அல்லல் போக்கும் மகாபைரவர்

அல்லல் போக்கும் மகாபைரவர், சிவம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 25ரூ., ஸ்ரீ பிரம்ம வைவர்த்த புராணம், விலை 40ரூ., ஸ்ரீ வாமன புராணம், விலை 50ரூ, பவிஷ்ய புராணம், விலை 40ரூ. புராணங்கள், தெய்வீகம் தொடர்பான இந்த நூல்கள் பல விஷயங்களை உள்ளடக்கியன. பவிஷ்ய புராணத்தில் சூரியன் தோன்றியது உட்பட பல கருத்துக்கள் உள்ளன. ஸ்ரீ பிரம்ம வைவர்த்த புராணத்தில் நாரதர் கதையைக் காணலாம். மகா பைரவர் வழிபாட்டு முறைகளில், சொர்ண பைரவர் பற்றி பல தகவல்கள் சிறப்பாக உள்ளன. ஆன்மிகத்தில் தோய்ந்தவர்களுக்கு உரிய […]

Read more

எய்ட்ஸ் நோயாளிகளின் மவுன மொழிகள்

எய்ட்ஸ் நோயாளிகளின் மவுன மொழிகள், ஸ்டீபன் மாத்தூர், மணிமேகலை பிரசுரம், விலை 200ரூ. சொல்லத் தயங்குகிற ஒரு சொல்லாக எய்ட்ஸ் நோய் ஆகிவிட்டது. அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியில் சொல்லாமல் வெட்கப்பட்டு வேதனைத் தீயில் அவதிப்படுபவர்களாகவே உள்ளனர். ஆறுதல் கூற அவர்களுக்கு யாருளர் என்று சொல்லக்கூடிய நிலை தான் உள்ளது. அத்தகைய நோயாளிகள் வாழ்விலிருந்து விலகியே நிற்பது கண்டுணர்ந்து, அவர்களின் அவலத்தை வசன கவிதையாக வடித்துள்ளார் நுாலாசிரியர் ஸ்டீபன். நோய் வாய்ப்பட்டவரின் குடும்ப நிலையும், அந்நோய்க்கு ஆளாகி வருந்தும் வருத்தமும், கண் கெட்ட பிறகு […]

Read more

அற்புதங்கள் தரும் ஆலயங்கள் 5 பாகங்கள்

அற்புதங்கள் தரும் ஆலயங்கள் 5 பாகங்கள், சத்யவதனா, சத்யா பதிப்பகம், பக். 1340, விலை 675ரூ. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உட்பட, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் வாரியாகவும், ஆந்திரா, கர்நாடகா, அசாம், கேரள மாநிலங்களில் உள்ள, 187 ஹிந்து தலங்கள் பற்றிய சிறு முன்னோட்டத்தை, இந்நுால்கள் வழங்கியுள்ளன. நான்கு பாகங்களை, சத்யவதனா என்பவரும், ஐந்தாவது பாகத்தை, வீரரகுவும் எழுதியுள்ளனர். ஐந்தாவது பாகம், அதிலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. உலகின் முதல் சிவன் கோவில், சிவராத்திரி சிறப்புகள், 1,008 லிங்கங்களின் பெயர்கள் என, சுவாரஸ்யமாகவும் […]

Read more

பெரியபட்டினம் காசுகள்

பெரியபட்டினம் காசுகள், ப.சண்முகம், முன்னாள் பேராசிரியர், தஞ்சாவூர் தொல்லியல் கழகம், பக். 130, விலை 125ரூ. பெரியபட்டினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்ந துறைமுகப் பட்டினமாக இருந்த ஊர். இன்றும் சிவகங்கை அருகே உள்ள கீழடி அகழ்வாய்வு, தமிழகத்தில் தென்பாண்டி நாடு கலாசார கேந்திரம் என்பதை உணர்த்துகிறது அல்லவா… பெரிய பட்டினத்தில் கிடைத்த பாண்டிய, சோழ, சேர மன்னர்கள் காசுகள் தவிர தமிழகத்தில், விஜயநகர அரசர்கள், ஆங்கில ஐரோப்பிய கம்பெனிகள் காசுகள் என்று பலவற்றை இந்த நுாலில் விளக்குகிறார் ஆசிரியர். சங்க கால பாண்டியர் காசுகளை […]

Read more

பெண்ணியம்

பெண்ணியம், முனைவர் இரா.பிரேமா, பாரி புத்தக நிலையம், பக். 216, விலை 90ரூ. பெண்ணியம்’ என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம், சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. உண்மையில், பெண்ணியத்தின் நோக்கம் அதுவன்று; காலம் காலமாக அடிமைப்பட்டு, வதைப்பட்டு வாழும் பெண்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியின் மூலம் விழிப்புணர்வு ஊட்டி, சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கமும் செயல்பாடும் ஆகும். இந்த இலக்கை அடைய ஆண்கள் தடையாகும்போது மட்டுமே அவர்கள் எதிரிகளாகின்றனர். இன்று பெண்ணியம் பற்றி முழுவதுமாக […]

Read more

எங்கள் தாத்தா அறவாணர் அருள்மொழிகள்

எங்கள் தாத்தா அறவாணர் அருள்மொழிகள், அருணன் அறவாணன், தமிழ்க்கோட்டம், விலை 90ரூ. இலக்கியவாதிகளின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவரும், நேர்மையின் சிகரமாக வாழ்ந்தவருமான, அறவாணரை நினைவு கூரும் வகையில் பெயரர், பெயர்த்தியர் இந்நுாலை உருவாக்கியுள்ளனர். எங்கள் தாத்தா அறவாணரின் அறமொழி சிந்தனைகள், அமுத யாழினி வாஞ்சையுடன் அழைத்த, ‘தொப்பி’ தாத்தா, அறவாணரின் அயல்நாட்டு பயணங்கள், அறவாணரின் வாழ்வியல், பேராசிரியரின் அரிய பொக்கிஷங்களாகிய நுால்கள் இன்று வரை, அறவாணர் சாதனை விருது பெற்ற சான்றோர்கள், மனைவி தாயம்மாளின், ‘அவர் அன்றி அவள் இல்லை’ உள்ளிட்ட செய்திகள் […]

Read more

கற்கோயிலும் சொற்கோயிலும்

கற்கோயிலும் சொற்கோயிலும், மா.கி.இரமணன், பூங்கொடி பதிப்பகம், விலை 150ரூ. ஆசிரியர் மா.கி.இரமணன், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் என்று மிளிர்பவர். ஆம். அதற்கு அவர் எழுதிய கவிதையே சான்று. வாழ்வதற்குப் பொருள் வேண்டும் தான். ஆனாலும் வாழ்வதிலும் பொருள் வேண்டாமா என்ற வரிகள், ஆழ்ந்த சிந்தனையைத் துாண்டும். உண்மையான பூங்கொடி மணக்கத்தானே செய்யும் நுாலின் பெயரே, முதல் கட்டுரையின் தலைப்பாக உள்ளது. ஐந்தெழுத்தை நெஞ்சழுத்தி எழுதிய அனைத்துக் கட்டுரைகளும், கன்னித் தமிழின் களி நடனம், சிந்தனை ஊற்றின் சிகரம் எனலாம். இந்தக் கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் […]

Read more

மாவீரன் நெப்போலியன்

மாவீரன் நெப்போலியன், ஜெய்சூர்ய குமாரி, சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 250ரூ. சுதந்திர சுவாசம் நிறைந்த இன்றைய நாளில் இருபது வயது இளைஞர்கள் சமூக வலைத்தள வீரர்களாக ஒளிந்தபடி ஒளிப்பதிவுகள் செய்துகொண்டிருக்க, பதினெட்டாம் நுாற்றாண்டில் அதே இளம் வயதில் ஒரு ஒப்பற்ற மாவீரனாக விளங்கிய நெப்போலியனின் நிகரற்ற வரலாறே இந்நுால்! இத்தாலியைப் பூர்விகமாகக் கொண்ட நெப்போலியன் குடும்பம் பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்ட கார்சிகா தீவுக்கு குடிபெயர்ந்த காலகட்டத்தில், பிரெஞ்சுக்காரர்க்கும் ஒற்றுமையற்ற கார்சிகா தீவினர்க்கும் இடையே கடும் போராட்டம் நிலவிய சூழல்களும், தொடர்ந்த பிரெஞ்சுப் புரட்சிக் […]

Read more

குறள் காட்டும் விலங்கு பறவைகள்

குறள் காட்டும் விலங்கு பறவைகள், பீ.ஜோசி அபர்ணா, திருவள்ளுவர் புத்தக நிலையம். திருக்குறளைப் பலரும் பலவித மாக ஆராய்ந்து இருக்கின்றனர். ஆனால், இந்த நுாலின் ஆசிரியரான பள்ளி மாணவி, ஜோசி அபர்ணா, வித்தியாச மான கோணத்தில் திருக்குறளைப் பார்த்திருக்கிறார் என்றால், அது மிகையாகாது. திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து தேடிப் பிடித்து, இந்த நுாலை எழுதியிருக்கிறார். வெறுமனே விலங்குகள், பறவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பட்டியல் மட்டும் தராமல், அவற்றின் குணநலன்கள், மனிதனுக்கு அவை எப்படி பொருந்துகிறது என்பதையும் விளக்கி இருக்கிறார்.நுாலின் பிற்பகுதியில், […]

Read more

பச்சைப்புடவைக்காரி

பச்சைப்புடவைக்காரி, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 328, விலை 300ரூ. பக்தர்களின் பக்தியை அளவிடுகிறாள் பச்சைப்புடவைக்காரியாக வலம் வரும் மதுரை அன்னை மீனாட்சி. அவளின் தராசில் கடமைகளும், பொறுப்புகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அளவுகோல் இருக்கிறது. அதை எப்படித் தெரிந்து கொள்வது என வழிகாட்டுகிறார் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. மனித முயற்சியால் முடிந்த அளவு செய்துவிட்டு பின், அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடுவதே சரியான பக்தி. இத்தகைய பக்தியை தான் அன்னை மீனாட்சி விரும்புவதாக ஆசிரியர் தன் பக்கங்களில் தன்னம்பிக்கை விதையை விதைத்துக் […]

Read more
1 60 61 62 63 64 240