சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா

சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, கே.ஜீவபாரதி, அன்னம் (பி) லிட், பக்.118, விலை 100ரூ. ஆழியின் சீற்றத்தால் அழிந்த தமிழ் நுால்களை விட, அறியாமையாலும் கவனக்குறைவாலும் மறைந்து போன நுால்களும், அறிஞர்களும் ஏராளம். ‘இலக்கியத்தில் புதிய எதார்த்தவாதம்’ என்ற தலைப்பில் ஜீவா, ‘தாமரை’ இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். இந்நுாலைப் பயில்வதன் மூலம் மனிதகுல வளர்ச்சிக்கு இலக்கியத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும், சோவியத் வளர்ச்சிக்கு வித்திட்ட கார்க்கி மற்றும் மாயக்கோவ்ஸ்கி வரலாற்று நாயகர்களின் இலக்கிய ஆளுமைகளையும், மார்க்ஸ், லெனின்,  போன்ற […]

Read more

மனித வாழ்வில் ஆவணங்கள் வழக்கறிஞர் தரும் விளக்கங்கள்

மனித வாழ்வில் ஆவணங்கள் வழக்கறிஞர் தரும் விளக்கங்கள், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நந்தவன பதிப்பகம், பக். 166, விலை 200ரூ. கணினி மயமாக்கப்பட்ட இன்றைய காலக்கட்டத்தில், சொத்து சம்பந்தமான ஆவணங்களை எப்படி எழுதுவது? அதை எப்படி பதிவு செய்வது என்பது தெரியாமல் கிராமப்புற மக்கள் திண்டாடுவதை நாம் காண்கிறோம். அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் இந்நுால் எழுதப்பட்டு உள்ளது. இந்நுாலாசிரியரும் வழக்கறிஞருமான கிருஷ்ணமூர்த்தி, சொத்து சம்பந்தமான பிரச்னைகள், அதை பதிவு செய்யும் முறைகள், அதில் ஏற்படக்கூடிய வில்லங்கங்கள், அதற்கான தீர்வுகள் மற்றும் பல்வேறு விபரங்களையும் […]

Read more

வலி – இலக்கியம் – அரசியல்

வலி – இலக்கியம் – அரசியல், முனைவர் ஆ.ரேவதி, காவ்யா, பக். 136, விலை 140ரூ. இந்திய சமூகத்தில், ‘வேற்றுமை பார்க்கும் பண்பு’ ஆழமாக வேரூன்றிப் போயுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கொழுந்துவிட்டு எரியும், ‘சாதி’ என்ற தீ, சாதிக்குள் சாதி என்று சல்லி வேர்கள் போல் கிளை பரப்பி, இந்திய மனித சமூகத்தை வதைத்துக் கொண்டிருக்கிறது. மனிதருக்குள் மனிதரை வேற்றுமை பாராட்டி ஒடுக்கியும் விலக்கியும் வைப்பதற்கு எதிராக எழுத்து, ஆயுதமாக பல காலம் கையாளப்பட்டு வந்துள்ளது. இந்நுாலை உருவாக்கியுள்ள நுாலாசிரியர் ரேவதி, […]

Read more

கல்கியின் சிறுகதைக் களஞ்சியம்

கல்கியின் சிறுகதைக் களஞ்சியம், ஏ.கே.எஸ்.புக்ஸ் வேல்டு, பக். 548, விலை 450ரூ. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலைஓசை, தியாக பூமி போன்ற பெரிய நாவல்களில் வைரச் சுரங்கங்களை வைத்த பேராசிரியர் கல்கி, தன் சிறுகதைகளிலும் அமுதம் தேக்கி வைத்தார். சித்ர வேலைப்பாடுகள் செய்தார். தேச விடுதலையும், பெண் விடுதலையும் கல்கிக்கு இரு கண்கள். இவை அவரது சிறுகதைகளிலும் பிரதிபலித்தன. பழ.சிதம்பரன் என்ற எழுத்தாளர் எழுதினார். கல்கியின் தமிழ் நடை மத்த கஜத்தின் கம்பீர நடையைப் போன்றது. ஜீவ நதியின் நீரோட்டத்திற்கு ஒப்பானது. சிவகாமியின் […]

Read more

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே, கவிஞர் முத்துலிங்கம், வானதி பதிப்பகம், பக். 496, விலை 400ரூ. இந்த கட்டுரைத் தொகுதியில், கவிஞர் தன்னைப் பற்றி பேசுகிறார். ஆனால், தன்னை மட்டும் முன் நிறுத்தாது, திரைக்கவி முன்னோடிகள் குறித்து நிறைய பேசுகிறார். பல சம்பவங்கள் குறித்துப் படித்து சிலிர்ப்பு அடைகிறோம். ஒரு படத்தில் டைட்டிலில் மருதகாசி, கண்ணதாசன், தஞ்சை ராமையா தாஸ் ஆகியோர் பெயருக்குக் கீழே, உடுமலை நாராயணகவி பெயரைப் போட்டனர். அப்போது ஒரு நண்பர், உடுமலையாரிடம் என்னய்யா, எவ்வளவு பெரிய சீனியர் நீங்கள், உங்களுக்குக் கீழே […]

Read more

அறிவுடையார் எல்லாம் உடையார்

அறிவுடையார் எல்லாம் உடையார், பிரேமா பதிப்பகம், பக். 192 முதுகலைத் தமிழ் ஆசிரியராக 32 ஆண்டுகள் பள்ளியில் பணிபுரிந்தமைக்கு நல்லாசிரியர் விருது பெற்ற சிறந்த ஆன்மிகப் பேச்சாளர். திருவொற்றியூர், “பாரதி பாசறை அமைப்பை உருவாக்கி 26 ஆண்டுகளாக பலநூறு இளைஞர்களை உருவாக்கிய பெருமை பெற்றவர் படைத்த 20 கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. “நெஞ்சம் மறவா கட்டுரை நெஞ்சை நெகிழ வைக்கிறது. “வாழ்வதற்கு பொருள் வேண்டும் தான். ஆனாலும் வாழ்வதிலும் பொருள் வேண்டாமா என்ற, அவரது கவிதை நெறிப்படி அறிவுபாதையில் பயணிக்க உதவிடும் நூல். […]

Read more

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு, டாக்டர்.எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், பக். 120, விலை 300ரூ. திரையுலகில் நாடோடி மன்னனாய் வாழ்ந்து, மறைந்தும், மறையாமல் நிரந்தரமாக மக்கள் மனதில் குடியிருக்கும் கோவில், எம்.ஜி.ஆர்., என்றால் மிகையாகாது. புரட்சித் தலைவர் உடல்நலம் குன்றிய கால கட்டத்தில், அவருக்கு என்னென்ன நோய் தாக்குதல்… எத்தகைய சிகிச்சைகளை எந்தெந்த சிறப்பு மருத்துவர்கள் மேற்கொண்டனர் என்ற விபரங்களை, நுாலாசிரியர் ஹண்டே மிகத் தெளிவாக இந்நுாலில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் திலகத்தின் இதயத்தோடு நெருக்கமாக இருந்து வெற்றிப் பாதையில் பயணித்து, எம்.ஜி.ஆரின் வரலாற்றை எழுதிய […]

Read more

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018, பேரா., அ.ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.395 ஆங்கிலேயர் ஆட்சியில், தமிழ்நாடு என்னும் முதல் பாகத்தில் ஆர்க்காடு நவாபின் ஆட்சி, 1710ல் துவங்கி, 1962ல், புதுச்சேரி பிரெஞ்சு பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது வரை, 14 தலைப்புகளில் அமைந்துள்ளது. விடுதலைக்குப் பின், தமிழகம் என்னும் இரண்டாம் பாகத்தில் தமிழக – ஆந்திர எல்லைப் பிரச்னை துவங்கி, 2018ல் காவிரி நதி நீர் நடுவம் அளித்த தீர்ப்பு வரை, எல்லாவற்றையும் விபரமாக எடுத்தாளப்பட்டு உள்ளது. பிற […]

Read more

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை, அழ.சுப.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 112, விலை 120ரூ. நம் இந்திய நாட்டின் வலிமை, மணமக்கள் வலது காலை எடுத்து வைத்து வருவது ஏன்? மணமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது, ஆபரணங்களின் அர்த்தம் – திருமணத்தில் யாரை எப்படி வணங்க வேண்டும்? வாழ்க்கை எது வரை, சிரிப்பு வகைகள், வாழ்க்கைக் கணிதம், புயல் உருவாவது எப்படி? நேரம் சொல்லும் பறவை, நிரந்தரம் இல்லை, உகந்த உறவினர்கள் யார்? குழந்தை பிறந்த ஒரு ஆண்டிற்குள் மொட்டை போடுவது ஏன்? […]

Read more

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், எழுபது பீடாதிபதிபளின் குருபரம்பரை தொகுப்பு, டாக்டர் ஆர்.வைத்தியநாதன், ஸ்ரீ சங்கராலயம், பக். 212, விலை 250ரூ. எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு புத்தகம் ஆன்மிகம் தொடர்பானது. ஸ்ரீ காஞ்சி மடம் என்பது மகா பெரியவர் என்ற ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலத்தில் பெரிய விருட்சமாக வளர்ந்தது. நாத்திக வாதம் குறைய பல்முனை ஆன்மிக கருத்துக்களை மக்களிடம் பரப்பியவர். அவர் சீடர்கள் அளித்த தகவல்கள், ஸ்ரீ ஜெயேந்திரர் காட்டிய சில ஆதாரங்கள் அடிப்படையில், இப்புத்தகம் உருவானதாக ஆசிரியர் […]

Read more
1 62 63 64 65 66 240