அசடன்

அசடன், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்-எம்.ஏ.சுசீலா, பாரதி புக் ஹவுஸ், பக். 672, விலை 650ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-6.html இந்த நாவல் பியோதர் தஸ்தயேவ்ஸ்கியால் 1869ல் எழுதப்பட்ட, த இடியட் என்ற நாவலின் மொழிபெயர்ப்பு. திருமதி. எம்.ஏ.சுசீலாவால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாவல் பல சிறப்புடையது. அதாவது முழுமுற்றான தீமை என்பது, இல்லவே இல்லை என தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய நாவல் அனைத்திலும் சொல்லி வந்தாலும், முழுமுற்றான நன்மையை, இந்த கதையின் நாயகனான மிஷ்கின் மூலம் படைக்க முற்பட்டார். அதில் […]

Read more

திருப்பட்டூர் அற்புதங்கள்

திருப்பட்டூர் அற்புதங்கள்,வி. ராம்ஜி, விகடன் பிரசுரம், விலை 95ரூ. To buy this tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-7.html திருப்பட்டூர் வரும் அடியவர்களுக்கு வாழ்க்கை வசதிசெய்து தருவதை சிறப்பாகச் சொல்கிறது இந்த நூல். ஒரு தத்துவ விஷயத்தை எளிதாக விளக்க, ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பிரம்மாவில் ஆரம்பித்து வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் என்று பலரும் திருப்பட்டூர் வந்ததையும், அவர்கள் பெற்ற அனுபவத்தையும் மிக நேர்த்தியான நெசவாக பின்னப்பட்டுள்ளது. பிரம்மாவுக்கு இத்தனைப் பெரிய உருவமா, முழுவதும் மஞ்சளா? என்று பிரம்மாவை வணங்குவதை சுவைபட விவரிக்கிறது […]

Read more

ரமண மஹரிஷி

ஸ்ரீரமண மகரிஷி- பாலகுமாரன்; பக்.344; ரூ.160; விகடன் பிரசுரம், சென்னை-600 002 பெரிய புராணத்தை அகத் தூய்மையோடு படித்து முடிப்போர் “தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று சிவ பக்தியால் முணுமுணுப்பது உண்டு. அதுபோல் பாலகுமாரன் எழுதியுள்ள ஸ்ரீரமண மகரிஷியைப் படிப்போருக்கு “ரமணா.. ரமணா..’ என்று பக்திப் பெருக்கால் உள்ளம் உருகும். திருவண்ணாமலையை ஒரு மண்டலம் கிரிவலம் வந்த மகிழ்வும் பூரிப்பும் மகிரிஷியின் இந்நூலைப் படித்து முடிக்கும்போது ஏற்படுகிறது. பக்தியோ, நாம சங்கீர்த்தனமோ, மந்திர ஜபமோ, யாக விஷயங்களோ, ஹடயோகமோ.. எதுவாக இருந்தாலும் மனத்தை அழித்து […]

Read more
1 2