எழில் கொஞ்சும் அஜந்தா – எல்லோரா

எழில் கொஞ்சும் அஜந்தா – எல்லோரா, முனைவர் இரா.இராமகிருட்டினன், நர்மதா பதிப்பகம், விலைரூ.175 சிறப்பு மிக்க இந்திய கலை பொக்கிஷங்களை அடக்கியுள்ள அஜந்தா, எல்லோரா பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். வரலாற்று பின்னணியுடன் ஆய்வுப் பார்வையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.இந்த நுால், ஒன்பது இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அஜந்தா குடவரை பற்றி முழுமையான அறிமுகத்தை முதல் இயலில் விளக்குகிறது. உரிய படங்கள் செய்திகளை புரிய வசதியாக சேர்க்கப்பட்டுள்ளன. கலை வரலாற்றை தெளிவாகக் கூறுகிறது. கையைப் பிடித்து, நேரில் அழைத்துச் சென்று காட்டுவது போல் கட்டுரைகள் அமைந்துள்ளன. பவுத்த, […]

Read more

ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களும்

ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களும், எஸ்.பி.சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. ராகு கேது கிரகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படுத்தும் பாதிப்புகளும், பலாபலன்களும், செய்ய வேண்டிய பரிகாரங்களும் இந்த நூலில், உதாரண ஜாதகங்களுடன் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர் வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றிய தகவலும் இந்த நூலில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 2/5/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தியாகச் செம்மல் காமராஜ்

தியாகச் செம்மல் காமராஜ், சாவி, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. மறைந்த காமராஜரின் அரசியல் வாழ்வை விவரிக்கும் நுால். பத்திரிகையாளர் சாவி, நேரடியாக பார்த்தவற்றை பதிவு செய்துள்ளார். கேள்வி – பதிலாகவும் உள்ளது. பதவியில் இருந்து விலகுவதால், அசவுகரியங்கள் ஏற்படாதா என்ற கேள்விக்கு, ‘ஓய்வூதியத்தில் வீட்டு வாடகை, வரி போக, 1,000 ரூபாய் மீதமிருக்கும். அதில், காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கு சென்று வரும் செலவு, 600 ரூபாய்; மீதமுள்ள, 400 ரூபாயை என் செலவுக்கும், தாய்க்கும் அனுப்பியது போக, மீதி பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன்…’ […]

Read more

உலக சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகள்

உலக சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகள், சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், விலைரூ.90 உலக அளவில் சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்க்கை குறிப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். சாதனைக்கும் துாண்டும் வகையில் அமைந்துள்ளது. 37 வீராங்கனைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. தகவல் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளது. வாழ்வில் முன்னேறத் துடிப்போருக்கு வழிகாட்டும் வகையில் உள்ளது. பெண்கள் ஏற்றமிகு வாழ்வில் நடை போட துணை புரியும். நன்றி:தினமலர், 17/1/2021 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்

சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள், சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், பக். 288, விலை 120ரூ. உழைப்பாலும், சேவையாலும் புகழ்பெற்ற 75 பெண்களின் சாதனை வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு நூல். சுய முன்னேற்றத்துக்கு உத்வேகம் தந்து வாழ்க்கைக்கு வழிகாட்டும். நன்றி: தினமலர், 10/5/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000006631_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்

உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள், பி.சி.கணேசன், நர்மதா பதிப்பகம், விலைரூ.80 நோயின்றி வாழ வழியும், நோய் வந்தால் நீக்க எளிய வழிமுறைகளும் கூறப்பட்டு உள்ளன. மனித உடல் ஓர் இயற்கை அற்புதம் என்று துவங்கி, 14 தலைப்புகளில் பயனுள்ள கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் உடலுக்கு உள்ள தொடர்பை அழகாகக் கூறியுள்ளார். உடலில் ஆறு நரம்பு மையங்களை, ஏழு பிரிவுகளாக கூறப்பட்டுள்ளது. அக்கு பங்சர், அக்குபிரஷருக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கூறுகிறது. […]

Read more

ஆலய பூஜை, ஹோம கால முத்திரைகள் விளக்கங்கள்

ஆலய பூஜை, ஹோம கால முத்திரைகள் விளக்கங்கள், எஸ்.எஸ்.ராகவாச்சார்யர், நர்மதா பதிப்பகம், பக். 136, விலை 80ரூ. கோவில் வழிபாட்டின்போது அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், சிவாலய பூஜகர்கள் காட்டும் முத்திரைகள் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றின் விளக்கத் தொகுப்புதான் இப்புத்தகம். தேவதை மற்றும் கோவில் வழிபாட்டின்போது முக்கிய முத்திரைகளையும், உபசார வகைகளின் மூத்திரைகளையும் தேவையான, தெளிவான முறையில் கற்றுக்கொள்ள உகந்தது. உத்தியான கருத்துகளை சொல்கிறது. முத்திரைகளின் பயன்பாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. -த.பாலாஜி. நன்றி: தினமலர், 19/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

ரமணரின் பார்வையில் நான் யார்?

ரமணரின் பார்வையில் “நான் யார்?, வேதகாலம் முதல் ரமணர் காலம் வரை…- அபிநவ ராஜகோபாலன், நர்மதா பதிப்பகம், பக்.280; விலை ரூ.175. அகங்காரம் (நான்), மமகாரம் (இது என்னுடையது) என்ற மனப்போக்கு வேத காலத்தில் நேர்மறைச் சிந்தனையாக முன்னெடுக்கப்பட்டு தனிப்பட்ட, சமுதாய வாழ்வியலில் மனிதன் உன்னத நிலையில் இருந்தான். வாழ்வில் மிகுந்த துயருற்று, தத்துவ விசாரத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு மட்டுமே நான் யார்? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வி எழும்போதே, தேடலும் பயணமும் ஆரம்பமாகி இறுதியில் முக்தி எனும் விடை கிடைக்கிறது. நான் […]

Read more

திருவாசகம் பதிக விளக்கம்

திருவாசகம் பதிக விளக்கம், ஆ.ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், விலை 200ரூ. படிப்பவரது உள்ளத்தை உருக்கி ஒளி கூட்டும் மாணிக்கவாசகப் பெருமானின் திருவாகம். அதன் பதிகங்களைக் கூறி, அதற்கு எளிய விளக்க உரையுடன் இந்நுால் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் யாவும் இறைவனது புகழை, பக்தியுணர்வை, தங்களது சிறுமையை, இறைவன் தங்களிடம் காட்டிய கருணையைக் கூறுவதைப் பார்க்கலாம், இந்நுால் எழுதிய மூவரும் பக்தி அனுபவத்தில் தேர்ந்தவர்கள் என்றாலும், அந்த அனுபவம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை. திருவாசகம் இதிலிருந்து வேறுபட்டு, தாம் பெற்ற பக்தி அனுபவத்தை நமக்குக் கூறுகிறது. […]

Read more

நாளும் ஒரு நாலாயிரம்

நாளும் ஒரு நாலாயிரம், தொகுப்பு: மாருதிதாசன், நர்மதா பதிப்பகம், பக்.400, விலை ரூ.200. திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பெருமாளின் கல்யாண குணங்களையும், அவன் உறையும் திருப்பதிகளான திவ்ய தேசங்களைப் புகழ்ந்து பாடியும், அத்திவ்ய தேசங்களை மங்களாசாசனம் (பாசுரம் இயற்றி) செய்து பாடியும் வழிபட்டவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அன்பு, பக்தி, சரணாகதி, திருமந்திரம், திவ்யம் முதலிய வைணவத்தின் அடிப்படைத் தத்துவங்களை, தாம் அருளிச்செய்த பாசுரங்களில் இவர்கள் வெளிப்படுத்தினர். புராண, இதிகாச நிகழ்வுகளையும், பெருமாளின் பத்து அவதாரங்களையும், நீதிநெறிக் கருத்துகளையும், வீடுபேற்றுக்கான வழியையும் அப்பாசுரங்களின் மூலம் […]

Read more
1 2 3 4 5 15