புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள், முல்லை மு. பழநியப்பன், முல்லை பதிப்பகம், பக். 128, விலை 50ரூ. புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம், சிறுகதைகளில் பெரும் புரட்சியும், புதுமையும் செய்தவல் இவர். புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் குறிப்பும், புதுமைப்பித்தன் கூறிய சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும், புதுமைப் பித்தனைப் பற்றி அறிஞர்களின் கருத்துரைகளும், இவரது நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முத்தான கருத்துரைகளும், கடிதங்கள், மதிப்புரைகள் ஆகியனவும் அடங்கியது இந்நூல். சிறிய நூல் என்னும் புதுமைப்பித்தனைப் பற்றித் தெரியாதவர்கள், தெரிந்து அறிந்துகொள்ள, நிரம்பச் செய்திகள் இதில் உள்ளன. அளவில் சிறிதாக இருந்தால் […]

Read more

தேவாரத்தில் தொன்மம்

தேவாரத்தில் தொன்மம், முனைவர் வே. சேதுராமன், சேது பதிப்பகம், சிந்தாமணி இல்லம், 27, விஸ்வநாதன் தெரு, ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை ரூ1350 (நான்கு பாகங்கள்). கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியரான இந்நூலாசிரியர், சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். இவர் தேவாரத்தில் காணப்படும் தொன்மம் குறித்து, பல ஆண்டுகள் திறனாய்வு செய்து, நான்கு பாகங்களாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு பாகமும் சுமார் 400 பக்கங்களுக்கு மேலுள்ள தனித்தனி நூல்களாகும். இந்நூலின் ஆரம்பத்திலேயே தொன்மத்திற்கும், புராணத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறும் ஆசிரியர், […]

Read more

வள்ளலாரின் தமிழ் மருத்துவம்

வள்ளலாரின் தமிழ் மருத்துவம், ப. இராதா, நாகா பதிப்பகம், புதுச்சேரி, பக். 98, விலை 90ரூ. முனைவர் பட்டத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டை புத்தகமாக மாற்றியிருப்பதால் ஒரு வாசகனிடமிருந்து இந்நூல் அந்நியப்பட்டுவிடுகிறது. ஓர் ஆய்வுக்கட்டுரையைப் பேராசிரியர் குழுவுக்குப் புலப்படச் செய்வதற்கும், ஒரு வாசகனுக்கு விளங்கச் செய்வதற்கும் இந்த புத்தகத்தை கொஞ்சம் மாற்றி எழுத வேண்டிய தேவை இருக்கிறது. அதைச் செய்யாததால் இந்தப் புத்தகம் ஆய்வுக்கட்டுரையின் அச்சுப் பிரதியாக மட்டுமே உள்ளது. வள்ளலாரின் பேச்சில் பாடல்களில் இடம்பெறும் கீரைகள் மலிகைகளைக் குறிப்பிட்டு அதன் பயன்களை விளக்கிச் சொல்கிறது […]

Read more