ஒரு சாமானியனின் சாதனை

ஒரு சாமானியனின் சாதனை, எஸ்.கே. இளங்கோவன், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ. ‘அரவணைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் சமுதாய தொண்டாற்றி வரும் இந்த நூலின் ஆசிரியர், தான் அடிமட்ட நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறி உன்னதமான இடத்துக்கு வந்தது எப்படி என்பதை அழகாக பதிவு செய்து இருக்கிறார். வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நூல் நல்ல உந்துசக்தியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 27/2/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

வள்ளுவமும் விஞ்ஞானமும்

வள்ளுவமும் விஞ்ஞானமும், சங்கர சுப்ரமணியன், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. எந்தக் காலத்துக்கும், எந்த இனத்தாருக்கும் பொருந்தும் திருக்குறளில் இல்லாத விஷயங்களே இல்லை எனலாம். அத்தகைய திருக்குறளில் ஏராளமான விஞ்ஞான கருத்துக்களும் பொதிந்து இருக்கின்றன என்ற அதிசய தகவலைத் தரும் இந்தப் புத்தகத்தின், 12 தலைப்புகளில் அடங்கிய பல திருக்குறள்களில் என்ன என்பதை, அறிவியல் பூர்வமாக மிகச் சிறப்பாக, படங்களுடன் விளக்கம் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். ஏற்கனவே படித்த குறள்களுக்குள் இவ்வளவு விஞ்ஞானம் அடங்கி இருக்கிறதா என்ற வியப்பு இதனைப் படிக்கும் போது மேலிடுகிறது. […]

Read more

இரக்கம் கொள்வோம் விட்டுக்கொடுப்போம்

இரக்கம் கொள்வோம் விட்டுக்கொடுப்போம், மா.ராமச்சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 130ரூ. வாழ்க்கையில் உச்சம் தொட நினைக்கும் இளைஞர்கள் உள்பட அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் படிக்கட்டுகளாக 48 அருமையான கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட்டவை என்றாலும், அவை சுவையுடன் தரப்பட்டுள்ளதால் அலுப்புத் தட்டாமல் படிக்க முடிகிறது. எதிர்மறைச் சிந்தனைக்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற அவரது கருத்து அனைத்து கட்டுரை தலைப்புகளிலும் அப்படியே இடம் பிடித்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 24/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

முகவரியில்லா முகங்கள்

முகவரியில்லா முகங்கள்,கவி.தங்க.ஆரோக்கியதாசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. 25 சிறுகதைகள் கொண்ட தொகுதியாக வழங்கப்பட்டுள்ளது. இது தனது முதல் முயற்சி என்று நூலாசிரியர் கூறியுள்ளது நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு தேர்ந்த எழுத்தாளர் போல யதார்த்த நடையில், தான் சந்தித்த முகம் தெரியாத சாதாரண மனிதர்கள் பற்றிய நிகழ்வை கதையாக வடித்துள்ளார். சில கதைகள் சென்னையில் நம் கண் முன் நடந்த சம்பவங்களை நினைவு கூறுகின்றன. சோகம், வறுமை என பிழிந்துவிடுகிறார். ஒவ்வொரு சிறுகதையும் சில இடங்களில் நடந்த சிறுகதைகளுக்கான போட்டிகளில் பரிசு பெற்றுள்ளன. […]

Read more

பண்டைய தமிழர் பண்பாடு

பண்டைய தமிழர் பண்பாடு, பாலசுந்தரம் இளையதம்பி, மணிமேகலைப் பிரசுரம், விலை 220ரூ. பண்டைய தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு எனும் இந்நுால், பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பியால் எழுதப் பெற்றது. இது, பெயருக்கேற்ப பண்டைய காலத் தமிழர்களின் வரலாற்றை மீள்கட்டமைப்பு செய்யும் வகையில் இந்நுாலாசிரியரின் ஆய்வுப் பார்வை தெளிவாக உள்ளது. பண்டைய தமிழர்கள் வாழ்ந்த நாட்டிற்கு நாவலந்தீவு நிலம் எப்பெயரால் வழங்கப்பட்டு வந்தது என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் அவர், பிற்பாடு அப்பெயர் மருவியதற்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை விரிவாக விளக்கிச் செல்லும் பாங்கு அருமை. […]

Read more

மறவாதிரு மனமே

மறவாதிரு மனமே, தி.நெ.வள்ளிநாயகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. நீதிபதி, கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், எழுத்தாளர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவர் தி.நெ.வள்ளிநாயகம். அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். “கனிந்தால் தானே கனி? துணிந்தால் தானே வழி! இருந்தால் தானே உயிர்! விளைந்தால் தானே பயிர்! “சுடச்சுடச் சங்கு வெண்மை தரும் உண்மை! தொடத் தொடக் கல்லும் சிலையாகும் தன்மை” என்பன போன்ற சுவையான கவிதைகள். “நரம்பு ஓடிந்தால் வீணை பாடாது” “சூரியனை ஒரே விரல் மறைத்திடுமே! காரிருளை ஒரே அகல் குறைத்திடுமே” […]

Read more

இந்தியாவின் மேன்மைகளும் சிறப்புகளும்

இந்தியாவின் மேன்மைகளும் சிறப்புகளும், பேராசிரியர் க.பரந்தாமன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. தமிழ்ச் சமுதாயம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போதைய நிலையில் தமிழ்ச் சமுதாயம் எந்த அளவு வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக இன்றைய இந்தியச் சமுதாயத்தில் இளைஞர்கள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை அனைவரையும் சிந்திக்க தூண்டுகிறது. சட்டங்களும், சம்பிரதாயங்களும் மக்கள் நலன் கருதியே செயல்படுத்துவதன் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா வரும் 20 ஆண்டுகளில் வழிகாட்டும் என்று நூலாசிரியர் தன்னுரைய வைர வரியையும் நூலில் சுட்டி காட்டி உள்ளார். […]

Read more

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டம் என்ன சொல்கிறது?, மணிமேகலைப் பிரசுரம், விலை 220ரூ. சட்டம் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம், பல்வேறு பிரச்சினைகளுக்கு சட்டம் கூறும் தீர்வு என்ன என்பதை, சட்ட நிபுணர் ஏ.பி.ஜெயச்சந்திரன் கேள்வி – பதில் ரூபத்தில் எழுதியுள்ளார். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

நாங்கள் நலம் நீங்கள் நலம் பெற

நாங்கள் நலம் நீங்கள் நலம் பெற, B.R.பொன்னம்பலம், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ. வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடிய விஷயங்கள் அடங்கிய புத்தகம். பெண்களுக்கு நூலாசிரியர் பி.ஆர்.பொன்னம்பலம் கூறும் சில குறிப்புகள் பெண்கள் இருளில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது. விளக்கு வைத்தபின், வளையல்களை கழற்றக்கூடாது. செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால், இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் வீடுகளில் தங்கக்கூடாது. உப்பைத் தரையில் சிந்தக்கூடாது. அரியைக் கழுவும்போது தரையில் சிந்தக்கூடாது. இப்படி நிறைய குறிப்புகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. […]

Read more

குக்கூ குக்கூ ஹைக்கூ

குக்கூ குக்கூ ஹைக்கூ, டி.வி.எஸ்.மணியன், மணிமேகலைப் பிரசுரம், பக். 88, விலை50ரூ. ஜப்பானிய ஹைக்கூ இலக்கணம், பின்னாளில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், அவர்களுடைய மொழிகளில் ஹைக்கூ கவிதைகளாக எழுதும்போது, பின்பற்ற முடியாமல் போனது போலவே, நுாலாசிரியர், ஹைக்கூ வடிவத்தை தன் கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ப, சொல்லாட்சியுடன் திறம்பட எழுதியுள்ளார். ‘பாகன் வீட்டு அடுப்பெரிய/ தெருவில் யாசகம்/ யானை’ (பக்., 30’ என, யானையை வைத்து பிழைப்பு நடத்துவதையும், ‘மகன் கானகம்/ கணவன் வானகம்/ கைகேயி வரம்’ (பக்., 33) என ராமாயணச் சுருக்கத்தையும், ‘நுாறை விட/ […]

Read more
1 3 4 5 6 7 16