தமிழகக் கலைகள்

தமிழகக் கலைகள், மா. இராசமாணிக்கனார், அழகு பதிப்பகம், விலை ரூ.100. ஆயகலைகள், 64 என்பர். 11 வகையான தமிழக கலைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நுால். கலை படைப்புகளாக விளங்குபவற்றை விவரிக்கிறார். முதலாவது எழுதியுள்ளது கட்டடக்கலை. இதன் அழகையும், நுட்பத்தையும் விளக்கியுள்ளார். தொடர்ந்து ஓவியம், சிற்பம், வார்ப்பு, இசை, நடனம், நாடகம், மருத்துவம், சமயம், தத்துவம், இலக்கியம் என, தனித்தனியே கலைகளை விவரிக்கிறார். நுட்பமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை அழகுற வெளிப்படுத்துகிறது இந்நுால். படிப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, வாழ்க்கையை வளப்படுத்த உதவுகிறது. பல […]

Read more

இரட்சணிய யாத்திரகம்

இரட்சணிய யாத்திரகம், பாரி நிலையம், சென்னை, விலை 500ரூ. கிறிஸ்தவ கம்பர் என்று அழைக்கப்படுகிற சிறப்பை பெற்றவர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை. பிறப்பிலே வைணவராக இருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய இவர் படைத்த இட்சணிய யாத்திரம் கிறிஸ்தவ இலக்கியங்களில் உன்னதமான இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறது. 3766 பாடல்களை கொண்டு, ஜான் பனியன் எழுதிய திருப்பயணிகள் முன்னேற்றம், சாமுவேல் பவுல் ஐயரின் மோட்சப் பிரயாணம், பைபிள் ஆகிய 3 நூல்களின் வழி நூலாக அழகு தமிழ் காப்பியமாக, இயேசு பிரானுக்கு மணி மகுடமாக […]

Read more

கொங்குநாட்டுக் கோயில்கள்

கொங்குநாட்டுக் கோயில்கள், கேராசிரியர் கி. வெங்கடாச்சாரி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 252, விலை 225ரூ தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு என ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஆட்சிசெய்தனர். கோவை, சேலம், தர்மபுரி,கொங்குநாடாகும். இங்கு உள்ள கோவில்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த நூல். கோவில் வரலாறு, கல்வெட்டு புராணம், சிற்ப நுட்பங்கள் ஆகிய பல்வேறு கோணங்களிலும் நேரிடையாகப் படங்கள் மூலமும், ஒவ்வொரு கோவிலாக நூலாசிரியர் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்வதுபோல எழுதியுள்ளார். […]

Read more

சட்டச் சொல் அகராதி

சட்டச் சொல் அகராதி, வீ. சந்திரன், புத்தகப் பூங்கா, 17/9, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ. நீதிமன்றங்களில் வழக்காடும் தமது வக்கீல்கள் என்ன சொல்லி வாதாடுகிறார்கள் என்பது குறித்து அந்த வழக்குக்கு உரியவர்கள் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது சட்டத்துறையில் ஏற்பட்டுள்ள தமிழ் வளர்ச்சியின் காரணமாக, சட்ட நுணுக்கங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில், நீதிமன்றங்களில் தமிழில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு தேவைப்படும் சட்டக்கலை சொற்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழில் வடிவமைத்துள்ளார் ஆசிரியர் […]

Read more