வாழ்க்கையில் ஏற்படும் முக்கிய சந்தேகங்களும் தீர்வுகளும்!

வாழ்க்கையில் ஏற்படும் முக்கிய சந்தேகங்களும் தீர்வுகளும்!, சஞ்சீவி ராஜா சுவாமிகள், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150 அடியார்கள் கேட்ட வினாக்களுக்கு விடையாகத் தந்த தகவல்களை பேசுகிறது இந்த நுால். சில வினாக்களுக்கு, அனுபவப்பூர்வமாக விடையளித்திருப்பது வாழ்வின் யதார்த்தத்தைக் காட்டுகிறது. பிரச்னைகள் அதன் தீர்வு என்ற முறையில் செல்கிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள், வழிபாடுகள் ஏன் பின்பற்றப்படுகின்றன என்பதை காரண காரியங்களோடு விளக்குகிறது. ஞானம், தியானம் என்பனவற்றை முழுமையாக விவரிக்கிறது. பிறப்பும் இறப்பும் கர்மவினையின் செயலே என்பதை இந்த நுால் பதிவு செய்துள்ளது.பஞ்சபூதம், நவகிரகம், மனிதப்பிறவி. பாபம், சாபம் […]

Read more

தமிழ்ப் பண்பாடும் இலக்கியச் சிறப்புகளும்

தமிழ்ப் பண்பாடும் இலக்கியச் சிறப்புகளும், வி.சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.170. பண்டைய இலக்கிய பண்பாட்டுக் கூறுகள் சார்ந்த கட்டுரைகளை கொண்டுள்ள நுால். முதல் பகுதியில் தமிழர் பண்பாடு, தமிழ் மொழி சிறப்பைக் கூறும் கட்டுரைகளும், இலக்கியங்களில் காணப்படும் அறக்கருத்து அறிவுரைக் கட்டுரைகளும் உள்ளன. இரண்டாம் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பியல்புகளையும் தொன்றுதொட்டு வரும் தமிழர் பழக்க வழக்கங்கள், கோட்பாடுகள், அகம் மற்றும் புறம் சார்ந்த வாழ்வியல் கூறுகள், நம்பிக்கைகள், நாகரிக மாற்றங்கள் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளது.திருக்குறள் முப்பாலில் உள்ள தேர்ந்தெடுத்த 75 குறள்களுக்கு விளக்கமும், […]

Read more

உலக உயிரினங்களின் வரலாறும் பிரளயமும்

உலக உயிரினங்களின் வரலாறும் பிரளயமும், கே.எம்.சங்கரநாராயணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.60. அத்தியாவசிய தேவையான உணவு, உடை, வசிப்பிடம் பற்றிய தகவல்கள் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். வெந்த மாமிசத்தை தின்னும் பழக்கம் சீனாவில் தோன்றியது என குறிப்பிடப்பட்டுள்ளது. உடையில் முதலில் தோன்றியது கவுபீனம். அது தோன்றியது பற்றியும், நாகரிக உடை வளர்ச்சியில் அதன் இடம் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதும் அதை அணியும் பழக்கம் சிலரிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வசிப்பிடத்தில் குடிசை, மண் வீடு, கல் வீடு என்று, அடுக்குமாடியாக வளர்ச்சி கண்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார். மின்வசதிக்கு […]

Read more

திருவள்ளுவரும் திருமூலரும் – ஓர் ஒப்பீடு

திருவள்ளுவரும் திருமூலரும் – ஓர் ஒப்பீடு, பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100 திருவள்ளுவரையும் திருமூலரையும் ஒப்பிட்டு கருத்துக்களை பதிவு செய்துள்ள நுால். திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் இறைவன் சிவபெருமானின் பெருமைகள் சுட்டப்படுகின்றன. ஆனால், உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறள், இந்த வரையறைக்குள் அடங்காமல், ஒழுக்க நெறியைக் காட்டுகிறது. கருப்பொருள்கள் பொதுவாக இருப்பினும் கருத்துக்கள் சற்று மாறுபட்டுள்ளன. ஒரு ஆய்வு நோக்கில் திருக்குறள் மற்றும் திருமந்திரத்தில் உள்ள பொதுவான 20 தலைப்புகளில் ஆராய்ந்து, ஒத்த கருத்துக்களையும், மாறுபட்ட கருத்துக்களையும் தொகுத்து அளித்துள்ளார். திருக்குறள், […]

Read more

மனித தெய்வம்!

மனித தெய்வம்!, கே.சித்தார்த்தன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.160. சில நாடகங்கள் படிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும். சில நடிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும். இது படிக்கவும் நடிக்கவும் ஏற்ற நாடகம். பாடல்களும் உண்டு. வழக்கமான கதை தான் என்றாலும் காட்சியமைப்பில் விறுவிறுப்பை கூட்டி எழுதியிருக்கிறார். காதலித்தவனை மணக்க முடியவில்லை. காதலித்தவனை இன்னொருத்தி மணப்பதற்கு ஒரு ட்விஸ்ட் வைத்து இருக்கிறார். நாடகத்தை காட்சி அமைப்பு, நடிகர்களின் பட்டியல் என 50 காட்சிகளாக எழுதி இருப்பது சிறப்பு. எத்தனை பேர் நடிக்கத்தேவை; அதில் எத்தனை பெண் பாத்திரங்கள் என்ற விளக்கக் குறிப்பு சிறப்பாக […]

Read more

அம்பிகாபதி – அமராவதி காதல் காவியம்

அம்பிகாபதி – அமராவதி காதல் காவியம், அ.மு.சம்பந்தம் நாட்டார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.375. மனித நாகரிகம் துவங்கிய காலத்தில் இருந்தே உயிர்ப்புடன் உள்ள காதலை முன்னிருத்தியுள்ள காவியம். கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு வந்து சென்ற மன்னன் மகள் அமராவதி, அம்பிகாபதியிடம் காதலைக் கற்றுக் கொண்டாள். இந்த காதலை அறிந்த மன்னன், அம்பிகாபதியைக் கைது செய்து குற்றவாளியாக்கினான். சிற்றின்பம் கலக்காமல் நுாறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி கிடைப்பாள் என்று ஒரு போட்டியை அறிவிக்கிறான் மன்னன். கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நுாறு பாடல்களை பாடியவனை, ஆரத்தழுவிக் […]

Read more

பாடி, ஆடு பாப்பா

பாடி, ஆடு பாப்பா, கவிஞர் சபா.அருள்சுப்பிரமணியம், மணிமேகலை பிரசுரம், விலை 400ரூ. குழந்தைகள் முதல், சிறுவர்கள் வரை பாடி மகிழ ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நுால். பாலர் பாடல்கள், சிறுவர் பாடல்கள், கதைப்பாடல்கள், மாணவர் பாடல்கள், தமிழ் மரபுத் திங்கள் பாடல்கள், தமிழ்மலர் பாடல்கள், பாடி ஆடு பாப்பா, தங்கக் கலசம், பாடலும் ஆடலும், பாச்செண்டு ஆகிய தலைப்புகளின் கீழ் சந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. மிக எளிமையாக, இசையுடன் பாடத்தக்க வகையில் சொற்களைக் கோர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. மழலையருக்கு, மொழி கற்பிக்கும் வகையில் […]

Read more

வாழும் வழிமுறைகள்

வாழும் வழிமுறைகள், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.65 வானொலி நிகழ்ச்சிகளில், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆற்றிய உரைகளை தொகுத்து அழகிய நுால் வடிவம் பெற்றுள்ளது. முதலில், ‘ஏன் வேண்டாம் வாக்குவாதம்’ என்ற தலைப்பில் துவங்குகிறது. இறுதியில், ‘அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்’ என்ற தலைப்பில் முடிகிறது, மொத்தம், 28 தலைப்புகளில் உரைத் தகவல்கள் சுவாரசியம் தருகின்றன. வாழ்வுக்கு தேவையான முக்கிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ‘பெண்ணாதிக்கத்தை தடுப்பது எப்படி’ என ஒரு தலைப்பில் உள்ள உரை மிகவும் சுவாரசியம் தருகிறது. அந்த கட்டுரையில், ‘ஆதிக்க உணர்வை […]

Read more

தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள், பொறிஞர் ப.நரசிம்மன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.60 அரசு பணியில் உள்ள அடிப்படை விதிகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால். அடிப்படை விதிகளை அறியாத அரசு ஊழியர்கள் தான், அதிகாரம் படைத்தவர் போல் சக ஊழியர்களையும், மக்களையும் மதிக்காமல் மனம் போன போக்கில் செயல்படுவர் என சுட்டிக்காட்டி, அரசு பணியாளர் தவறு செய்யும் பட்சத்தில், என்ன வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை விவரிக்கிறது. அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை உள்ளடக்கியுள்ள நுால். […]

Read more

உவமைத் தொடர்களைச் கண்டுபிடியுங்கள்!

உவமைத் தொடர்களைச் கண்டுபிடியுங்கள்!, டி.என்.இமாஜான், மணிமேகலை பிரசுரம், விலைரூ.80 படங்களை பதிவிட்டு, அதில் உள்ள உவமையை கண்டுபிடிக்கும் புதிர்களை உள்ளடக்கிய தொகுப்பு நுால். மொத்தம் 100 புதிர்கள் உள்ளன. தமிழ் இலக்கணத்தை எளிய முறையில் மனங்கொள்ளத்தக்க வகையில் தயாரிக்கப்பட்டுள்ள புதுமை நுால். பக்கத்துக்கு இரண்டு படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் புதிர்களை கண்டுபிடிக்கும் போது, இயல்பாகவே தமிழில் உவமை இலக்கணம் மனதில் பதியும். மொழியை கற்பிக்கும் எளிமையான முயற்சியாக அமைந்துள்ள நுால். – ஒளி நன்றி: தினமலர், 30/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more
1 2 3 9