சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள், தொகுப்பு ச. தில்லைநாயகம், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 304, விலை 155ரூ. அருமையான 30 கட்டுரைகள். அதிலும் நான்கு பிரிவாக ஆளுமையும், ஆக்கங்களும், மதிப்பீடுகளும் எதிர்பார்ப்புகளும் படைப்பாளிகளும் படைப்புகளும், சமூக அரசியல் சிந்தனைகளும்) பிரித்து கொடுத்திருக்கிறார்கள். சிறந்த எழுத்தாளர்களின் அனைத்து எழுத்துகளுமே சிறப்பாகத்தான் இருக்கும். அதிலும் சிறப்பானவற்றை காலத்திற்கு ஏற்றாற்போல தேர்வு செய்துள்ள தில்லைநாயகத்தைப் பாராட்ட வேண்டும். அகிலனின் சித்திரப் பாவைக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தது தொடர்பான கட்டுரை, தமிழகத்தில் யார் விருது பெற்றாலும், ஒருமுறை எடுத்துப் […]

Read more

கரிசக் காடு

கரிசக் காடு, எஸ்.எஸ். போத்தையா, தொகுப்பும் பதிப்பும்- பா. செயப்பிரகாசம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 188, விலை 140ரூ. கரிசல் மண்ணின் நாட்டுப்புறங்களில் மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சொலவடைகள், நம்பிக்கைகள், யுக்திக் கணக்குகள் எல்லாவற்றையும் சேகரித்துத் தொகுப்பதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தவர் எஸ்.எஸ். போத்தையா. ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த அவருக்குத் தலைமையாசிரியர் பதவி உயர்வுடன் இடமாற்றமும் கிடைத்தபோது, தனது நாட்டுப்புற இயல் சேகரிப்புப் பணிக்கு இடமாற்றம் தடையாக இருக்கும் என்பதால், பதவி உயர்வை வேண்டாம் […]

Read more

ஸந்தேக நிவாரணீ (பாகம் 7)

ஸந்தேக நிவாரணீ (பாகம் 7), நன்னிலம் வை. ராஜகோபால கனபாடிகள், வைதிகஸ்ரீ, சென்னை, பக். 232, விலை 150ரூ. ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்களுக்கு மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கும் விதமாக, சென்னையில் ஆங்காங்கே நடைபெறும் கூட்டங்களில் அன்பர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் நூலாசிரியர் வை. ராஜகோபால கனபாடிகள். ஆறு பாகங்களில் 500 கேள்விகளுக்கு விடையளித்துள்ள அவர், இந்த ஏழாவது பாகத்தில் 157 சந்தேகங்களுக்கு விடையளித்துள்ளார். தெய்வ வழிபாடு, பூஜை, ஹோமம், விளக்கேற்றுதல், மந்திரம், ஜபம், பாராயணம், வாஸ்து, மங்கல நிகழ்ச்சிகள், கனவு, ஜோதிடம், பஞ்சாங்கம், பரிகாரங்களில், […]

Read more