அஞ்சலை அம்மாள்

அஞ்சலை அம்மாள் ,  ராஜா வாசுதேவன்,  தழல், பக்.320;  விலை ரூ.250.   சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சாமானியக் குடும்பத்துப் பெண் அஞ்சலை அம்மாளின் தியாகத்தை ஒரு நாவல் போல விறுவிறுப்பாகவும், யதார்த்தத்தோடும் எழுதியிருக்கிறார் நூலாசிரியர். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அஞ்சலையம்மாள், துணிச்சலுடன் வெள்ளைக்கார இளைஞரை எதிர்கொண்டு அவரது தவறான செயலுக்கு மக்கள் ஆதரவுடன் தண்டனை தருவதும், ஆங்கிலேய அரசு தேடிவந்த பாரதியாரை புதுச்சேரியில் இருந்து மாட்டுவண்டியில் தனது வீட்டுக்கு வரவழைத்து உபசரித்து ஆசி பெற்றதும் வியக்க வைக்கிறது. அஞ்சலை அம்மாளின் சுதந்திர போராட்ட செயல்களுக்குப் […]

Read more

 இப்படியும் மனிதர்கள்

 இப்படியும் மனிதர்கள்,  சீ.சந்திரசேகரன், தொகுப்பாசிரியர்: ந.க.மங்களமுருகேசன், பகவதி பதிப்பகம்,  பக்.160, விலை ரூ.100;  உளவியல் மருத்துவ நிபுணரான நூலாசிரியர் தனது 40 ஆண்டு கால அனுபவங்களின் அடிப்படையில் இந்நூலை எழுதியிருக்கிறார். தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பலதரப்பட்ட நோயாளிகளின் பிரச்னைகளைக் கேட்டு, அவற்றுக்கு அவர் அளித்த சிகிச்சைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். உளவியல் மருத்துவர் என்பதால், அவர் விவரிக்கும் சம்பவங்கள் கதைகளைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. எனினும் மருத்துவரீதியான பல அரிய தகவல்கள், உண்மைகள் நூல் முழுவதும் உள்ளன. மனித வாழ்வில் இவ்வளவு மனநலப் பிரச்னைகளா? […]

Read more

வாழ்வியல்

வாழ்வியல், த.திலகர்; விஜயா திலகர் பதிப்பகம், பக். 128, விலை ரூ.150;  சுவாமி சின்மயானந்தரால் தொடங்கப்பட்ட சின்மயா மிஷன் அமைப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டு புரிந்து வரும் நூலாசிரியர் திலகர், சுவாமிஜியிடம் கற்ற, கேட்ட விஷயங்களைப் பல்வேறு தலைப்புகளில் நூலாக வடித்துள்ளார். மனம் ஒரு குரங்கு – அதைக் கட்டுப்படுத்த வேண்டும். செய்யும் விஷயத்தில் முழு மனதைச் செலுத்துவதே தியானம் . நாம் எந்தத் துறையைத் தேர்வு செய்ய வேண்டும், மணவாழ்க்கையில் நிம்மதியாக இருப்பது எப்படி, ஓம் என்ற எழுத்தின் சிறப்பு, பள்ளிப் […]

Read more

பூமியைச் சுற்றிப் பாருங்கள்

பூமியைச் சுற்றிப் பாருங்கள்,  பத்ஹுர் ரப்பானி,  செய்யது ஹோம் பப்ளிஷர்ஸ், பக்.426, விலை ரூ.250.   1970 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 20 அக்டோபர் 2018 வரை உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்த தனது பயண அனுபவங்களை நூலாசிரியர் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். வெறும் பயண அனுபவங்களாக மட்டும் இல்லாமல், சென்ற இடத்தின் சிறப்புகள், வித்தியாசமான தன்மைகள், வரலாறு என அனைத்தையும் தொட்டுச் செல்கிறது இந்நூல். சிங்கப்பூரில் எந்த நாட்டு நாணயத்தைக் கொடுத்தாலும் மாற்றிக் கொள்ளலாம். பணம் மாற்றுவதற்கென்றே பல நிறுவனங்கள் பல இடங்களில் இருக்கின்றன. […]

Read more

புதிய கல்விக் கொள்கை 2020- வரமா சாபமா?

புதிய கல்விக் கொள்கை 2020- வரமா சாபமா? ,  ஆர்.ரங்கராஜ் பாண்டே, கிழக்கு பதிப்பகம், பக்.168, விலை  ரூ.175 . மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரிடம் இருந்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் கூறப்படும் சூழலில், தமிழகத்தின் மொழி அரசியல், நீட் தற்கொலை அரசியல் என பல்வேறு விஷயங்களை இந்நூலில் பேசியிருக்கிறார் நூலாசிரியர் . தனது விருப்பத்துக்கு ஏற்ப உயர் கல்வியை படிக்கும் சுதந்திரம் புதிய கல்விக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ளது. இது, கல்லூரிப் படிப்பில் மிகப்பெரிய புரட்சியை […]

Read more

நான் கண்ட போராளிகள் – களமும் வாழ்வும்

நான் கண்ட போராளிகள் – களமும் வாழ்வும்,  ஓவியர் புகழேந்தி,  தோழமை வெளியீடு,  பக்.456, விலை ரூ.480. தமிழீழம் நான் கண்டதும் – என்னைக் கண்டதும்; தலைவர் பிரபாகரன் – பன்முக ஆளுமை என்ற இரு நூல்களுக்குப் பிறகு ஓவியர் புகழேந்தியின் மூன்றாவது நூல் இது. விடுதலைப் புலிகளின் வசம் தமிழீழம் இருந்த காலத்தில் இரு தடவைகள் பயணம் மேற்கொண்டவர் ஓவியர் புகழேந்தி. அவரின் இரண்டாவது பயணத்தில் 40 நாள்கள் அங்கு தங்கியிருக்கிறார். இந்த தடவை மனைவி குழந்தைகளுடன் சென்றதால், தான் சந்தித்த ஆளுமைகள் […]

Read more

நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை,  இறையன்பு, கற்பகம் புத்தகாலயம்,  பக்.232, விலை ரூ.200. நூலாசிரியர் இந்திய ஆட்சிப்பணியின்போது தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டு 10 தலைப்புகளில் கட்டுரைகளாக வடித்து நூலாகத் தந்துள்ளார். பெருக்கெடுக்கும் வார்த்தை பிரவாகம், பள்ளி மாணவர்களும் புரிந்து கொள்ளும் அளவு எளிமையான நடை நம்மைக் கவர்கிறது. பணியில் சிறக்க' என்ற தலைப்பில், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் பற்றிய ஒப்பீடு, நிறுவனத்தின் வளர்ச்சி, நிறுவனம் சிறக்க ஊழியர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள், கடும் உழைப்புத் திறன் ஆகியவை குறித்து விளக்கமாகத் தெரிவித்துள்ளார். […]

Read more

தலைநகர் தில்லி தமிழும் தமிழரும்

தலைநகர் தில்லி தமிழும் தமிழரும், ச.சீனிவாசன்;  காவ்யா, பக்.586; விலை ரூ.600.  இந்திய நகரங்களுக்குள் நீண்ட வாழ்வியலும், பாரம்பரியமும் உள்ள நகரம் தில்லி. தில்லி தமிழர்கள் பலரும் அவரவர்கள் பார்வையில் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தில்லி தமிழர்கள் பற்றிய விசாலமான பார்வையையும் இந்த நூல் தருகிறது. தமிழர்கள் இடம்பெயர்ந்தாலும், புலம்பெயர்ந்தாலும் தங்களது கலை, கலாசாரம் ஆகியவற்றைப் பேணுவதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதை கட்டுரைகள் எடுத்துச் சொல்லுகின்றன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தமிழர்கள் தில்லிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தங்களது மொழி, கலாசாரம், இலக்கியம் போன்றவற்றை […]

Read more

நல்லுறவே நம் உயர்வு

நல்லுறவே நம் உயர்வு, லேனா தமிழ்வாணன்; மணிமேகலைப் பிரசுரம், பக்.188;  விலை ரூ.160; நம் வாழ்வின் பார்வைகள் மாறினால், நம் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டால் ஏற்படக் கூடிய நன்மைகள் எவை என்பதை பல்வேறு வெற்றிக் கதைகள், நிகழ்ச்சிகள், சுவாரஸ்யமான தகவல்களுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர். மனிதர்கள், தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட சறுக்கல்களுக்கும், சங்கடங்களுக்கும் பிரச்னைகளுக்குமான காரணங்களைப் பிறர் மீது சுமத்துவதைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், ‘ மற்றவர்கள் மாற வேண்டும்; என்னைச் சுற்றியிருப்பவர்கள் திருந்த வேண்டும்; பிறகு என்னை மாற்றிக் கொள்கிறேன் என எண்ணும் மனப்போக்கு நமக்குள் […]

Read more

இந்திய பாரம்பரியத்தில் சுவை

இந்திய பாரம்பரியத்தில் சுவை,  லட்சுமி ராமசுவாமி; ஸ்ரீமுத்ராலயா,  பக்.266;  விலைரூ.500; சாத்தனார் எழுதிய சங்க கால நூலான கூத்த நூல், நாட்டியத்தின் உட்கூறாக அமைந்த ‘சுவை ‘ பற்றி விரிவாக விளக்குகிறது. இந்நூலுக்கு கவிஞர் ச.து.சு.யோகியார் சிறப்பான விளக்கவுரை எழுதியுள்ளார். அவரின் விளக்கவுரையோடு வடமொழியில் ’ரஸம்’ குறித்து எழுதப்பட்ட பல நூல்களையும் ஒப்பாய்வு செய்து எழுதப்பட்டுள்ளது இந்நூல். தொல்காப்பியத்தில், சுவை எனப்படும் மெய்ப்பாடு எட்டு வகை என்று குறிப்பிட்டிருந்தாலும் பின்னர் வந்த இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்கள் துணைப்பட்டியலில் ஒன்பதாவது சுவையையும் குறிப்பிட்டிருப்பதைச் சிறப்பாக ஆராய்ந்துள்ளார் […]

Read more
1 23 24 25 26 27 180