தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள், திருமலை. செல்வகோமதி, சோக்கோ அறக்கட்டளை, பக். 16+320, விலை 150ரூ. தமிழகத்தில் கொத்தடிமைகள் என்று நூலுக்குத் தலைப்பு அமைந்திருப்பினும், உலக அளவில் பல நாடுகளிலும் உள்ள கொத்தடிமைகள் பற்றி விரிவாக இதில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் பல லட்சம் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளனர் என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல்குவாரிகள் முதலிய இடங்களில் கொத்தடிமைகளைக் காண முடிகிறது. கொத்தடிமைகள் இல்லாமல் இருக்க சட்டங்கள் இயற்றப்பட்டும், அடிமை வாழ்க்கை தொடர்கதையாகவே உள்ளது. 1997 முதல் இன்று வரை அச்சமூட்டும் […]

Read more

தமிழ் சினிமாவின் மயக்கம்

தமிழ் சினிமாவின் மயக்கம், கௌதம சித்தார்த்தன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 184, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-810-4.html ஒரு சினிமாவின் நீள அகலங்களை அதன் போக்கில் சொல்லிவிட்டு, பிடித்திருந்தால் ஆஹா, ஓஹோ என்றும் பிடிக்காவிட்டால் மொக்கை என்று எழுதுவது ரசனையின் பாற்பட்டது. அதை விமர்சனம் என்று தளத்தில் இயங்க விட்டுப்பார்க்கும் போக்கு, தமிழ் இதழ்களில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதைத்தாண்டி ரசனை விமர்சனப் போக்கிலிருந்து விலகி அதனுள் ஒரு நுட்பமான அரசியல் […]

Read more