சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள்

சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள், மா.கருணாநிதி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.180. சமூக இயக்கத்தைக் கணித்து, பல்வேறு சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். காவல் துறையில் உயர் பொறுப்பு வகித்தவரின் சமூக பார்வையும், பொறுப்புணர்வுள்ள கடமையும் வெளிப்பட்டுள்ளது. மொத்தம், 29 கட்டுரைகள் உள்ளன. பெரும்பாலும், ‘தினமலர்’ நாளிதழ் சிந்தனைக்களம் பகுதியில் பிரசுரமானவை. தீயவர்களின் செயலால் மட்டுமே, சமுதாயம் கொடுமை அனுபவிப்பதில்லை; அவற்றை பார்த்தும் தட்டிக் கேட்கும் வாய்ப்பு இருந்தும், செயல்படாமல் இருக்கும் மெத்தனத்தால் தான், பல கொடுமைகள் நிகழ்கின்றன என, […]

Read more

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!, ஜி.சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.155 குயில் பாரதி குறித்த அரிய செய்திகளை விரித்துச் செல்லும் நுால். பாரதியின் பெருமித உணர்ச்சி, கவித்துவ மேன்மை, இசை அறிவு, நட்பு போற்றும் உருக்கம் எனப் பல்வேறு செய்திகளை விறுவிறுப்பு குறையாமல் சுவைபடச் சொல்கிறார் ஆசிரியர். காந்திமதிநாதனுடன் விளைந்த கவிதைப் போர், கிருஷ்ணசாமி செட்டியார், குவளைக்கண்ணனுடன் பாரதிக்கு இருந்த நெருக்கம், வ.ரா.,வின் பற்றும் ஈடுபாடும், சுதேசமித்திரன், இந்தியா நாளிதழ்கள் குறித்த செய்திகள், பாரதியின் இறுதிச் சொற்பொழிவு, ச.து.சி.யோகியார் பாரதியிடம் கொண்டிருந்த அன்பு எனப் […]

Read more

யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில்

யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில், முனைவர் சுடர்க்கொடி ராஜேந்திரன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150 தேடலே மனித வாழ்வின் ஆரம்பம். தேடலை துவங்கும் போது தடைகளை தாண்டும் பக்குவம் வேண்டும். அதை பழகினால், வெற்றி காணலாம் என்பதை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். மதுரை தினமலர் நாளிதழில் தொடராக எழுதிய கட்டுரைகள், தொகுக்கப்பட்டு புத்தகமாகியுள்ளது. மொத்தம், 30 கட்டுரைகள் உள்ளன. தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன. பல்வேறு நுால்களை கற்ற அறிவுடன், அனுபவ அறிவை குழைத்து எழுதப்பட்டுள்ளது. முன்னேறத் துடிப்போருக்கு வளம் தரும் […]

Read more

கம்பராமாயணத்தில் அரிய அறிவியல் தகவல்கள்!

கம்பராமாயணத்தில் அரிய அறிவியல் தகவல்கள்!, முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.80 ‘புதியன கண்ட போழ்து விடுவரோபுதுமை பார்ப்பார்’ என்ற கம்பன் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பல்வேறு அரிய அறிவியல் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். ஆற்றல் அழிவின்மை விதியை உணர்த்தும் முதல் பாடல் துவங்கி, யுத்த காண்டத்தில், கம்பன் கணக்காக படைகளின் பலத்தைக் காட்டுவது ஈறாக, 19 கட்டுரைகளில் அறிவியல் நுட்பம் அணிவகுத்து உள்ளது. சோலார் கருவிகளின் பயன்பாட்டை, வருணனை வழி வேண்டுபடலத்தில் ஒப்பிடும் திறம் புதுமை. ‘விசை இலவாக தள்ளி வீழ்ந்தன’ என்னும் […]

Read more

புதுமையான தமிழ்ச் சீரமைப்பும் உச்சரிப்பும்

புதுமையான தமிழ்ச் சீரமைப்பும் உச்சரிப்பும், கே.எஸ்.சக்திகுமார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150. தமிழ் எழுத்து வரி வடிவங்களை, 28 என்ற எண்ணிக்கையில் சீரமைத்து விளக்கமாக எழுதியுள்ளார். இந்த எழுத்துக்களை கணினியில் பயன்படுத்தும் முறைகளை விளக்கியுள்ளார். அதுபோல, 8 மற்றும் 9 என்ற எண்கள் சரி. ஆனால், ஒலி வடிவில், எண்பது மற்றும் தொன்னுாறு என்பதை, எண்பது, தொன்பது எனச் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். கால மாற்றம் தான் இதை ஒப்புக் கொள்ள வேண்டும். – சீத்தலைச்சாத்தன் நன்றி: தினமலர்,25/7/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

கொரோனாவின் அவலங்களும் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளும்!

கொரோனாவின் அவலங்களும் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளும்!, பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.170 கொரோனா தொற்றின் துவக்கம் முதல், எட்டாம் கட்ட ஊரடங்கு வரை நோய் பரவலையும், பாதிப்புகளையும் விளக்குகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளைக் கால வரிசையில் விவரிக்கிறது. வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், தகவல் தொழில் நுட்ப அலுவலகங்கள் செய்த மாற்று ஏற்பாடுகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளன. எல்லா ஊடகங்களிலும் கொரோனாவின் பெயர் தான் பிரதானமாகக் காணப்படுகிறது. கைகளை சோப்பு போட்டு கழுவுதல், முக கவசம் […]

Read more

மனிதனைப் படைப்பது யார்?

மனிதனைப் படைப்பது யார்?, ஏ.கே. ராஜ், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150. மனித படைப்பை, அறிவியல் கண்ணோட்டத்துடன் விவரிக்கிறது இந்நுால். மனித படைப்புக்கு காரணம், விரும்பியபடி வாழ முடியுமா போன்ற சாதாரண கேள்விகளுக்கான மர்ம முடிச்சுகளை ஆராய்கிறது.மனிதன் உருவான விதம், ஆற்றல், சக்தி, நிலம், நெருப்பு, நீர், சூரியன், கோள்கள் குறித்து, எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. மனித மூளையின் செயல்பாடுகள், மனிதனின் தன்மைகள், பண்புகள் எப்படி வெளிப்படுகிறது என்பதையும் விவரிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், கணித மேதைகளின் ஆற்றல், படைப்புகள், அதற்காக அவர்கள் பட்ட கஷ்டங்கள், ஆட்சியாளர்களின் நுட்பமான […]

Read more

லேனா தமிழ்வாணனின் பொன்மொழிகள்

லேனா தமிழ்வாணனின் பொன்மொழிகள்,சி.தெ.அருள், மணிமேகலை பிரசுரம், விலைரூ.400. பொன்மொழிகள் என்றாலே, மெத்த படித்த மேதாவி, சான்றோர், ஞானிகளின் மொழியாக இருக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தை தகர்த்துள்ள நுால். பொன்மொழி என்ற சொல்லுக்கு புதிய இலக்கணம் வகுத்து, பயனுள்ள மொழிகளை கொண்டுள்ளது. பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் எழுதியுள்ள நுால்களில் இருந்து, பயனுள்ள குறிப்புகள், அறிவுரைகளை, பொருளை எளிமையாக உணர்த்தும் சொற்கோர்வைகளைத் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளது. நுாலில், ‘அன்பு உள்ளத்தில் இருந்தால், அதை உள்ளத்தோடு வைத்துக் கொள்ளாமல் உதட்டளவில் சொல்லவும்; அதை உதட்டோடு மட்டும் வைத்துக் […]

Read more

உடுமலை வரலாறு

உடுமலை வரலாறு, பதிப்பக வெளியீடு, மணிமேகலை பிரசுரம், விலைரூ.500 உடுமலை என்ற ஊரைப் பற்றிய தகவல்கள் நிரம்பிய நுால். அவ்வூரின் பல்வேறு பெருமைகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ஊர் வளர்ந்த வரலாறு பற்றிய குறிப்பிடத்தக்க செய்திகளைத் தொகுத்து வழங்கியுள்ளது. மலைகளின் ஊடே இருப்பதால் உடுமலை. உடு என்பது விண்மீனைக் குறிக்கும். எத்திசையில் இருந்து வந்தாலும் விண்மீன் தென்மலைக்கு அடையாளமாக இருந்து வருவதால், உடுமலை என்ற பெயர் பூண்டதாகச் சொல்லப்படுகிறது. சங்க காலத்தில் உதியன் மரபினர் ஆண்டதான குறிப்புண்டு. அங்கு கிடைத்த காசுகளும், தாழிகளும், நடுகற்களும், […]

Read more

உணர்வுகள் மோதும் பொழுது

உணர்வுகள் மோதும் பொழுது, மாந்துறை பாபுஜி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.220 நெஞ்சை தொடும் சம்பவங்கள் அடங்கிய நாவல். அற்புத ராஜ் – லுார்து குடும்பத்தினர் நெடுங்காலத் தோழமை உடையவர்கள். லுார்துவின் மகன் ஜோசப் நல்ல பையன். திடீரென்று திருத்த முடியாத குடிகாரன் ஆகிறான். அவன் ஏன் குடிகாரன் ஆனான் என்பது தான் கதையை வளர்க்கிறது. காதல் தோல்வி அவனை குடிகாரன் ஆக்குகிறது. காதலித்த பெண் கிடைத்ததும் திருந்தி நல்ல மனிதன் ஆகிறான். சம்பவங்களை அடுக்கிச் செல்லும் முறையிலும் கதை மாந்தர் உரையாடலிலும் நேர்த்தி உள்ளது. […]

Read more
1 2 3 4 5 9