நம்மாழ்வார்

நம்மாழ்வார், வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. கயிற்றில் வித்தை காட்டும் கழைக் கூத்தாடி போல, எழுத்தில் வித்தை காட்டி நம்மை ஆட்டுவிப்பவர் நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. அவர் வார்த்தைகளை படித்துக் கொண்டு வேறெதையும் சிந்திக்க முடியாது. அந்த வார்த்தைகள் படமாக மனக் கண்ணில் விரிந்து சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, அழ வைத்து நாடகமாடும். இது, அவரது வார்த்தைகளுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம். சான்றின் ஒரு பருக்கையாக கிஸ்னா… என் கூட்டுக்காரா… ஆச்சார்யா கதாபாத்திரங்களைச் சொல்லலாம். அழகனை, […]

Read more

நம்மாழ்வார்

நம்மாழ்வார், முகிலை ராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 96, விலை 100ரூ. தற்போது துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருக்குருகூரில் தோன்றியவர் நம்மாழ்வார் என்னும் மாறன். இவரது காலத்திற்குப் பின், இந்த ஊர் ஆழ்வார்திருநகரி எனப் போற்றப்படுகிறது. குறுநில மன்னனான காரிக்கு மகனாகப் பிறந்தும், அரச வாழ்க்கையைத் துறந்து, திருக்குருகூரில் உள்ள ஆதிநாதர் கோவிலில் நிற்கும் புளிய மரத்தடியில் தவ வாழ்க்கை மேற்கொண்டார். யாரிடமும் பேசாமலும், எந்தச் செயலிலும் ஈடுபடாமலும் இருந்த நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரைப் பார்த்ததும் அசைந்து கொடுத்து அவரது கேள்விக்குத் தத்துவ விளக்கமாகப் […]

Read more

ஒற்றை வைக்கோல் புரட்சி

ஒற்றை வைக்கோல் புரட்சி, மசனாபு ஃபுகோகா, பூவுலகின் நண்பர்கள். இயற்கை வேளாண்மை குறித்த உலகப் புகழ்பெற்ற அடிப்படை நூல் இது. இயற்கை வேளாண் இயக்கம் தமிழகத்தில் பெரிய உந்துதலைப் பெறுவதற்கு முன்பே வெளியாகிவிட்டது. இன்றைக்கும் இயற்கை வேளாண்மையின் பாடப் புத்தகமாகக் கருதப்படுகிறது. நன்றி: தி இந்து, 22/4/2014.‘   —- மௌன வசந்தம், ரேச்சல் கார்சன், எதிர் வெளியீடு. பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் எப்படி நிலம், நீர், காற்று என ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, நம் உடல்நலனுக்குக் கேடு தரும் பின்விளைவுகளை உருவாக்குகின்றன என்பதை […]

Read more

இனி விதைகளே பேராயுதம்

இனி விதைகளே பேராயுதம், கோ. நம்மாழ்வார், இயல்வாகை பதிப்பகம், 25, மாந்தோப்பு, ப.உ.ச. நகர், போளூர் சாலை, திருவண்ணாமலை 1, பக்கங்கள் 96, விலை ரூ 60. இயற்கை உழவாண்மையின் கட்டாயத் தேவைபற்றி கூறும் புத்தகம். நம்மாழ்வாரின் சிந்தனைகள் எளிய தமிழில் மின்னுகின்றன. பூச்சிக்கொல்லிகள் சர்வசாதாரணமாக உபயோகப்படும் விதத்தில் மனிதர்களுக்கு நேரும் அபாயம், மரபு முறை வேளாண்மையை மறுக்கும் இன்றைய விசாயிகள், பச்சைப்புரட்சியில் ஏற்படும் லாபங்கள் என எல்லாவற்றுக்கும் அருமையான பதில்கள் தருகிறார். இயற்கையை எப்படி நாம் குலைக்காமல் இருக்க வேண்டும், நன்மை தரும் […]

Read more