமய இலக்கியம் என்னும் பகுப்பும் தோன்றியது. சமய இலக்கியங்களில் ஐரோப்பியரின் வருகைக்குப் பின், கிறிஸ்துவ இலக்கியங்கள் தமிழில் தோன்றி, தமிழ் மொழிக்குப் புது மறுமலர்ச்சியைக் கொடுத்தன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்னும் நிலையைக் கடந்து, தற்கால உரைநடை இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின. அந்தக் கிறிஸ்துவ […]

Read more

உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால், லட்சுமி ராஜரத்னம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 120, விலை 120ரூ. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. வார்த்தை தவறி விட்டால்… அதன் விளைவுகள் சொல்லொணா துயரம் தருகின்றன. நெல் போட்டால் நெல் விளையும். சொல் போட்டால் சொல் தானே விளைய வேண்டும். மாறாக துன்பம், கோபம், ஆற்றாமை, ஆதங்கத்தை ஏன் அறுவடை செய்ய வேண்டும் என, கேள்வி கேட்கிறார், ஆசிரியர் லட்சுமி ராஜரத்னம். மக்கு பல், உதட்டை கடவுள் ஏன் கொடுத்திருக்கிறார் தெரியுமா என்பது அவரது கேள்வி. […]

Read more

சிந்திக்கத் தூண்டிய மாணாக்கர்கள்

சிந்திக்கத் தூண்டிய மாணாக்கர்கள், சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம், பக். 96, விலை 200ரூ. தொலை தொடர்பு பார்வையில் செல்லும் குழந்தைகளைக் கூர்ந்து உற்றுநோக்கும் உளவியல் நிபுணர், சிந்தை ஜெயராமன். குழந்தைகளை அணுகும் முறைகள் குறித்து, பெற்றோருக்கு அறிவுரை கூறும் கல்வியாளர். தமிழகத்தின் கல்வியில் புதுமை சிந்தனை தீட்டியவர். கல்வித் துறையிலும், கற்றல் மேம்பாட்டிலும் உன்னதமான கருத்துகளை தன்னகத்தே கொண்டுள்ள ஒப்பற்ற நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 18/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

ஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல்

ஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல், முனைவர் இரா.சர்மிளா, காவ்யா பதிப்பகம், பக்.115, விலை 120ரூ. மனித உடல், 200க்கும் மேற்பட்ட செல்களால் வடிவமைக்கப்பட்டது. இவை அனைத்தும் முதன்மைச் செல்களிலிருந்து உற்பத்தியாகின்றன. இந்த முதன்மைச் செல்களே ஸ்டெம் செல் எனும் குருத்தணு. ஸ்டெம் செல் தொப்புள் கொடியினுள் இருப்பது. இது தசை, நரம்பு, ரத்தம் போன்ற பல்வேறு விதமான செல்களுக்கும் முதன்மையான செல். இது, ஒரு செல்லிலிருந்து மற்றொரு வகை செல்களை உற்பத்தி செய்யும் திறனும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் […]

Read more

தமிழாற்றுப்படை

தமிழாற்றுப்படை, கவிஞர் வைரமுத்து, திருமகள் நிலையம், பக். 360, விலை 500ரூ. தமிழ்மொழியின் அகவை, 3,000 ஆண்டுகளுக்கும் மேல். அந்தத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தோர், இலக்கியம் படைத்தோர், நீதிநுால் செய்தோர், காப்பியம் கண்டோர், அறநுால் ஆக்கியோர், பேரிலக்கியமாய்ப் போரிலக்கியம் படைத்தோர், அடைபட்டுக் கிடந்த மொழிச் செல்வங்களை மீட்டெடுத்தோர், இதன் தொன்மையை ஆராய்ந்து அறிவித்தோர், சீர்திருத்தம் செய்து மொழியைச் செப்பனிட்டோர், தெய்வம் தொழுதோர், பகுத்தறிவு பரப்பியோர், பொதுவுடைமை பேசியோர், கலையிலும் அரசியலிலும் தமிழுக்குத் தகுதி தந்தோர் இப்படித் தமிழ்ப்பணி ஆற்றிய, 24 ஆளுமைகள் குறித்து, கவிஞர் […]

Read more

ஆய்வுச் சுவடுகள்

ஆய்வுச் சுவடுகள், முனைவர் யோ. ஞானச்சந்திர ஜான்சன், கீர்த்தனா பதிப்பகம், பக். 339, விலை 250ரூ. தமிழ் இலக்கியம் ஒரு காலத்தில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் எனப் பகுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பகுப்பையும் தாண்டி, சமய இலக்கியம் என்னும் பகுப்பும் தோன்றியது. சமய இலக்கியங்களில் ஐரோப்பியரின் வருகைக்குப் பின், கிறிஸ்துவ இலக்கியங்கள் தமிழில் தோன்றி, தமிழ் மொழிக்குப் புது மறுமலர்ச்சியைக் கொடுத்தன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்னும் நிலையைக் கடந்து, தற்கால உரைநடை இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின. அந்தக் […]

Read more

விவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்

விவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும், ப.கோடித்துரை, காவ்யா, பக். 108, விலை 110ரூ. விவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப் பாடல்களும் வாழ்வில் வெற்றி பெற விவேகம் வேண்டும். விவேக சிந்தாமணி, 135 பாடல்களைக் கொண்டது; வாழ்வியல் அறங்களை உணர்த்துகிறது. முன்னோர் மொழிப் பொருளைப் பொன்னே போல் போற்றுவோம் என்பதற்கிணங்க, நீதி நுால்களின் கருத்துகளைத் தழுவி உள்ளது. பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளுக்கு, விவேக சிந்தாமணியில் உள்ள பாடல்கள் பெரிதும் துணை புரியும். ஆபத்து வேளையில் உதவாத பிள்ளை, மிக்க பசிக்கு உதவாத உணவு, தாகத்தைத் […]

Read more

கா.சு.பிள்ளை சைவப்பெருமக்கள்

கா.சு.பிள்ளை சைவப்பெருமக்கள், பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 664, விலை 680ரூ. தமிழகத்தின் தொன்மைச் சமயம் சைவமாகும். இச்சமயம் வளர்த்த பெரியோர் பற்பலராவர்; அவருள் தாயுமானவர், பட்டினத்தார், குமரகுருபரர், சிவஞான சுவாமிகள் ஆகிய நால்வர் பற்றியும், சைவ சித்தாந்த விளக்கத்தையும், சைவ சிந்தாந்த சந்தனாச்சிரியர்கள் பற்றியும் இந்நுால் விரிவாகச் சொல்லியுள்ளது. நுாலைப் படைத்தவர், தமிழகத்தில் தமிழ் வளர்த்த சான்றோரில் குறிப்பிடத்தக்க இடம்பெற்றவர். சட்டம் படித்த பலர் தமிழறிஞராகவும் விளங்கினர். அவருள் எம்.எல்., பிள்ளை எனக் குறிக்கப்பட்ட, கா.சுப்பிரமணிய பிள்ளை முதன்மையாளர். அவர் காலத்து, பி.எல்., சட்டப் […]

Read more
1 63 64 65 66 67 240