காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம்

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. தமிழகம் கர்நாடகம் இடையேயான காவிரி நீர் பங்கீடு, நமக்குக் கிடைக்கும் காவிரி நீரை எவ்வாறு சேதாரம் இல்லாமல் செலவு செய்து அதிக மகசூல் பெறுவது என்பவற்றை ருசிபடக் கூறுவதற்காக நாவல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூல், காவிரி நீர் தொடர்பான அத்தனை தகவல்களையும் தருகிறது. இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய காவிரி நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் அதிக நீரை பாதுகாத்து, நீலகிரி காவிரி திட்டம் மற்றும் […]

Read more

திருக்குறள் உரைக்கதைகள்

திருக்குறள் உரைக்கதைகள்,  பானு மாதவன், மணிமேகலைப் பிரசுரம், பக்.256, விலை ரூ.175. திருக்குறளின் அறத்துப்பாலில் நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்களில் உள்ள 20 குறள் பாக்களுக்கு விளக்கம்அளிக்கும்விதமாக எழுதப்பட்ட 20 சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள், ஒரு குறிப்பிட்ட குறளின் கருத்தை விளக்க வேண்டும் என்ற அடிப்படையில், சிறந்த கற்பனைத்திறனுடன் சுவையாக எழுதப்பட்டுள்ளன. திருடர்கள் அரண்மனையில் திருடியவற்றை சிவனடியாருக்குத் தெரியாமல் அவர் வசிப்பிடத்தில் வைத்துச் செல்ல, சிவனடியார் திருடனாகக் கருதப்படுகிறார். எனினும் கதையின் இறுதியில் அவர் குற்றமற்றவர் என்பது தெரிய […]

Read more

பவுதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள்

பவுதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள், கனி விமலநாதன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. இயற்பியல் என்னும் பவுதிகவியல், விஞ்ஞானத்தின் அத்தனைப் பிரிவுகளுக்கும் அடிபப்டையாக இருக்கிறது என்பதை பல்வேறு தலைப்புகளில் இந்த நூல் விளக்கமாகத் தந்து இருக்கிறது. ஒளி என்பதில் அடங்கியுள்ள ரகசியம், சார்பியல், அணு பற்றிய பாடப்பிரிவில் ஒரு பிரிவான குவாண்டம் என்பது போன்ற கனமான விஷயங்கள் சாதாரணமானவர்களும் புரிந்து கொள்ளும் வகையில், அன்றாட உதாரணங்களுடனும் தரப்பட்டு இருக்கின்றன. ஆசிரியர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் இலங்கைத் தமிழ் வார்த்தைகள் பல இடங்களில் இடம்பெற்று இருக்கின்றன. […]

Read more

விலங்குகளைப் பற்றிய வியப்பான செய்திகள்

விலங்குகளைப் பற்றிய வியப்பான செய்திகள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. விலங்குகள் பற்றி பலரும் பொதுவில் அறிந்திராத வியக்கத்தக்க தகவல்களின் துணுக்குத் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. ஒட்டகங்கள் மாலை 6 மணிக்கு மேல் எதையும் சாப்பிடாது. வாழ்நாள் முழுவதும் நீரை அருந்தாத மிருகம் கங்காரு எலி. சிங்கத்தின் கர்ஜனை பல கிலோமீட்டர் தூரத்திற்குக் கேட்கும் என்பது போன்ற ஏராளமான தகவல்கள் இந்த நூலில் இருக்கின்றன. விலங்குகளின் சங்க காலப் பெயர்கள் விவரமும் தரப்பட்டுள்ளன. இடையிடையே காணப்படும் விலங்குகள் தொடர்பான நகைச்சுவை துணுக்குகள் […]

Read more

நலம் நலமறிய ஆவல்

நலம் நலமறிய ஆவல், போல் ஜோசப், மணிமேகலைப் பிரசுரம், விலை 180ரூ. “இந்த நோய்க்கு இது தான் மருந்து, சாப்பிடுங்கள்” என்று கூறி அனுப்பிவிடுவது மட்டும் மருத்துவம் அல்ல என்பதையும், மருத்துவம் என்பது உளவியல் சார்ந்த பல அம்சங்களையும் உள்ளடக்கியது என்ற கருத்தையும் இந்த நூலைப் படிக்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. மருத்துவம் படித்துப் பட்டம் பெற்று கனடா நாட்டில் பணியாற்றும் போல் ஜோசப் என்ற மருத்துவர், தற்கால மக்களுக்குத் தேவையான பயனுள்ள பல மருத்துவ உளவியல் ஆலோசனைகளை இந்த நூலில் தந்து இருக்கிறார். […]

Read more

ஆங்கில இலக்கணத்தை எளிமையாகச் சொல்லித்தரவா?

ஆங்கில இலக்கணத்தை எளிமையாகச் சொல்லித்தரவா?, மு.ஜோதி சுந்தரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 160ரூ. ஆங்கில இலக்கணப்பாடம் என்றால் காததூரம் ஓடும் மாணவ மாணவிகளையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. கிராமப் புறங்களில் தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்களும் ஆங்கில இலக்கணத்தை மிக எளிதாகப் புரிந்து கொண்டு படிப்பதன் மூலம் ஆங்கில இலக்கணத்தில் நிபுணத்துவம் பெற முடியும் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. சின்னஞ் சிறிய வாசகங்கள் மூலம் இலக்கணத்தை கற்றுத் தருவதோடு முக்கியமான பல வார்த்தைகளின் வினைச் சொற்களுக்கு தமிழில் […]

Read more

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்,  தமிழில்: கோபால் மாரிமுத்து, மணிமேகலைப் பிரசுரம், பக்.520, விலை ரூ.350. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின்போது  தலைவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். ஆலிவர் க்ராம்வெல், நெப்போலியன் போனபர்ட் , டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட 8 அயல்நாட்டவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் இடம் பெற்று உள்ளன. குறிப்பிட்ட கால வரலாற்று நிகழ்வையும் அதன் பின்னணியையும் தெரிந்து கொள்ள இந்நூலில் உள்ள சொற்பொழிவுகள் உதவுகின்றன. தாதாபாய் நெரோஜி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசியது, சுவாமி விவேகானந்தர் 1893 – இல் […]

Read more

வன்கொடுமைக்கு உட்பட்டவனின் பிராது

வன்கொடுமைக்கு உட்பட்டவனின் பிராது, பவித்ரா நந்தகுமார், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இந்த நூலில் இடம் பெற்றுள்ள 17 சிறுகதைகளும், உணர்ச்சிப் பிரவாகமாக ஜொலிக்கின்றன. ஆசிரியரின் வித்தியாசமான மொழி நடை உயிர்ப்புடன் கூடி, அத்தனைக் கதைகளுக்கும் கூடுதல் சுவாரசியத்தைக் கொடுக்கின்றன. அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் யதார்த்தமான பிரச்சினைகளை காட்சிப்படுத்தி இருக்கும் ஆற்றலால் நம்மை பிரமிக்க வைத்துவிடுகிறார். நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காவிரியின் செல்வன்

காவிரியின் செல்வன், தேசிக மணிவண்ணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 260ரூ. புகழ் பெற்ற சரித்திர நாவலாசிரியர்கள் வரிசையில், தேசிக மணிவண்ணன் படைத்துள்ள காவிரியின் செல்வன் என்ற சரித்திர நாவலின் கதாநாயகன், சோழ மன்னர்களில் ஒருவரான கோச் செங்கட்சோழன் ஆவார். கி.பி. 101 முதல் கி.பி. 200 வரை நடைபெற்ற சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட இந்த நாவலில், அப்போது வாழ்ந்த மன்னர் பரம்பரையுடன் சில கற்பனை கதாபாத்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நாவல் முழுவதும் காதல், வீரம், போர் என்று சரித்திர நாவலுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் […]

Read more

சீர்மிகு சீவக சிந்தாமணி எளிய வடிவில்

சீர்மிகு சீவக சிந்தாமணி எளிய வடிவில், கே.சித்தார்த்தன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி எளிய வடிவில் புதுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணி காப்பியத்தின் முதல் பகுதியை அப்படியே கையாண்டு, பின் பகுதியில் கட்டியங்காரனின் மனைவி மங்கையர்க்கரசி, அன்னபூரணி போன்ற கற்பனைப் பாத்திரப்படைப்புகளைக் கொண்டு கதை சுவாரசியமாக பின்னப்பட்டு இருக்கறிது. கதை முழுவதையும் நாடக வடிவில் கொடுத்து இருப்பதோடு, ஒவ்வொரு காட்சியின் விவரமும் நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் எழுதப்பட்டு இருக்கிறது. கட்டியங்காரன் நடத்தும் சூழ்ச்சிகள், கடைசியில் […]

Read more
1 2 3 4 5 6 16