நெஞ்சில் உரம் நேர்மைத் திறம் வி.ஆர்.லட்சுமிநாராயணன் ஐ.பி.எஸ்.

நெஞ்சில் உரம் நேர்மைத் திறம் வி.ஆர்.லட்சுமிநாராயணன் ஐ.பி.எஸ்.,  ப.திருமலை, சோக்கோ அறக்கட்டளை, பக்.272, விலை ரூ.200. புகழ்பெற்ற வி.ஆர்.கிருஷ்ணய்யரின் தம்பியான வி.ஆர்.லட்சுமிநாராயணன் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இந்நூல் அவருடைய வாழ்க்கை வரலாறு. பணியின்போது பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்ட போதும், மனிதாபிமானத்தை விட்டுக் கொடுக்காமல், அவர் எடுத்த முடிவுகள் வியக்க வைக்கின்றன. ‘1954 இல் மதுரை – சமயநல்லூர் அருகே வழிப்பறிக் கொள்ளையர்களை மக்கள் தாக்க, ஒரு கொள்ளையர் கொல்லப்படுகிறார். அப்போது அது குறித்து அறிக்கை அளித்த வி.ஆர்.லட்சுமிநாராயணன், தற்காப்புக்காக கொள்ளைக்காரனைக் […]

Read more

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள், திருமலை. செல்வகோமதி, சோக்கோ அறக்கட்டளை, பக். 16+320, விலை 150ரூ. தமிழகத்தில் கொத்தடிமைகள் என்று நூலுக்குத் தலைப்பு அமைந்திருப்பினும், உலக அளவில் பல நாடுகளிலும் உள்ள கொத்தடிமைகள் பற்றி விரிவாக இதில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் பல லட்சம் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளனர் என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல்குவாரிகள் முதலிய இடங்களில் கொத்தடிமைகளைக் காண முடிகிறது. கொத்தடிமைகள் இல்லாமல் இருக்க சட்டங்கள் இயற்றப்பட்டும், அடிமை வாழ்க்கை தொடர்கதையாகவே உள்ளது. 1997 முதல் இன்று வரை அச்சமூட்டும் […]

Read more

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்-சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்-சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை, ப. திருமலை, எஸ். செல்வ கோமதி, சோக்கோ அறக்கட்டளை, மதுரை 20, பக். 320, விலை ரூ. 150. சங்க காலம் தொடங்கி தற்போது வரையில் தொடரும் அடிமைமுறை வரலாற்றை எளிமையாக விளக்குகிற புத்தகம். தமிழ்நாட்டில் சங்க காலத்தில் கொத்தடிமை முறை இருந்ததற்கான புறநானூறு, தொல்காப்பியம், உள்ளிட்ட இலக்கியச் சான்றுகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலம் தொடங்கி ஐரோப்பியர் காலம் வரையிலான தமிழகத்தில் நிலவிய அடிமை முறை பற்றி விரிவாக […]

Read more