சுவடுகள் மறையாத பயணம்

சுவடுகள் மறையாத பயணம், பெ.சிதம்பரநாதன், பழனியப்பா பிரதர்ஸ், விலைரூ.300 வள்ளலாகிய அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா ஒரு மா மனிதர். அவருடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்ற சிதம்பரநாதன், அருட்செல்வரின் பல்வேறு முகங்களைப் பதிவு செய்கிறார். வேளாண் உற்பத்தி, தொழில் மேம்பாடு, மொழிப் பிரச்னை, வெளியுறவுக் கொள்கை, உலகமயமாதல், இட ஒதுக்கீடு, கல்வி மறுமலர்ச்சி, மதச்சார்பின்மை, சமூகப் பிரச்னைகள், சமூக சேவை எனப் பல பிரச்னைகளுக்குத் தம் அறிவுத்திறனாலும், அனுபவத்தாலும், தொழில் நுட்பத்தாலும் காந்தியக் கொள்கை வழி நின்று தீர்வுகளைச் சொன்னவர் அருட்செல்வர். ஒரு […]

Read more

சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்

சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர், வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ்,  பக்.444, விலை ரூ.360. காமராசருடன் நேரில் பழகும் வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், காமராசரின் வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாக கூறியுள்ளார்.விருதுபட்டி என்ற சிற்றூரில் பிறந்த, ஆரம்பக் கல்வியைக் கூட முழுமையாக முடிக்காத காமராசர், இளம் வயதிலேயே தந்தை இழந்ததும், கடைகளில் வேலை செய்ததும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனைகளை அனுபவித்ததும், பதவியைப் பெரிதாக நினைக்காததும், ஏழை மக்களின் நலன் என்ற அடிப்படையில் முடிவுகள் எடுத்ததும், அகில இந்திய அளவில் பெரிய தலைவராக இருந்தாலும் எளிய […]

Read more

கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்

கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள், ப.முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக்.526, விலை ரூ.430. பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் ஆகிய மூவரும் மிகச் சிறந்த தமிழ்க் கவிஞர்கள் எனினும், மூவரின் காலமும், பின்னணியும் வேறுபாடுகள் உடையவை. பாரதியாரின் காலம் சுதந்திரப் போராட்ட காலம். அந்தப் பின்புலத்தில் பாரதியார் சிந்தித்தவை, எழுதியவை இருந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்டு, தமிழ் இனம், மொழி சார்ந்த அரசியல் பார்வையில் பாரதிதாசனின் கவிதைகள் தோன்றின. கண்ணதாசன் எழுதிய கவிதைகளில் பாரதிதாசனின் தொடர்ச்சி இருந்தாலும் கண்ணதாசனின் அரசியல் பார்வை […]

Read more

திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை

திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை, பேரா.அர.வெங்கடாசலம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 432, விலை 385ரூ. திருக்குறளில், அரசியல், பொருளியல், சமயம், மெய்ப்பொருளியல், அளவையியல், மருத்துவ இயல், உளவியல், உழவியல் முதலான பல்துறைப் புலமைக் கூறுகளையும் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளார். ஆன்மிகம் என்பதை நடுநிலையோடு விளக்கி, உளவியல் என்ற அறிவியல் சார்ந்த அனுபவத்தோடு ஆன்மிக உளவியல் நோக்கில் உரை கண்டுள்ளார், நுாலாசிரியர். சில குறட்பாக்களுக்கு, தான் கருதும் மாற்றுப் பொருளையும் வழங்கி, பின் ஆன்மிகம் சார்ந்த உளவியல் உரையை ஆய்வுரையாகத் தந்துள்ளார். ‘ஆன்மா’ என்னும் சொல்லை […]

Read more

ஆகாயத் தாமரை

ஆகாயத் தாமரை, பாரதி வசந்தன், பழனியப்பா பிரதர்ஸ், விலை 220ரூ. அற்புதமான சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்ற பாரதி வசந்தன், கவிதையாப்பதிலும் தனக்குள்ள வல்லமையை எடுத்துக்காட்டி இருக்கிறார், ஆகாயத்தாமரை நூலின் மூலம். எல்லாம் மரபுக் கவிதைகள். சமுதாயத்தின் கொடுமைகளை சாடும்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பும்போதும், அவருடைய கவிதைகள் நமது இதயத்தைத் தொடுகின்றன. கவிதைகளில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கடல் அலைபோல் பொங்கி எழுகின்றன. மாதிரிக்கு ஒரு கவிதை, “என் இனம் என் மொழி என் நிலம் மீட்பது இதுவே வாழ்வின் லட்சியம் – என் […]

Read more

சிறிய தூண்டில் பெரிய மீன்

சிறிய தூண்டில் பெரிய மீன், மூ.இராசாராம், பழனியப்பா பிரதர்ஸ்,  பக்.174, விலை ரூ.155. சிறு சிறு முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை எப்படிப் பெறுவது என்பதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல். நம்மிடம் அளவாக இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி அதிகமான பலன் பெறலாம் என்பதை சில முக்கிய மேற்கோள்கள் மூலம் சுவைபடக் கூறியுள்ளார். குறிப்பாக ரூ.1-க்கு விற்கப்படுகிறது என்ற பிரபல செய்தித்தாளின் விளம்பர உத்தி, இந்த  டிசைன்&#39 சேலைகள் இன்னும் மூன்று மட்டுமே எஞ்சியுள்ளன' என்ற ஜவுளிக் கடைக்காரரின் விளம்பரத் தந்திரம் போன்றவை வாடிக்கையாளர்கள் என்ற பெரிய […]

Read more

சிறிய தூண்டில் பெரிய மீன்

சிறிய தூண்டில் பெரிய மீன், மூ.இராசாராம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.174, விலை ரூ.155. சிறு சிறு முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை எப்படிப் பெறுவது என்பதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல். நம்மிடம் அளவாக இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி அதிகமான பலன் பெறலாம் என்பதை சில முக்கிய மேற்கோள்கள் மூலம் சுவைபடக் கூறியுள்ளார். குறிப்பாக ரூ.1-க்கு விற்கப்படுகிறது என்ற பிரபல செய்தித்தாளின் விளம்பர உத்தி, ‘இந்த;டிசைன்&#39‘ சேலைகள் இன்னும் மூன்று மட்டுமே எஞ்சியுள்ளன' என்ற ஜவுளிக் கடைக்காரரின் விளம்பரத் தந்திரம் போன்றவை வாடிக்கையாளர்கள் என்ற பெரிய […]

Read more

நடந்தது நடந்தபடி

நடந்தது நடந்தபடி, ஆங்கிலத்தில் பி.வி.ஆர்.கே. பிரசாத், தமிழில் துறவி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 272, விலை 205ரூ. முதல்வராகும் வாய்ப்பை இழந்த ரஜினிகாந்த்! வீங்ஙல்ஸ் பிகைஷ்ட் தி வீல்… பி.எம்., சி.எம்., அண்டு பியாண்டு’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம்தான் இந்த நூல். நூலாசிரியர், பி.வி. நரசிம்மராவ், பிரதமராக இருந்தபோது, மத்திய அரசின் செய்தித்துறை ஆலோசகராக பணியாற்றியவர். தமிழக அரசியலில் நடந்த, ஒரு மாற்றத்தை பற்றி விரிவாக எழுதுகிறார். 1996, தமிழக சட்டசபை தேர்தல் நேரம். அ.தி.மு.க. மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி. […]

Read more

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், மரு. பரமரு, பழனியப்பா பிரதர்ஸ், பக். 184, விலை 145ரூ. தேவாரம் அருளிய சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரைப் பற்றியும், சைவ புராணங்களில் சிறப்பாகப் போற்றிப் புகழப்படும் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகிய படைப்புகளில் இறைவனின் திருவருள் பற்றியும், மகாகவி பாரதியாரின் தெய்வப் பாடல்கள், அன்னை காரைக்கால் அம்மையார் பற்றியும் அழகுற ‘தெய்வத் தமிழ்’ என்னும் இந்த நூல் எடுத்துரைத்துள்ளது. கட்டுரை வடிவில் சமய ஆர்வலர்களும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் படித்துணரும் வகையில் அமையப் பெற்ற இந்த நூலில், […]

Read more

புலவர் திலகம் கீரன் ஒரு சகாப்தம்

புலவர் திலகம் கீரன் ஒரு சகாப்தம், செல்லபாப்பா கீரன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 424, விலை 325ரூ. பூர்விகம் பாலக்காடு என்ற போதிலும், மயிலாடுதுறையில் வளர்ந்து, தருமையாதீனத் தமிழ் கல்லூரியில் பயின்று, சிறு வயதிலேயே மேடைப் பேச்சிலும், இலக்கியத்திலும் புலமை பெற்று, 1956ம் ஆண்டில், நாகர்கோவிலிலிருந்து விழாவிற்கு தலைமை ஏற்க வந்த ஆறுமுகநாவலரால் (பக். 23) என்பவரால், ‘கீரன்’ என்று பெயர் சூட்டப்பட்ட, ‘வைத்தியநாத சுவாமி’ எனும் இயற்பெயர் கொண்ட புலவர் திலகம் கீரனின் வரலாற்றை, வாழ்விலும், இலக்கியத்திலும் துணை நின்ற அவரது மனைவி, […]

Read more
1 2 3 9