பாபாயணம்

பாபாயணம், ஜி.ஏ.பிரபா, விகடன் பிரசுரம், விலை 350ரூ. மதபேதம் இல்லாமல், அனைவருக்கம் அருள் மழை பொழியும் சாய்பாபா, நிகழ்த்திய ஏராளமான அற்புதங்கள் இந்த நூலில் தொகுத்துத்து தரப்பட்டு இருக்கின்றன. சாய்பாப நிகழ்த்திக் காட்டிய அருஞ்செயல்கள், அவர் தொடர்பான வியப்பான சம்பவங்கள், அவர் தொடர்பான வியப்பான சம்பவங்கள் அனைத்தும் படித்துப் பரவசம் அடையும் வகையில் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதுவரை அதிரகம் பகிரப்படாத பாபாவின் அற்புத நிகழ்வுகளையும் இதில் காணமுடிகிறது. இவை, சாய்பாபாவின் உயிரோட்டம் நிறைந்த வண்ணப்படங்களுடன் கொடுக்கப்பட்டு இருப்பதால் மனதை ஈர்க்கின்றன. […]

Read more

விதையாக இரு

விதையாக இரு, முன்னோர்கள் சொன்ன முன்னேற்றச் சிந்தனைகளின் தொகுப்பு, த.இராமலிங்கம், விகடன் பிரசுரம், பக்.224, விலை ரூ.210. தமிழ் இலக்கியங்களில் நம் முன்னோர் கூறிச் சென்ற கருத்துகள் இன்றைய வாழ்வுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதை விளக்கும் நூல்.தமிழின் அறநெறி நூல்களாகிய இன்னா நாற்பது, இனியவை நாற்பது, விவேகசிந்தாமணி, நீதி வெண்பா, திரிகடுகம், வெற்றி வேற்கை ஆகியவை மட்டுமல்ல, சங்க இலக்கிய நூலான புறநானூற்றிலும் கூறப்பட்டுள்ள வாழ்க்கைநெறிகள் நமது வாழ்வுக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. முயற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கும் […]

Read more

மண்…மக்கள்…தெய்வங்கள்

மண்…மக்கள்…தெய்வங்கள், வெ.நீலகண்டன், விகடன் பிரசுரம், பக். 152, விலை 185ரூ. தமிழகத்தில் குல தெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குல தெய்வம் உண்டு. இந்த குல தெய்வங்கள், பெரும்பாலும் கிராம தேவதைகளாகத் தான் இருப்பர். கிராம தேவதைகளை வழிபடும் பலருக்கு, அவற்றின் வரலாறு தெரியாது; எதனால், வழிபடுகிறோம் என்றும் தெரியாது. அந்த குறையை போக்கும் வகையில், கிராம தேவதைகளான அய்யனார், கருப்பன்,மாடசாமி, மதுரை வீரன், பேச்சி பற்றி, ஆசிரியர் நீலகண்டன் எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார். இந்நுாலில், அய்யனார், கருப்பன் […]

Read more

சொல் அல்ல செயல்

சொல் அல்ல செயல்,  அதிஷா,  விகடன் பிரசுரம், பக்.264, விலை ரூ. 215. நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை நாமே சமரசப்படுத்திக் கொண்டும் நியாயப்படுத்திக் கொண்டும் இது தவறில்லை என்று செய்யும் பல்வேறு செயல்கள் தவறுதான் என்று ஆணித்தரமாக உடைத்துக் காட்டுகிறார் நூலாசிரியர் அதிஷா. உதாரணமாக, நாகரிக உலகில் கடன் அட்டைகள், ஆடம்பர செல்லிடப்பேசிகள் இவற்றை வாங்குவதற்காக கடன் வாங்கும் அவலத்தை நண்பர் ரவியின் தற்கொலை மூலம் உணர்த்துகிறார். வாழ்க்கையில் அனைவரும் தமக்கு விருப்பமானதை விட்டு விட்டு பிறரின் விருப்பத்துக்காக ஓடுவதையும், அதே நேரத்தில் […]

Read more

மண் மக்கள் தெய்வங்கள்

மண் மக்கள் தெய்வங்கள், வெ.நீலகண்டன், விகடன் பிரசுரம், விலை 185ரூ. கிராமப்புற மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து இன்றைக்கும் காலம் தவறாமல் கொண்டாடப்படும் கிராம தெய்வ வழிபாட்டை, உளவியல் பூர்வமாக இந்த நூல் அணுகி இருக்கிறது. இருளர்கள், கோத்தர்கள், பளியர்கள், காடர்கள் போன்ற தமிழகப் பழங்குடி மக்களின் வழிபாடுகள், திருநங்கைகளின் மாதா வழிபாடு, திருவள்ளுவருக்கு அருகே 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் அபூர்வமான வழிபாடு ஆகியவை பற்றியும் இந்த நூலில் விரிவான தகவல்கள் உள்ளன. சில கோவில்களில் நடைபெற்ற அமானுஷ்யமான சம்பவங்கள் […]

Read more

கிறுக்கு ராஜாக்களின் கதை

கிறுக்கு ராஜாக்களின் கதை – சரித்திரக் கிறுக்கர்கள் முதல் சமகாலச் சர்வாதிகாரிகள் வரை,  முகில், விகடன் பிரசுரம்,  பக்.264, விலை ரூ.190 எல்லாருக்கும் தெரிந்த சர்வாதிகளான ஹிட்லர், முசோலினியை விட மிகக் கொடூரமானவர்களாக உலகில் பல சர்வாதிகாரிகள் இருந்திருக்கின்றனர். அவர்களில் 21 சர்வாதிகாரிகளின் கதை இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 3800 ஆண்டுகளுக்கு முன் பாபிலோனியாவை ஆண்ட ஹம்முராபியின் காலத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை உண்டு. இல்லையென்றால் குற்றம் சுமத்தியவனுக்கு மரணதண்டனை இருந்திருக்கிறது. கி.பி.1547 இல் ரஷ்யாவில் கிரெம்ளின் மாளிகைக்கு மேற்கே அர்பாட் […]

Read more

எல்லா உணவும் உணவல்ல

எல்லா உணவும் உணவல்ல, பாலு சத்யா, விகடன் பிரசுரம், பக். 144, விலை 125ரூ. மனித வாழ்விற்கு உண்ண உணவு முதல் தேவையாகும். உணவு தயாரிப்பதில், உண்பதில் எவ்வளவு கவனம் தேவை என்பதை இந்நுால் மிக அருமையாக விளக்குகிறது. பல உணவுப் பொருட்களையும் வீட்டிலேயே தயாரித்து உண்ண வேண்டும் என்றும், உணவே மருந்தாக நினைத்தால் வியாதிகள் வராது என்றும், உடல் ஆரோக்கியம் பெறத் தேவையான உணவுகளைக் கூறுவதும் இந்நுாலின் சிறப்பாகும். பழைய சோறின் அருமைபெருமைகளை விளக்குவதும், சமோசா வேண்டாம் என்பதற்கான காரணங்களை விளக்குவதும் (பக்., […]

Read more

சிவமகுடம்

சிவமகுடம், ஆலவாய் ஆதிரையன், விகடன் பிரசுரம், விலை 225ரூ. தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும், களப்பிரர்களும், சாளுக்கியர்களும் அடிக்கடி போரிட்டுக் கொள்வது வழக்கம். அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற “உறையூர் போர்”, ஒரே நாளில் நடந்து முடிந்துவிட்டது! எனினும் பிற்கால வரலாற்றை மாற்றிப்போட்டது. சில காலம் சமண மதத்தைத் தழுவியிருந்த பாண்டிய மன்னன் கூன் பாண்டியன், உறையூரின் மீது படையெடுத்தபோது நடந்த சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த சரித்திரக்கதை, விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஸ்யாம் வரைந்த வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி 6/6/2018.   […]

Read more

இந்தி ஏகாதிபத்தியம்

இந்தி ஏகாதிபத்தியம், ஆலடி அருணா, விகடன் பிரசுரம், விலை 240ரூ. நாடு விடுதலை அடைந்த பின் தமிழகம் கண்ட புரட்சியில் மிக முக்கியமானது மொழிப்போர் என்பதை தமிழ்ப் பேசும் நல்லுகம் நன்கறியும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் வலுக்கட்டாயமாக நடந்த இந்தி திணிப்பையும், அதற்கு எதிராக தமிழகம் மேற்கொண்ட போராட்டங்களையும் கச்சிதமாக விவரிக்கிறது இந்த நூல். ‘ஒரு இனத்தை அடிமைப்படுத்த வேண்டுமென்றால் அவர்களின் மொழியை அழித்து விட வேண்டும்’ என்ற சூழ்ச்சியின் அடிப்படையிலேயே, பாரதத்தின் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் மற்ற பகுதிகளில் இந்தியை திணிக்க […]

Read more

சத்யஜித் ரே வாழ்வும் வழியும்

சத்யஜித் ரே வாழ்வும் வழியும், வீ.பா.கணேசன், விகடன் பிரசுரம், விலை 100ரூ. இந்திய சினிமா உலகின் அசைக்க முடியாத மனிதர் பிதாமகன், பால்கே. வங்கத்து மக்களின் வாழ்க்கை வரலாற்றை இலக்கியத்தின் மூலம் சினிமா என்ற சொல்லால் இந்திய மக்களின் கவனத்தை தன்னகத்தே வைத்துக் கொண்டவர் என்றால் அது மிகையாகாது. அந்த வரிசையில் இந்திய சினிமாவில் சத்யஜித் ரேவும் குறிப்பிடத்தக்க மனிதராக இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. தடைபட்ட பயணம் என்ற தான் எழுதிய கதைக்கு திரைக்கதையை எழுதி, அதைத் திரைப்படமாக எடுத்து, இந்தியாவிலேயே முதன் […]

Read more
1 2 3 30