நாளும் நலம் நாடி

நாளும் நலம் நாடி, மருத்துவர் அசோக், மணிமேகலைப்பிரசுரம், உடல்நலம், மனநலம், சமுதாய நலம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த கருத்தாக மருத்துவத்தை எளிதாக புரிய உதவிடும் நுால். ஆசிரியர் அசோக், ஆங்கிலம் மற்றும் சித்த மருத்துவத்தில் நல்ல பரிச்சயம் கொண்டவர். அகில இந்திய வானொலியில் இவர் தினசரி உரையாற்றிய தொகுப்பை இந்த நுால் கொண்டிருக்கிறது. சர்க்கரை வியாதி இப்போது புதிதாக சமுதாயத்தை மிரட்டும் நோய். அதை சமாளிக்க நார்ச்சத்துணவை வலியுறுத்தும் பலரும் எது நார்ச்சத்து உணவு என்று பட்டியலை உருவாக்க சிரமப்படலாம். பீன்ஸ், காளான், சோயா, வெங்காயத்தாள் […]

Read more

குண்டலினி சொல்லப்படாத ஒரு கதை

குண்டலினி சொல்லப்படாத ஒரு கதை, ஓம் சுவாமி, ஜெய்கோ பப்ளிஷிங், விலை 199ரூ. இமயமலை அடிவாரத்தில் வாழும் ஒரு துறவியான ஓம் சுவாமி, மகிழ்ச்சியான வாழ்வைத் தேடும் வாழ்க்கையை இதில் அழகாகச் சொல்கிறார். குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்களை குழப்பாமல், புதிய விதமாக அவர் சொல்வதை, அவர் உரைகளில் கேட்டு உருவாக்கப்பட்ட சிறந்த படைப்பாகும். வணிக இயல் பட்டம், மேலாண்மைப்பட்டம் பெற்ற ஓம்சுவாமி, அகங்காரம் உட்பட அனைத்தையும் தகர்க்கும் குண்டலினி எழுப்புதல், நம் பாரம்பரிய தத்துவம் அதை சரளமாக விளக்குகிறது இந்த நுால், அன்புத்தத்துவத்தை […]

Read more

அடிப்படை மார்க்கெட்டிங் கோட்பாடுகள்

அடிப்படை மார்க்கெட்டிங் கோட்பாடுகள், எஸ்.ரங்கராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 172, விலை 150ரூ. விளம்பரம் இல்லாத உலகம் ஏது? நம்மைப் பற்றி மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவதும் ஒரு வகையில் விளம்பரம் தான். பூவுக்கும், நாருக்கும் மட்டுமல்ல… அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் விளம்பரம் பிரதானமாக உள்ளது. மார்க்கெட்டில் எத்தனை வகை பொருட்கள் இருக்கிறது என்பதை விட, எத்தனை பொருட்கள் வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடிக்கின்றன என்பது தான் முக்கியம். அந்த வகையில், உற்பத்தியாளர்களின் விளம்பரங்கள் பெற்ற வளர்ச்சி, வீழ்ச்சி, வெற்றி, […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம், தாயம்மாள் அறவாணன், பக். 704, விலை 600ரூ. அன்புக்குரிய துணைவர் அறிஞர் அறவாணனுக்கு இந்த நுாலை காணிக்கையாக்கி, பெருமை சேர்த்திருக்கிறார் ஆசிரியர் தாயம்மாள், தமிழகத்தில், பல அவ்வையார்கள் விட்டு சென்ற அறநுால் பதிவுகள் அனைத்திற்கும் விளக்கமாக இந்த நுாலை எழுதியிருக்கிறார். அவ்வை என்ற சொல் வயதில் மூத்தவள், தமக்கை, பெண் துறவி ஆகியவற்றை குறிக்க வழங்குகிறது. சங்க கால அவ்வை தொடங்கி, பல அவ்வையார் வாழ்ந்திருக்கலாம் என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். காதல் பாடல்களை அவ்வை பாடியதாக குறிக்கும் ஆசிரியர் […]

Read more

திரைமொழி

திரைமொழி, வித்யாசாகர், முகில் பதிப்பகம், பக். 184, விலை 180ரூ. வித்யாசாகர் எழுதியுள்ள ஒவ்வொரு திரைப்படத்தின் ஆழமான விமர்சனங்களும் வாழ்வியலின் நிதர்சனப் பதிவன்றி வேறில்லை. திரைப்படம் பற்றிய சிறந்த பார்வையை கற்றுத் தந்திருக்கிறார். இந்நுால் எதிர்கால இளைஞர்களின் சிந்தனைப் பெட்டகமாகவும், புதிதாக திரைப்படம் இயக்கும் இயக்குனர்களுக்கு கதைகளின் களமாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை நன்றி:தினமலர், 28/7/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உயர் கணித நட்சத்திர ஜோதிடம்

உயர் கணித நட்சத்திர ஜோதிடம், ஏ.திருநாவுக்கரசு, கற்பகம் புத்தகாலயம், பக். 104, விலை 90ரூ. இந்நுால், அடிப்படை ஜோதிட கணிதங்கள், காரகங்கள், உயர் கணித சார ஜோதிட விதிகள் மற்றும் உதாரண ஜாதகங்களால் விளக்கம் என, நான்கு பகுதிகளாக உள்ளது. ராசிக் கட்டங்களின், 12 பாவங்களுக்கும் லக்னம் அமைத்து, அந்த லக்னம் நின்ற நட்சத்திராதிபதியைக் கொண்டு, பலன்கள் சொல்லும் முறையை நுாலாசிரியர் கூறுகிறார். இந்நுாலில், ஜாதகங்களை விளக்கும்போது, கால புருஷ தத்துவ விளக்கங்களோடு இணைத்து, நுாலாசிரியர் விளக்கும் பாங்கு பாராட்டத்தக்கது. ஓரளவு ஜோதிடப் புலமையுள்ள […]

Read more

நேற்று இன்று நாளை

நேற்று இன்று நாளை, இ.இருதய வளனரசு, ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ், பவளவிழா வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், பக். 96, விலை 75ரூ. இந்நுாலினுள் பவளவிழா காணும் பள்ளியின் வரலாறு, முன்னாள் மாணவர் மன்றத்தின் பணியும் பயணமும், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் அடிச்சுவடுகள், தே பிரித்தோ பள்ளியின் அரிய நிழற்படங்கள் போன்றவற்றை தொகுத்து தந்திருப்பது, நுாலுக்கு அணி சேர்க்கிறது. நேற்றைய கலை இலக்கிய ஆளுமைகளைப் போற்றி பெருமைப்படுத்தவும், இன்றைய கலை இலக்கியச் சாதனைகளைப் பாராட்டி அடையாளப்படுத்தவும், நாளைய கலை இலக்கிய இளவல்களை ஊக்கப்படுத்தி […]

Read more

விபரீத ஆட்டம்

விபரீத ஆட்டம், சுப்ரஜா, வாதினி, பக். 128, விலை 120ரூ. நாவல் பேசியிருப்பது சுப்ரஜாவின் திக் திக் திகில் நடனமல்ல, விளையாட்டு; அதுவும் மரண விளையாட்டு. இரட்டை பெண்களில் ஒருத்தி காணாமல் போகிறாள். அவள் தலை மறைந்ததன் ரகசியம் என்ன என்பதை அறிய வரும் அவளின் குடும்பத்தினரை, அடுத்தடுத்து விபரீதங்கள் துரத்துகின்றன. இறுதியில் மர்மம் விடுபடுகிறது. மரணத்திற்கும், மர்ம சம்பவங்களுக்கும் காரணமானதே ஆட்டந்தான் என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. அடுத்தடுத்த சம்பவங்களின் துரத்தலாக கதை அமைந்திருப்பது, இந்நுாலை படிக்கும் ஆர்வத்தை துாண்டுவதாக உள்ளது. திரைப்படத்தை […]

Read more

பெண்ணின் நிலை

பெண்ணின் நிலை, முனைவர் ஜெயா வேணுகோபால், காவ்யா, விலை 140ரூ. சி.ஆர்.ரவீந்திரனின் நாவல்களில் அங்குத்தாய் (1988), ஈரம் கசிந்த நிலம் (1992), காலம் (1994), வெயில் மழை (1995) ஆகிய நாவல்களை ஆய்வு செய்கிறார். பெண் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பெண்ணின் இளம் பிராயத்தில் எதிர்கொள்கிற சிக்கல்கள், காதல் வயப்படுகையில் எதிர்கொள்கிற சிக்கல்கள், திருமண வாழ்வில் உருவாகும் சிக்கல்கள், குடும்ப வாழ்வினுள் நேரும் சிக்கல்கள், பெண் பணியின் பொருட்டு, பணியிடத்தில் வெளி உலகினரை எதிர்கொள்ளும்போது நேரும் பணியிடைச் சிக்கல்கள், கணவனது ஒழுக்க மீறல், […]

Read more

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ் கௌதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 420, விலை 370ரூ. இந்நுால், தலித்திய அறிவுச் சொல்லாடலைக் காட்டுகிற முயற்சிகளில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிக்க அறிவுச் சொல்லாடலை எதிர் கொண்டு அதன் அடக்கு முறையை வெளிப்படுத்தி, அதை கடந்து போகும் முயற்சி இது (பக்., 11) என்னும் நுாலாசிரியர், தலித்துகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்கும் விஷயங்கள் அறங்களில் உள்ளன. றம், அறமரபுகள், அறங்களின் தோற்றம், தொல்காப்பிய அறம், பிராமணிய தருமம், சமண – பவுத்த […]

Read more
1 65 66 67 68 69 240